ADS 468x60

17 May 2020

ஏதும் இருக்குதா இழந்தோர்கு பதிலுரை

முடிந்தது எங்கள் தலையில் போர்
முறிந்தது எங்கள் நிலத்தில் ஏர்
மடிந்தது கருகி ஆயிரம் பேர்
விடிந்தது குருதி மழையில் ஊர்


போதும் பெரியோரே உங்களின் பொய்யுரை
ஏதும் இருக்குதா இழந்தோர்கு பதிலுரை
மோதும் பகைவராய் இன்னும் களத்திலே
ஊதும் குழல்களாய் நீங்கள் புலத்திலே

இழந்தவைக்காய் இழந்தவர்கள் இழந்தவைகள் கோடி
இருப்பவர்கள் இருப்பதற்காய் இருப்பவைதான் என்ன
முடிந்தவைகள் முடிந்தவையாய் முடித்துவைத்து முன்னே
முன்நேவா முன்னாலே முன்னேற இன்றே!

0 comments:

Post a Comment