ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!
-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
எனும் நல்வாக்கியத்துடன், இன்றய நாளில் நாம் பல விடயங்களுக்காக ஒன்றுகூடவேண்டியிருக்கிறது.
நமது வாழ்க்கை வட்டத்தில் ஒன்று சேர்ந்து பல்கலைக்கழகத்தில் கற்று இன்று ஒன்றரை தசாப்தம் கடந்து பல அனுபவம், கல்வி, திறன் மேம்பாடுடையவர்களாக ஒன்றுகூடியிருக்கின்றோம். இந்த ஒன்றுகூடல் எம்மை பனியிலும், வெயிலிலும், காட்டிலும், மேட்டிலும் கஷ்ட்டப்பட்டு உழைத்த வரிப்பணத்தில் நாம் இன்று இலவசமாகப் பயின்றவர்கள். இன்று நாம் ஊதியத்துக்காக மக்கள் பணியென செய்யும் வேலை தவிர, எமது சமுகத்துக்கு பிரதியுபகாரம் இன்றி எதை நாம் செய்துள்ளோம்? எனச் சிந்திக்க வேண்டிய உன்னத தருணத்தில் சிந்திக்கத் தூண்டியுள்ளது.
"பூவோடு கூடிய நாரும் மணக்கும்" என்பர். ஆனால் எம் பல்கலைக்கழகத்தினை சுற்றியுள்ள அனைத்துத் தமிழ்க் கிராமங்களும் தக்க கல்வி, தொழில், வருமானம் இன்றி இன்னொருவரில் தங்கி வாழுகின்ற பரிதாபகரமான ஒரு நலிவுற்ற சமுகத்தை பார்த்துக்கொண்டிருப்பது, என்னைப் பொறுத்தமட்டில் வெட்கி தலைகுனியவேண்டிய ஒன்றாகும். நாம் தலை நிமிர வேண்டுமானால் முதலில் ஒன்றிணைந்து பல காரியங்களை நமது மக்களின் எல்லா வகையிலுமான முன்னேற்றத்துக்கு செய்துதவவேண்டும்.
ஒரு மாணவனுக்குக் கல்வி அவன் வாழ்வுக்குத் தேவையான பொருளை நேர்மையான முறையில் ஈட்ட உதவுவதோடு பிறரும் நல்வாழ்வு வாழ உதவவும், தொடர்ந்து மனிதகுலம் வாழ உலக வளங்களை அழிக்காமல் விட்டு வைக்க உதவவும் வேண்டும். இவ்வாறில்லாமல் தான், தன்குடும்பம் என அளவுக்கு மேல் சுயநலத்துடன் வாழ்வதற்காக மட்டும் தாம் இலவசமாகப் பெற்ற கல்வியை பயன்படுத்தும் சுயநலவாதிகளையே இன்று அதிகமாகப் பார்கின்றோம். இப்படிப்பட்டவர்கள்தான் பெற்றோர்களையே கடைசி காலத்தில் கவனிக்காத, முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிற மனிதர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
வாழ்க்கை என்பது "இறைவனால் எழுதப்பட்ட கவிதை. அதற்கு ஓர் நல்ல அர்த்தத்தினை ஏற்படுத்திக்கொண்டு ஆனந்தமாக வாழுங்கள். விபரீதமாக அர்த்தம் சொல்லி விரக்தியாகி ஸ்தம்பித்து விடாதீர்கள். சங்கீதம் பாடிச் செல்லும் ஓடையைப்போல உங்கள் வாழ்வும் எப்போதும் உயிர்ப்புடன் இயக்கம் உள்ளதாக இருக்கட்டும்." ஆக வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் வாழப் பழகிக்கொள்ளுங்கள். அது பிறருக்கும் உன்னால் கிடைக்கும் சிறிய பயனில்தான் தங்கியுள்ளது. என்பதனையே எமது ஒன்றுகூடல் எமக்கு உணர்தியது.
இந்த ஒன்றுகூடலில் ஒற்றை ரூபாயைக்கூட ஊதாரித்தனமாகச் செலவிடவில்லை, மதுவுக்கு பங்குவைக்கவில்லை. அது மிக்க மகிழ்சியாக இருந்தது. குறிப்பாக இவ்வொன்றுகூடலுக்குப் பின்னால் நிதியுதவி, ஆலோசனைகள், சதுர உதவி மற்றும் எல்லா வகையான உதவிகளையும் செய்துகந்த நல்லுள்ளங்கள் பாராட்டி நன்றிகூரப்படவேண்டியவர்கள்.
இன்னும் பல பயணுள்ள ஒன்றுகூடல்களை எமது சமுகத்துக்காக முன்னெடுக்க இத்தருணத்தினை தவறவிட்ட கூட்டாளிமாரிடம் எதிர்பார்க்கிறோம்..
நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில்மேல் பூனை
இன்று என்பது உன்கை வீணை
மீட்டு மீட்டு ... பாட்டு... பாட்டு
0 comments:
Post a Comment