ADS 468x60

12 March 2022

பெண்கள் நுண்கடனை திருப்பிச் செலுத்தாமைக்கு அவர்களை அடகுவைக்கலாமா!

வாழ்வாதாரத்தை உயர்த்தி கஷ்ட நிலையை போக்குவதற்காக வழங்கப்பட்ட நுண்கடன் இன்றைய நிலையில் பெண்களின் வாழ்வாதாரத்தையே பாழ்ப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் சமூக சீர்கேடுகளும் நிலைமாறுதல்களும் குறிப்பாக தமிழ் பெண்களை சீரழித்துள்ளது எனலாம். இக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களையே ஆக்கிரமித்துள்ளன.

எமது நாட்டில் நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற்றப்பட்டுஇ பெற்றுக்கொண்ட கடனை செலுத்தமுடியாத பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

மேலும் நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் பாரிய சூரையாடல்கள் காரணமாக எமது நாட்டில் 2இ8மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 24இலட்சத்தி 38ஆயிரம் பேர் பெண்களாகும். அதேபோன்று 200பெண்கள் வரை நுண்கடன் திட்டத்தில் சிக்கிக்காெண்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  (https://www.virakesari.lk/article/101831)

ஆகவே நுண்கடன் ஒரு பாரிய தாக்கத்தினை குறிப்பாக நலிவுற்ற பெண்கள் மீது ஏற்படுத்தியுள்ளது. காரணம் பல இருந்தாலும் அண்மையில் ஏற்பட்ட தொற்றுத்தான் அதற்கான பெரிய காரணம். அந்த வகையில் அனைத்து நுண்கடன்களையும் ஒழிப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. மேலும், கோவிட்-19 தொற்றுநோயின் பின்னணியில் நுண்கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வசதியாக போதிய தலையீடு செய்வதிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் மோசமடைந்துள்ள சூழலில், குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்பொழுது சத்தியாகிரகத்திற்கு நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூட்டமைப்பு பிரச்சனை மற்றும் வரவிருக்கும் புதிய ஆபத்துகள் பற்றி சமுதாயத்தை எச்சரிக்க அழைப்பு விடுத்து நடாத்தி வருகின்றமை கவனிக்கத்தக்கது. இருந்தபோதிலும் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் தவறிவிட்டது.

தேசியப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளில் இருந்து லாபம் ஈட்டுவதற்கு, இதுவரை அனைத்து அரசாங்கங்களும் நிதி நிறுவனங்களுக்கு எப்படி வசதி செய்து கொடுத்துள்ளன என்பதை நாங்கள் கண்டுவருகின்றோம்;. பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள செலுத்த முடியாத கடன், அரசின் கொள்கையின் தோல்விக்கு சாட்சியாக உள்ளது.

2017 ஆம் ஆண்டிலிருந்து அரை தசாப்தத்திற்கும் மேலாக எமது வாழ்வாதாரங்கள், தற்கொலைகள், வெளியேற்றம், இடம்பெயர்தல், குடும்ப வன்முறை, குடும்ப தகராறுகள் மற்றும் கடன் சுமை பிரச்சனை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி நாம் நாளாந்தம் செய்திகளாக அறிகின்றோம். 

எவ்வாறாயினும், புதிய கடன் திட்டங்கள் தற்போதைய நுண்நிதி நெருக்கடியைத் தீர்க்கும் என்று நம்புவதால், அரசியல் தலைமைகளும், கொள்கை வகுப்பாளர்களும் செவிடராகவும், குருடர்களாகவும் இருப்பதாகத் தெரிகிறது. கடனால் உந்தப்பட்ட தொழில் முனைவோர் மற்றும் சுயதொழில் தோல்வியை உறுதிப்படுத்தும் எங்கள் வாழ்க்கை அனுபவங்களை அவர்கள் நிராகரித்துள்ளனர். கடனால் உந்தப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் என்ற தோல்வியுற்ற அரசின் கொள்கையைப் பின்பற்றி நாங்கள் மேலிருந்து இருந்து நெருப்பில் விழமாட்டோம்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் வருமான இழப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தற்போது விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பன கடனாளியான பெண்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைத் தடுக்கிறது.

தற்போதைய சூழலில் இருந்து எழும் அதிர்வுகள்

தொடர்ந்து கடன் வசூலிப்பதானது பெண்களை ஆபத்தில் தள்ளுகிறது

விவசாயம், மீன்பிடி மற்றும் முறைசாரா பொருளாதாரம் தொடர்பான வாழ்வாதாரங்களில் ஈடுபட்டுள்ள நுண்நிதி கடன் பெறுபவர்கள் உத்தரவாத ஊதியம் அல்லது ஓய்வூதிய பலன்களை அனுபவிப்பதில்லை. எனவே, அவர்கள் பருவநிலை மாற்றம், பொருளாதார ஸ்திரமின்மை, நோய் மற்றும் விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய், பெண்கள் தங்கள் வழக்கமான வருமான ஆதாரங்களின் சரிவு காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அதிக அபாயகரமான மேலதிகக் கடனுக்குத் தள்ளப்பட்ட பல சம்பவங்களை பார்க்கலாம்.

