ADS 468x60

22 December 2019

காலநிலைக்கு முகம்கொடுக்கும் அபிவிருத்தி இல்லாமையே அழிவுக்குக் காரணம்.

இந்நாட்களில் பெய்துவரும் அடைமழையானது மக்களுக்கும், பயணிகளுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் திடீரென பெய்யும் இம்மழையினால் வீதிகளில் வெள்ளம் ஏற்படுவதோடு நீண்ட நேர போக்குவரத்து இடையூறையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தடைப்பட்ட வீதிகளானது பயணிகளுக்கு தங்களுடைய வீடுகளுக்கான வழியை கண்டுபிடிப்பதே சாத்தியமற்றதாக மாற்றுகிறது. இலங்கையின் மழைவீழ்ச்சி ஒழுங்கானது மாற்றமடைவதோடு காலநிலையால் பாதிப்படையும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் கருதப்பட்டு வருகின்றமயால் இன்று நாம் காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உள்கட்டமைப்பு அமைப்பு பற்றிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்ற அதேவேளை அதன் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு நிச்சயமற்ற நிலையில் இல்லாமல் இருக்கின்றன. மேலும் அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவம் மீது அதிக கவனம் செலுத்திவருகின்றது. இருந்தும் காலநிலை மாற்றமானது இலங்கையில் குறைந்த அளவில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளதனால் காலநிலை மாற்றத்தினை அனுசரித்துச் செல்லக்கூடிய உட்கட்டமைப்பு வசதி போன்ற நீண்டகால கொள்கைகளை அது கோருகின்றது.

இன்று பார்ப்போமானால் காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான அணுகுமுறை சில நேரங்களில் மிகவும் சிக்கலானது. இதனால் காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான பிற அம்சங்களிலிருந்து அனர்த்த முகாமைத்துவத்தை பிரித்துப் பார்க்கவேண்டியுள்ளது. அப்படி அமையப்பெறின் இது சிக்கலைக் குறைப்பதோடு பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழிவகுக்கின்றது.

காலநிலை மறுசீரமைப்பானது பல்வேறு காரணங்களுக்காக கட்டியெழுப்பப்பட வேண்டியது. ஒருபுறம் இலங்கை இன்றளவு அதிகளவான கடனுக்கு உள்ளாகிய சூழலில் இருப்பதனால் கட்டிட அமைப்புக்களை மீளக்கட்டவோ மாற்றவோ முடியாது, மறுபுறம் வரையறுக்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு அவற்றை மீண்டும் மீண்டும் புணரமைக்கவும் முடியாது உள்ளது.

திட்டமிடப்படாத அபிவிருத்தி வேலைகளினால் வருடாவருடம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவது அரசாங்கத்தின் நிதியில் தொடர்சியான வீழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.
காலநிலை மாற்றமானது குறிப்பாக நகரங்களில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நிலையை நாம் அவதானித்து வருகின்றோம்.

இனிவரும் தசாப்தங்களில் காலநிலை மீள்சீரமைப்பானது நகரமயமாக்கல் கொள்கைகளில் முக்கியமாக சேர்க்கப்படவேண்டியதொன்றாகவும் நகரங்களுக்கு இது ஒரு சிறந்த முதலீடாகவும் காணப்படும். கொழும்பு மற்றும் பிற தெற்காசிய நாடுகளின் தலைநகரங்கள் இதற்கு உதாரணமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட அம்சங்களில் ஒன்றாக ஒரு நகரத்தின் வாழ்வாதாரம் தீர்மானிக்கப்படுகிறது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்குமா? போக்குவரத்து நெரிசல் எவ்வளவு மோசமாக இருக்கின்றது? வீடுகளால் இயற்கை பேரழிவுகளைத் தாங்க முடியுமா? இந்த இடர்களின் போதும், மக்களுக்கு மின்சாரம், சுத்தமான நீர் மற்றும் காற்று கிடைக்குமா? குப்பை மற்றும் கழிவுநீர் பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்பட உள்ளன? இத்தகைய கேள்விகளுக்கான பதில்கள் ஒரு நாடு நிலையான வளர்ச்சியை அடைவதில் வெற்றிகரமாக உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்துவிடுகின்றன.

பல நகரங்கள் ஏற்கனவே காலநிலை மாற்றத்துடன் கூடிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலான கட்ட்டமைப்புக்களை உருவாக்கத் தொடங்கியுள்ள நிலையில், அவர்கள் கடைப்பிடிக்கும் உத்திகள் பெரும்பாலும் ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான இடங்களாக அவற்றில் வாழவும் மற்றும் வணிகம் செய்யவும் ஏற்றதுமான அம்சமாக அமைக்கின்றன. இந்த வினைத்திறனானது ஒரு நகரத்தின் வர்த்தகம் மற்றும் புதிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதற்கான விருப்பை காட்டுகின்றது.

ஆனால் இது மூலதனம் மற்றும் முதலீட்டைப் பற்றிய வேறுபட்ட சிந்தனையையும் கோருகிறது. உள்கட்டமைப்பு திட்டங்களானது இதற்கான செலவை கருத்தில் கொண்டும் கட்டமைக்கப்பட வேண்டும், மேலும் வங்கிகள் மாநிலங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் வழங்கும்போது இதில் ஒரு நேர்மறையான கவனம் கொள்ளப்பட வேண்டும் .

இலங்கை ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க சக்திவளத்தை நோக்கி முன்னேற முயற்சிப்பதில் ஒரு படி வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் அதன் வளர்ச்சிக் கொள்கையின் பிற அம்சங்களையும் சேர்க்க இந்த முயற்சி விரிவாக்கப்பட வேண்டும். உலகிற்குத் தேவையான உள்கட்டமைப்பில் 60 வீதமம் இன்னும் கட்டப்படவில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் பொருள் முந்தைய கொள்கை வகுப்பாளர்கள் காலநிலை பின்னடைவில் கவனம் செலுத்துகிறார்கள், இதனால்தான் வளர்சியடைந்த அவர்களின் நாடுகளில் இருந்து சிறப்பாக இருக்கும்.

திட்டமிடப்படாத அபிவிருத்திகளினால் மாத்திரமல்ல பல சட்டத்துக்கு மாறான இயற்கை வளங்களை சுரண்டல், மற்றும் சட்டரீதியற்ற கட்டிடங்களை இயற்கைச் சமநிலைக்கு மாறாக தமது இலாப நோக்கம் கருதி உருவாக்குதல், காடழிப்பு, புதிய விவசாய நிலம் உருவாக்குதல் போன்ற பல காரணங்களால் நாம் மாத்திரமல்ல நமது குழந்தைகளும் இயற்கைச் சீற்றத்துக்குள் இடர்படும் ஒரு துர்பாக்கிய நிலைக்குள் அகப்பட்டு வருவதனை நாம் இன்று நிஜத்தில் கண்டுகொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் நம்மையும் நமது எதிர்கால சந்ததியினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், பதிதாக உருவாக்கப்படாவிடினும் இருக்கின்ற சட்டதிட்டங்களை சரியாகக் கடைப்பிடித்தாலே பல பாதுகாப்பான மாற்றங்களைக் காணலாம் என்பதே எனது கருத்தாகும்.

0 comments:

Post a Comment