ADS 468x60

08 May 2020

கோவிட்-19 தொற்றும் அது மனநலம் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கமும்.

Pic by Shehan Gunasekara
மிகப் பயங்கரமாக உருவெடுத்திருக்கும் முன்னெப்பொழுதும் அறியாத ஒரு உலகலாவிய தொற்றுநோயாக கோவிட்-19 அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கின்றது. இந்த நோய் பற்றி அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கிடையாது என நினைக்கின்றேன். 

இவ்வாறு அச்சத்தை மாத்திரம் ஏற்படுத்தாமல், பல கோடி மக்களை இயங்கவிடாமல் பல மாசங்களாக வீட்டினுள் அடைத்து வைத்திருக்கும் இந்த ஆபத்தான நோயில் சிக்குண்ட பலர் மானசீக அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றமை நாம் அறிந்ததே.

இந்த நிலையில் பலர் தங்களது தொழில்களை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அன்றாட வருமானம் இழந்த நிலையில் அவர்களது நுகர்வு, ஏனைய சக்திகள் பின்னடைந்த நிலையிலும் கண்ணுக்கு முன்னே தத்தமது பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள் அல்லல்படும் போது அவற்றை நேரே பார்த்து மனமுறிவுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இவற்றுடன் வைரஸ் தொற்று பரவல் பற்றியும், அதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அனைவரும் அறிந்ததே. இந்த ஆக்கத்தினை எழுதும்வரைக்கும் இந்த சமயத்தில் கிட்டத்திட்ட 823; பேருக்கு தொற்று பரவி 09 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மேலும் தொற்று விரைவாக பரவாமல் இருக்க அரசாங்கமும் ஒவ்வொரு தனி நபரும் போதிய பாதுகப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

சமூக விலகல், பிரயாணத்தடை, ஊரடங்கு ஆகியவற்றிற்கு நடுவே, யாராலும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனநலம் குறித்து விவாதிக்கப்படவில்லை, இது போன்ற அசாதாரண சூழலில் பொது சுகாதாரத்தில் ஒரு முக்கிய சவாலாக இது உள்ளது. இச்சமயத்தில் ஆரோக்கியமான மனநிலையை பேணுவதும், குறிப்பாக மனநல பாதிக்கக்கூடியவர்களுக்கு உதவுவதும் முக்கியம்.

வைத்தியர்கள் சொல்லுவதற்கமைவாக ஒரு வகையில் பார்த்தால், இது மற்றொரு வைரஸ் காய்ச்சல் தான். ஆகவே, மற்ற வைரஸ் காய்ச்சல் போலத்தான் அறிகுறிகளை காட்டுகிறது. ஆனால் தற்போதைய சூழலில், உலகில் பல தேசங்களிலும் வேகமாகப் பரவுதல், ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் பிற வழிகளில் பரப்பப்படும் தகவலால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல தரப்பட்ட தகவல்கள் ஒரு வித பீதியை கிளப்புவதோடு, அதன் நம்பகத்தன்மையும் கேள்விகுள்ளாக்குகிறது. ஆதலால், மக்கள் வழக்கத்தை விட அதிக ஆர்வத்துடன் இந்த செய்திகளை பார்க்கின்றனர். 

இந்தப் பீதியாலும், நாளுக்கு நாள் வரும் பாதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும், பிறநாடுகளில் இறந்தவர்களின் நிலமையை தொலைக்காட்சி வழியாக பரப்புரை செய்வதனாலும் மக்கள் அவற்றிற்கு அஞ்சி மன அமைதியின்றி கவலையில் மன உழைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

WHO இன் அறிக்கை

இந்த கோவிட்-19 தொற்று என்றாலே வீட்டில் இருத்தல், தனிமையில் இருத்தல் அத்துடன் வேறு யாருடனும் சமுக உறவைப் பேணாமல் தமக்கு தாமே நண்பர்களாகவும் பகைவர்களாகவும் வாழ்ந்துகொள்ளுதல். இந்த வாழ்க்கை முறையை பொதுவாழ்வில் யாரும் கதையிலும் படித்தது கிடையாது. ஆனால் அதுதான் இன்று நிஜமாகி விட்டது.

பொதுவாக மனநலம் என்ற பதம், இன்றுவரை முக்கிய உளவியல் தாக்கமாக,  மன அழுத்தம் அல்லது பதட்டத்தின் உயர்ந்த விகிதங்கள் ஆகும்.