நுண்கடன் பெற்ற பெண் கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்பாட்டில் தங்கள் சேமிப்பு, வீட்டுப் பொருட்கள், தங்கம் மற்றும் நிலத்தை இழந்த சம்பவங்களை பதிவு செய்துவருகின்றனர்.

உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பிற வீட்டுச் செலவுகளைக் காட்டிலும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதால், குடும்பத் தகராறுகளால் எழும் குடும்ப வன்முறைக்கு பெண்கள் பெரும்பாலும் ஆளாகிறார்கள்.

2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் ஜுவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த அறிக்கையில், நுண்கடன்; வலையில் சிக்கிய 2.8 மில்லியன் பேரில் 2.4 மில்லியன் பேர் பெண்கள் என்று ஆவணப்படுத்தியுள்ளது.

நுண்கடன் தொடர்பான 200க்கும் மேற்பட்ட தற்கொலைகள் குறித்து பல ஆண்டுகளாக செய்தி அறிக்கைகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தேசிய தற்கொலை பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

திருப்பிச் செலுத்தத் தவறிய பெண்களுக்கு எதிரான வழக்குகள்

நிதி நிறுவனங்களும், நுண்கடன் நிறுவனங்களும் நீதித்துறை பொறிமுறையைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களைச் செலுத்த முடியாத கடனைத் திருப்பிச் செலுத்த வற்புறுத்தி வருகின்றன.

சில நிறுவனங்கள் கொழும்பில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தொலைதூர பகுதிகளில் உள்ள பெண்களை அச்சுறுத்தி வருகின்றன.

கடன் வாங்கியவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களின் கட்டணத்தை தாங்க முடியாது. நீதிமன்றங்களில் ஆஜராவதற்காக பலருக்கு பயணம் திரட்ட முடியாதுள்ளது. இதன் விளைவாக, நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணை அல்லது சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ஏறக்குறைய அனைத்து வழக்குகளும் நிதி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் தீர்மானிக்கப்படுகின்றன.

நிரந்தர நிதி மறுப்பு

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத கடனாளிகள் கிரெடிட் இன்போமேசன் பியூரோவில் பட்டியலிடப்பட்டுள்ளனர், இது இன்னும் ஒரு முறையான நிதித் துறையில் பிற நிதியினைப் பெற்றுக்கொள்வதனை இல்லாமற் செய்கின்றது.

கிரெடிட் இன்போமேசன் பியூரோவில் பட்டியலிடப்பட்டுள்ள சிறுகடன் பெறுபவர்களில் பெரும்பாலானோர், கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஏற்ப வழங்கப்பட்ட நிதிச் சலுகைகளை அணுகுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

நுண்கடன் பெறுபவர்களுக்க முறையான நிதிச் சந்தைகளுக்கான அணுகலை மறுப்பது, முறைசாரா சந்தையில் ஆபத்தான நிதி வடிவங்களுக்கு அவர்களை நேரடியாக வெளிப்படுத்துகிறது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் பெண்களை சமூக விரோதச் செயல்களுக்குத் தள்ளுகிறது

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் பெண்களை சமூக விரோதச் செயல்களுக்குத் தள்ளுகிறது

பல கிராமங்களில், வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாததால், பெண்களை விபச்சாரத்தில் தள்ளுகின்றனர்.

கடன் சுமை குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பத்தின் உளவியல் நல்வாழ்வை எதிர்மறையாக பாதித்துள்ளது.

இவற்றை முறியடித்து மீண்டுவர நியாயமற்ற கடனை திருப்பி செலுத்துவதை நிறுத்தவேண்டும். 

சுரண்டும் நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்குவதனை நிறுத்தவேண்டும்;. நுண்நிதி நிறுவனங்களால் தடைசெய்யப்பட்ட வட்டிவீதத்தில்; கடன் வழங்குவதை மறுக்குமாறு நாம் ஏனையோரை கேட்டுக்கொள்ளுகின்றோம். நம்நாட்டில் பாதிக்கப்பட்ட 2.8 மில்லியன் பெண்களை இது சார்ந்த விழிப்போடு இருக்க நான் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

நமது வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாற்று வளர்ச்சிப் பொறிமுறையைத் தொடங்க கைகோர்ப்போம். கடைசியாக, நாம் ஆட்சிக்கு வாக்களித்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து மக்களுக்குப் பொறுப்புக்கூறும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முன்வருவோம்;.

reference
https://www.virakesari.lk/article/101831

https://www.vaaramanjari.lk/2019/09/01/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81

0 comments:

Post a Comment