ADS 468x60

07 March 2022

பாலின சமத்துவத்திலே நிலையான அபிவிருத்தி தங்கியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் பாலினப் பாகுபாடு பெரிதாக இருந்து வந்திருக்கவில்லை. இந்த நாட்டில் பெண்களை ஒரு மதிப்புக்குரியவர்களாகவே பார்த்துவந்துள்ளனர். இருப்பினும் அதையும்தாண்டி முன்னேறி வரும் நாட்டில் அவர்கள் பல இன்னல்களை உலகமயமாதல் சூழலில் அனுபவித்து வருகின்றனர். அது இந்த தொற்றுச் சூழலில் மிகவும் இறுக்கமடைந்தள்ளது. அந்தவகையில் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாலினங்களையும் பாதிக்கும் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், இது இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளது, இந்தநிலையில் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை உலகம் முழுவதும் 'நாளைய நிலையான அபிவிருத்திக்கான இன்றய பாலின சமத்துவம்' என்ற தொனிப்பொருளில் கொண்டாடிவருகின்றது.

இன்று உலகில் நிலவும் நெருக்கடிகள் உண்மையில் பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் பங்களிப்பைப் பற்றி முன்பை விட அதிகமாக பேசுவதற்கு ஒரு நல்ல காரணம், குறிப்பாக பொருளாதாரத்தில் இன்னும் கூடுதலான பங்களிப்பை வழங்குவதற்கான பாரிய ஆற்றலைக் கருத்தில் கொண்டு அவர்கள் வரலாறு முழுவதிலும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

பெண்களின் முழுத் திறனை அடையவும் அவர்களின் முழுப் பங்களிப்பைப் பெறவும் இலங்கை எவ்வாறு அதிகாரமளிக்க முடியும் என்பதைப் பற்றி விவாதிக்க, இலங்கை பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும், அவற்றில் பெரும்பாலானவை மனப்பான்மை மற்றும் கலாச்சார நெறிமுறைகளை மாற்றுகின்றன. அதே சமயம், பெண்களின் நலனை மறந்த துறைகள் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை நீண்ட காலமாக சட்டரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மறந்துவிட்ட ஒன்று முறைசாரா தொழில் துறையாகும். இன்று நாட்டிலும் வெளியிலும் வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரியும் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் தனிப்பட்ட, பொருளாதார மற்றும் வேலைப் பாதுகாப்பு குறித்து கடுமையான வருத்தம் அல்லது கவலைகள் உள்ளன. உள்ளூர் சூழலில் பெண் வீட்டுப் பணியாளர்கள் அவர்களது பொருளாதாரம், உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களால் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவர்களின் பாதுகாப்பு மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக அவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்ய பொருத்தமான வழிமுறை இருக்க வேண்டும். துரதிர்ஸ்டவசமாக, கடந்த ஆண்டு தொற்றுநோய்களின் உச்சக்கட்டத்தின் போது இந்த விடயங்கள் பல்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டாலும், அதாவது பல மாதங்களாக நாடு பூட்டப்பட்டதால், வீட்டுப் பணிப்பெண்களுக்கு உரிய ஊதியத்தைப் பெறவும், அவர்களின் வேலையைப் பாதுகாக்கவும் முடியவில்லை. 

அதேவேளை, வெளிநாட்டில் பணிபுரியும் பெண் வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அமெரிக்க டொலரின் நாணய மாற்று வீதத்தை இலங்கை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் காரணமாக, வெளிநாட்டு ஊழியர்கள் தாம் சம்பாதித்த சரியான தொகையை அவர்களது குடும்பங்களுக்கு அனுப்புவதை ஊக்கப்படுத்துவது மிகவும் அழுத்தமான பிரச்சினையாக மாறியுள்ளது. அவர்கள் சம்பாதிப்பதற்கு உரிய மதிப்பை அவர்களுக்கு வழங்குவதே நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்க அவர்களை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி, அதை அரசாங்கம் அவசரமாக கவனத்தில்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து, குறிப்பாக கிராமப்புறங்களில் பெண் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரியும் பெண்களின் பங்கை அங்கீகரிப்பதிலும், அவர்களுக்கு ஆதரவளிப்பதிலும் பெரும் குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக, கிராமப்புற பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட சில முன்முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ளது, மேலும் இதுபோன்ற திட்டங்கள் நிச்சயமாக அவர்கள் திட்டமிட்டபடி தொடர வேண்டும் மற்றும் முடிந்தால், பெண்களின் முழு பங்களிப்பைப் பெறவும், அவர்களின் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்தவும் வேண்டும். 

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையில் உள்ள பெண்கள் மற்றும் அந்தத் துறையில் நுழைய விரும்பும் பெண்களின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு, வசதியளிப்பது மற்றும் அதிகாரம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். STEM துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சிறந்து விளங்கும் அத்தகைய பல பெண்களை இலங்கை உருவாக்கியுள்ளது, மேலும் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வளங்களையும் இலங்கை அவர்களுக்கு வழங்க வேண்டிய நேரம் இதுவாகும். இது சம்பந்தமாக பல அணுகுமுறைகளை இலங்கை கொண்டிருக்கவேண்டும். இதற்காக ளுவுநுஆ துறையில் பெண்களுக்கு ஒரு தளத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

எவ்வாறாயினும், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் அனுபவித்தவற்றிலிருந்து மீண்டு வருவதற்கும், வீட்டு வேலைகளில் அவர்களை அடைத்து வைத்திருக்கும் கலாச்சாரக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடுவதற்கும், அவர்கள் இன்னும் மற்றவர்களைப் போலவே உற்பத்தி செய்ய முடியும் என்ற மனநிலையை மாற்றுவதற்கும் உதவ முன்வரவேண்டும். தொழில்முறை, கல்வி மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளைத் தொடரும்போது அவர்களின் குடும்பத்தின் உதவியும் மிகவும் அவசியமாகும். மேலும் இந்த தொற்றுநோயானது அவர்களின் குடும்பங்களுடனான பெண்களின் உறவுகளை எவ்வாறு பாதித்தது, குறிப்பாக அவர்களின் வாழ்க்கைத் துணையுடன், குடும்பப் பொருளாதாரத்தில் அவர்களின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு மாறியது மற்றும் உளவியல் ரீதியாக அவர்களை எவ்வாறு பாதித்தது, குறிப்பாக பெண்களுக்கு எதிரான குடும்ப துஸ்பிரயோகம் அதிகரித்துள்ள குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்த சூழலில் அவற்றை கண்டு தீர்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

மாற்றத்தை உருவாக்குபவர்களாக மாறுவதில் பெண்களின் பங்கு மற்றும் திறனபிவிருத்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதோடு, அதை அடைவதற்கான முதல் படிகளில் ஒன்றாக இருக்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கியமாகின்றது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளின் ஒரு அங்கமாக, பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவது பெண்களுக்கு மாத்திரம் நன்மை பயக்கும் விடயமல்ல, ஆண்களை பல வழிகளில் வலுவூட்டுவதுடன் இலங்கைச் சமூகம் ஆண்கள் மீது சுமத்தியுள்ள பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் என்ற செய்தியையும் சொல்லுகின்றது.


0 comments:

Post a Comment