ஆனால் இத்தொற்றின் புதிய நடவடிக்கைகள் மற்றும் தாக்கங்களாக - குறிப்பாக தனிமையாய் இருத்தல் அவர்களது வழக்கமான செயல்பாடுகள், நடைமுறைகள் அல்லது வாழ்வாதாரங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அதன் விளைவுகளாக- தனிமை, மனச்சோர்வு, தீங்கு விளைவிக்கும் மதுபானங்களை அருந்துதல், மற்றும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சுய-தீங்கு அல்லது தற்கொலை நடத்தை ஆகியவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் இருந்து வேலையும் அழுத்தமும்.
'நான் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன்.' என பலர் தற்போது கூற தொடங்கியுள்ளனர், 'பங்குச்சந்தை வீழ்ச்சி' 'அடுத்து என்ன என்ற எண்ணத்துடன் வீட்டிலிருந்த படியே பணி', 'குழந்தைகள் வீட்டில் உள்ளனர், அவர்களுக்கும் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.' என பல எண்ணங்கள். இத்தைகைய சூழலை எப்படி சமாளிப்பது என பலர் குழம்பத் துவங்கியுள்ளனர்?

உண்மையில் இது போன்ற எண்ணங்கள் தோன்றுவது சாதாரணம் தான். இந்த அசாதரண சூழல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பார்ப்போம்.

பலருக்கு, வீடு தான் இப்போது வேலையிடம். வேலை மற்றும் வீட்டில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க பலருக்கும் சிரமமாக உள்ளது.
உதாரணமாக, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது, வீட்டில் உள்ளவர்களிடமிருந்து குறுக்கீடு மற்றும் தொந்தரவு இல்லாமல் பணி செய்வது: குழந்தைகள் செய்வதறியாது அங்குமிங்கும் ஒடுவதும் சத்தம் போடுவதும் வழக்கமானது. மறுபுறம் தொலைக்காட்சி ஓடிகொண்டிருக்கும். இது போன்ற சமயத்தில் குழப்பங்கள் எழத்தான் செய்யும். 

பெண்கள் (அதுவும் வேலை பார்ப்போர்) பல வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கும் – அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தொந்தரவு இல்லாமல், வீட்டை பற்றிய சிந்தனை குறைவாகவும் இருக்கும். தற்சமயம் வீட்டிலிருந்தே பணி புரிவதால் கூடுதல் அழுத்தத்தை பெண்களுக்கு அளிக்கும்.

வயோதிபர்கள் சிறுவர்களுக்கான மன அழுத்தம்
பகல் நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஒன்றாக இல்லாத சூழலில், தற்போது அனைவரும் ஒரே இடத்தில் உள்ளனர். இதனால் முன்பை விட  மற்றவர்களின் தனிப்பட்ட நேரத்தில், விஷயத்தில் கூடுதலாக தலையீடு எழும்.

கூடியிருக்கும் நேரம் அதிகரித்துள்ளதால் இந்த சூழல் தானாக எழும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணமாக, வீட்டிலுள்ள ஆண் உணவு, தன் தேவைகள் கடந்து இது நாள் வரையில் வீட்டில் நடக்கும் நுணுக்கமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தாமால் தற்போது குறை கண்டுபிடிக்கும் போது அது நெருக்கடியை உண்டாக்கலாம்.

இதே போல், முன்பைப்போல் முதியவர்கள் காலார நடக்க தற்போது காட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அவர்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்வது தடைப்பட்டுள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் எண்ணங்களை முன்பு சுதந்திரமாக நட்பு வட்டாரங்களுடன் பார்க்கில், அல்லது நடை பயிற்சியின் போது பகிர்ந்து வந்தனர். தற்போதுள்ள சூழல் அவர்களின் சுதந்திரத்தை பறித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும் கட்டாயமாக வீட்டினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் – இது அனைவருக்கும் புதிது, அதனால் இது சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம் உள்ளது.

சுகாதார ஊழியர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றனர்?

இந்தக்காலங்களில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஊழியர்கள் இராப்பகலாக முன்னணியில் இந்த நோயை எதிர்த்த போராடி வருகின்றனர். அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் என அனைத்து சுற்றத்தினரையும் தியாகம் செய்துகொண்டே இப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக மருத்துவ பணி என்பதே அழுத்தம் நிறைந்த பணி தான்! ஆவர்கள்தான்  சூழலுக்கு ஏற்றாற் போல் தேவையான நடவடிக்கைகளை அவர்களைப் பாதுகாக்க மேற்கொள்ளவேண்டியுள்ளது.

மருத்துவ துறையில் உள்ளவர்கள் அவர்களுக்கு விடுமுறை இல்லை, வீட்டிலிருந்தும் வேலை பார்க்க முடியாத நிலை. மருத்துவர்கள், தாதியர்கள்; மற்றும் இத்துறையில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் நிலையே வேறு. எது நடந்தாலும் நாங்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அவர்;களுக்கென்று  பொறுப்பு உள்ளது. மற்றவர்களுக்கு அவர்கள் மூலம் தொற்று ஏற்படாமல் இருக்கவும், அவர்களுக்கு தொற்று வராமல் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டும்.

