ஆரம்ப காலங்களில் இலங்கையில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள நாட்டு வைத்தியர்களை நம்பியே எந்த விதமான மருத்துவ சிகிச்சைக்காகவும் சென்றனர். அன்றய நாட்டு வைத்தியரிடம் இன்றய ஆங்கில வைத்தியர்கள் வைத்திருப்பதுபோல் விதவிதமான மருத்துவ உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள் இருந்திருக்கவில்லை. அவர் உடலின் உள் பிரச்சினைகளை அவரவர் நாடிபிடித்து அவரை தொட்டுப்பார்த்து ஏனைய அவையவங்களை கவனிப்பதன் மூலம் அவரது நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டு சிகிச்சையை தீர்மானிப்பார்.
26 May 2020
17 May 2020
ஏதும் இருக்குதா இழந்தோர்கு பதிலுரை
முடிந்தது எங்கள் தலையில் போர்
முறிந்தது எங்கள் நிலத்தில் ஏர்
மடிந்தது கருகி ஆயிரம் பேர்
விடிந்தது குருதி மழையில் ஊர்
முறிந்தது எங்கள் நிலத்தில் ஏர்
மடிந்தது கருகி ஆயிரம் பேர்
விடிந்தது குருதி மழையில் ஊர்
08 May 2020
கோவிட்-19 தொற்றும் அது மனநலம் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கமும்.
![]() |
Pic by Shehan Gunasekara |
இவ்வாறு அச்சத்தை மாத்திரம் ஏற்படுத்தாமல், பல கோடி மக்களை இயங்கவிடாமல் பல மாசங்களாக வீட்டினுள் அடைத்து வைத்திருக்கும் இந்த ஆபத்தான நோயில் சிக்குண்ட பலர் மானசீக அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றமை நாம் அறிந்ததே.
இந்த நிலையில் பலர் தங்களது தொழில்களை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அன்றாட வருமானம் இழந்த நிலையில் அவர்களது நுகர்வு, ஏனைய சக்திகள் பின்னடைந்த நிலையிலும் கண்ணுக்கு முன்னே தத்தமது பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள் அல்லல்படும் போது அவற்றை நேரே பார்த்து மனமுறிவுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பலர் தங்களது தொழில்களை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அன்றாட வருமானம் இழந்த நிலையில் அவர்களது நுகர்வு, ஏனைய சக்திகள் பின்னடைந்த நிலையிலும் கண்ணுக்கு முன்னே தத்தமது பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள் அல்லல்படும் போது அவற்றை நேரே பார்த்து மனமுறிவுக்கு உள்ளாகி வருகின்றனர்.
06 May 2020
கிராமமட்டத்திலான மக்களை மையப்படுத்திய பல்தேவைக் கம்பனிகளின் இன்றய தேவை.

விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் உற்பத்தி செய்யும் விவசாயப்; பொருட்களை கொள்வனவு செய்யவும்;, சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் ஒரு பொறிமுறையை இயக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அண்மையில் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில்; மாவட்ட அளவில் உள்நாட்டு தொழில்கள் மற்றும் பிற உற்பத்தித் துறைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
05 May 2020
சுதேசிய வழிமுறைகளினூடான தன்னிறைவை முதன்மைப்படுத்தும் கொவிட்-19
இன்று கொவிட்- 19 வைரஸ் அனைத்து நாடுகளையும், முக்கியமாக விவசாயம் மற்றும் மருத்துவ அறிவியலில் அதன் தன்னிறைவை ஆய்வு செய்ய அழைத்து வந்துள்ளது. இந்த இரண்டு துறைகளும் நமது பண்டைய பாரம்பரியத்தில் கைகோர்த்துக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது. இவை நமது மக்களின் நல்வாழ்வோடு மட்டுமல்லாமல் மண்ணின் நல்வாழ்வையும் அதனோடு தொடர்புடைய மரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பினையும் தொடர்புபடுத்தின.