ADS 468x60

05 December 2019

பொருளாதார முன்னகர்வில் புதிய அரசிக்கு இருக்கவேண்டிய கருசனை என்ன?

புதிய ஜனாதிபதியும் அமைச்சரவையும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் , ஏனெனில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் வரையில் அவர்கள் ஒரு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது . அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, இலங்கை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO (ச.தொ.அ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, வளர்ச்சியடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறிய பொருளாதார அலகுகளால் வழங்கப்படுகிறது, அதாவது கொள்கை வகுப்பாளர்கள் இந்த அலகுகளை பொருளாதாரத்தின் மையப் பகுதியாகவும், சமூக மேம்பாட்டு உத்திகளாகவும் கருத வேண்டும்.


குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு இத்தகைய அணுகுமுறை அவசியம், அங்கு பெரும்பான்மையானவர்கள் சிறிய பொருளாதார முயற்சியாண்மைகளிலே வேலை செய்கின்றனர். கூடுதலாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் மூன்று SDG (எஸ்.டி.ஜி) வேலை வாய்ப்புகளை சார்ந்துள்ளது - வறுமையை ஒழித்தல் SDG (எஸ்.டி.ஜி 1), முழு மற்றும் உற்பத்தி வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் ஒழுக்கமான வேலை (எஸ்.டி.ஜி 8), மற்றும் சமத்துவமின்மையைக் குறைத்தல் SDG (எஸ்.டி.ஜி 10).

சர்வதேச தொழிலாளர் அமைப்பு 99 நாடுகளின் தரவைப் பயன்படுத்தி, நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நிலை மற்றும் சுயதொழில் மற்றும் சிறு நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பங்கு ஆகியவற்றுக்கு இடையே எதிர்மறையான தொடர்பு இருப்பதாக முடிவுக்கு வந்தது. அதாவது மிகக் குறைந்த வருமான மட்டக் குழுக்களைக் கொண்ட நாடுகளில், கிட்டத்தட்ட 100மூ சுயதொழில் வேலைவாய்ப்பைக் கொண்டுள்ள நாடுகளாகும்.

தெற்காசியாவில் தான் (66%) சுயதொழில் மிக அதிக சதவீதத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து துணை-சஹாரா ஆபிரிக்கா (50ம%), மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா (44%) ஆகியவை உள்ளன. இந்தியாவில் சுமார் 85% தொழிலாளர்கள் சுயதொழில் மற்றும் சிறுமுயற்சியாண்மையில் ஈடுபடுபவர்களாக உள்ளனர் அல்லது சாதாரண வேலை செய்கிறவர்களாக காணப்படுவதுடன் , பங்களாதேஷில் விவசாயம் சாரா தொழிலாளர்களில் 73% சுயதொழில் செய்பவர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இதேபோன்ற நிலைமை உள்ளது , அதாவது 24% தொழிலாளர்கள் குறைந்த உற்பத்தி தரும் விவசாயத் துறையில் பணிபுரிகின்றனர், அதில் பெரும்பகுதி முறைசாரா துறையில் உள்ளது . இது அதிக உற்பத்தி பிரிவுகளான தொழில்கள் மற்றும் சேவைகள் பிரிவுகளில் தொழில் சவால்களுக்கு வழிவகுத்தது.

ஆனால், அபிவிருத்தி அடைந்த உலகம் வேறுபட்டது . முறைசார் துறையில் விவசாயத்துறை வேலைவாய்ப்பில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா அதிக பங்கைக் கொண்டுள்ளது , இது 30% க்கும் அதிகமாகும். கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் இது 20மூ க்கும் அதிகமாக உள்ளது என்று அறிக்கையை எடுத்துக்காட்டுகிறது. துணை-சஹாரா ஆப்பிரிக்காவிலும் தெற்காசியாவிலும், சுய வேலைவாய்ப்பு மட்டுமே மொத்த விவசாய வேலைவாய்ப்புகளில் பாதிக்கும் மேலானது.

நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் வேலை வாய்ப்புகளின் தன்மைக்கும் இடையே நேர்மாறான விகிதாசார உறவையும் இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிக வருமானம் கொண்ட நாடுகளில் சுயதொழில் செய்பவர்களின் பங்கு குறை வருமான நாடுகளில் உள்ள பங்கின் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும்;. இதேபோல், சிறு வியாபாரம் செய்கின்றவர்களின் பங்களிப்பு உயர்-நடுத்தர மற்றும் உயர் வருமான நாடுகளை விட குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமான நாடுகளிலும் அதிகம்.

ஆனால், சிறு முயற்சியாண்மையில் ஈடுபடும் (10-49 வயதுக்குட்பட்ட ஊழியர்கள்களின் வேலைவாய்ப்பு வளர்சியடைந்த நாடுகளில் அதிகமாக உள்ளது. சிறு முயற்சியாண்மையில் வேலைவாய்ப்பு குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 3மூ மட்டுமே, அதே நேரத்தில் அதிக வருமானம் பெறும் நாடுகளில் இது 25மூ வரை செல்கிறது. நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பங்கு நாட்டின் வருமான மட்டத்துடன் அதிகரிக்கிறது.

இந்த போக்கை இலங்கையிலும் காணக்கூடியதாக உள்ளது. 85% க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மை நிறுவனங்களாக (SME கள்) வகைப்படுத்தியுள்ளன. இது அதிகமாக SME களை எவ்வாறு அதிகரிப்பது என்பதைப் புரிந்துகொள்வதற்கான சவாலையும் உருவாக்கியுள்ளது.

குறிப்பாக சேவைத் துறையில் சிறந்த ஊதியம் தரும் வேலைகளைப் பெறுவதற்கே இங்குள்ள ஊழியர்கள் விருப்பமாக உள்ளனர். இவை பொதுத்துறை வேலைவாய்ப்பு மீதான அதிக ஈர்ப்பினைக் காட்டி நிற்கின்றது. அதுபோல் இலங்கை தொழிலாளர்கள் சமூக அந்தஸ்த்து மற்றும் பாதுகாப்பு மற்றும் நிலைத்திருக்கக் கூடிய வேலைகளை விரும்புவது தெளிவாகத் தெரிகின்றது . இது கொள்கை வகுப்பாளர்களை சிறந்த ஊதியம் தரும் வேலைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான புதிய சிக்கலுக்குள் தள்ளுவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு பற்றியும் கவனத்தில் கொள்ள வைக்கிறது . உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்ற அதேவேளை அதனுடன் போட்டிபோட்டு குறிப்பிட்ட அளவு பொருளாதார வளர்ச்சியை அடைய விரும்பின் இலங்கையும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக திறனை இளைஞர் மத்தியில் கூட்டிக்கொள்ளும் செயற்திட்டங்களை துரிதமாக உலகலாவிய போட்டித்தன்மையினை கருத்தில் கொண்டு முன்னெடுக்கவேண்டும். இல்லாவிடின் பாரிய வேலையில்லா சவாலை எதிர்கொள்ளும் தர்பாக்கிய நிலை அதிகரிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இவை அதிகமாக தமிழ்ப் பிரதேசங்களில் வலுவடைந்து வருவது எமக்கு தலைமைத்துவம் இல்லாத ஒரு துரதிஷ்டத்தினைக் காட்டுகின்றது. படித்த இளைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் எமது சமுகத்தின் சிவில் அமைப்பினர் இந்த மோசமான நிலையை கருத்தில் கொண்டு எமக்குள்ள வளங்களைப் பயன்படுத்தி நாம் முன்னே செல்லும் மார்க்கத்தினை வகுத்துக்கொள்ளவேண்டும்.

0 comments:

Post a Comment