அவர்களின்; தனிப்பட்ட வாழ்க்கையை விடுத்து பெரிய சமூக நன்மைக்காக இவர்கள் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர்.

இவர்கள் இப்பணியில் முழுதாக ஈடுபடும்போது, தனிப்பட்ட பிரச்சனை இருந்தால் நிச்சயம் சக மருத்தவரிடமோ, மன நல ஆலோசகரிடமோ பகிர்ந்து கொள்ளலாம். சக மருத்துவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பர். இது மிக முக்கியம் என நினைக்கிறேன். அதோடு, 'மருத்துவர்கள் முதலில் தங்களைத் தானே காத்துக் கொள்ளவேண்டும்' என்பதை பல மருத்துவர்கள் மறந்து விடுகின்றனர்.

மனநல பிரச்சினைகள் தொடர்பான குறியீடுகளும் பரிந்துரைகளும்

  • மனநல பாதிப்புக்குள்ளானோர் அன்றாட மன அழுத்த நிகழ்வுகளால் எளிதில் பாதிக்கப்படுவர். இத்தகைய அழுத்தங்களை சமாளிக்கும் திறன் பொதுவாக போதுமானதாக இருக்காது. பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொள்வதே முக்கியம்.
  • அறிகுறி மீண்டும் தென்படலாம். ஆதலால் விழிப்புடன் இருங்கள். மாற்றத்தை உணர்ந்தவுடன் வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவிக்கவும். 
  • மேலே சொன்னதை போல் அறிகுறி தென்பட்டால் உங்கள் மருத்துவர்,மனநல மருத்துவர், சிகிச்சையாளரிடம் உடனடியாக முறையிடவும், அவர்கள் பரிந்துரைக்கும்  சிகிச்சையை அவசியம் மேற்கொள்ள வேண்டும். 
  • பரிந்துரைத்தபடி மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். 
  • உங்களுக்கென்று ஒரு வழக்கமான செயலை கடைபிடியுங்கள்.
  • உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 
  • போதிய உணவு உட்கொள்ளுங்கள், நன்றாக தூங்குங்கள்.
  • உங்களையும் உங்கள் சுற்றுபுறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் விரும்பும் மற்றும் ஆறுதல் அளிக்ககூடிய பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.
  • போதிய உறக்கம் மற்றும் சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.
  • உடல் உழைப்பில் சிறிது நேரமாவது ஈடுபடுங்கள்.
  • கோட்பாடுகளை வகுத்து அதை கடைபிடியுங்கள், இந்த நேரத்தை உங்களின் உடல் நலத்தை பேண பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக வேலையாட்களுடன் மின்னஞ்சல், சமூக தளம், தொலைபேசி என தொடர்பில் இருங்கள்.
  • சமூக ஊடகத்தில் வரும் தேவையற்ற செய்திகளை தவிருங்கள்.
  • வீட்டிலிருந்து வேலை செய்கையில் அதற்கென்று நேரமும், இடமும் ஒதுக்குங்கள். போதிய இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இது தொற்று பரவாமல் இருக்க தற்காலிக ஏற்பாடு என நினைவில் கொள்ளுங்கள்.
  • உங்களின் சமூக விலகல் தொற்று பரவாமல் இருக்கு  உதவுகிறது என நினைவில் கொள்ளுங்கள்.


இவற்றுக்கு மேலாக, அதிகமாக யோசிக்கக் கூடாது – பயப்படக்கூடாது. உதாரணமாக, அனைவரும் முக கவசத்துடன் செல்ல வேண்டிய அவசியமில்லை (தொற்று இருதால் மட்டுமே இது அவசியம்). வதந்திகளை பரப்பாதீர்கள், தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளுங்கள்.
பிற நாடுகளை ஒப்பிடுகையில் (தகவல்களின் அடிப்படையில்), இலங்கை குடிமக்களை கொரோணா அச்சத்தில் இருந்து காப்பதிலும் நன்றாக செயல்படுகிறது. நம் மக்கள் தொகையை கணக்கிடுகையில், தொற்று மிகவும் குறைவாகவே கட்டுப்பாட்டில் உள்ளது.

இருந்தாலும் சிலரின் அஜாக்கிரதையால் தொற்று மேலும் பரவியுள்ளது. இது சோதனைகள் நிறைந்த காலம்,  அவர்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்க்காகவும் ஒவ்வொருவரும் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.

Footage

0 comments:

Post a Comment