ADS 468x60

08 March 2022

மகளிர் தினத்தில் எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம்?

தாய் இ சகோதரி, மனைவி, மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான்.

நாம் வசிக்கும் நாடு கூட 'தாய் நாடு' என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என. முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துஇ சிறந்து விளங்குகின்றனர்.

பெண்கள் என்றால், வீட்டு வேலை செய்வது, அதிக பட்சமாக ஆசிரியர், செவிலியர் பணிக்குத் தான் என்ற எழுதப்படாத சட்டம் மாறிவிட்டது.விமான பைலட், ரயில் இன்ஜின் டிரைவர், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி, கம்ப்யூட்டர் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவது என, பெண்கள் தனித்துவமாக விளங்குகின்றனர்.

நாட்டின் முதுகெலும்பான, பெண்களை கவுரவிக்கும் வகையில், பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பெண்களுக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலக மகளிர் தினம் என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தாலும் ஆணாதிக்கத்தால் ஓடுக்கப்பட்டுள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் திரண்டு எழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இன்று ஒரு பண்டிகையாக அது பார்க்கப்படுகின்றது. 

உலக மகளிர் தினம் தோன்றியதன் வரலாற்றை நாம் பார்த்தோமானால் அது ஆணாதிக்கம், ஒட்டுமொத்த சமூக அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் பெண்கள் திரண்ட வரலாறாகவே அது உள்ளது.

பெண்கள், நாட்டின் கண்கள் என்பது போல, ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்ணும், அந்த வீட்டின் மகாராணி தான்.

எனவேஇ வீட்டில் இருக்கும் தாய், மனைவி அல்லது சகோதரிக்கு, மகளிர் தினத்தன்று, ஏதாவது பரிசுகளை வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தி கவுரவிக்கலாம்.கொடுக்கும் பரிசு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. ஆனால், இந்நாளை மறக்காமல் மனதில் கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளைக் கொடுக்க வேண்டும்.அது, அவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அன்பையும் அதிகரிக்கும்.

எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம்?

சாதாரணமாக ஏதாவது ஒரு சிறப்பு என்றால், கொடுக்கும் பரிசு தான் உடைகள். எனவே, இந்த தினத்திலும் சேலை, சுடிதார் போன்ற ஆடைகளை வாங்கிக் கொடுத்து, வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

மகளிர் தினம் என்பதால், நிறைய வண்ணமயமான நிறத்திலும், டிசைனிலும் வாழ்த்து அட்டைகள்இ மார்க்கெட்டில் வெளிவந்துள்ளன. அதில், அவர்களை பற்றி, உங்கள் மனதில் இருப்பதை எழுதிக் கொடுக்கலாம்.

பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே இந்த மகளிர் தினத்தன்று, அவர்களுக்கு பூங்கொத்துக்களையோ அல்லது பூச்செடிகளையோ வாங்கிக் கொடுக்கலாம். 'அட்லீஸ்ட்' ஒரு முழு பூவாவது வாங்கிக் கொடுக்கலாம்.

உங்கள் வசதிக்கு ஏற்ப பெண்களுக்கு பிடித்தஇ மேக்கப் செட், அணிகலன்களை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்° அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள், மூதாட்டிகளுக்கு சிறு பரிசு, இனிப்பு வழங்கி, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். இதுவே அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை.

அவர்களது போட்டோவை, சற்று வித்தியாசமாக, பிரேம் செய்தோ அல்லது கப்-பில், போட்டோ இருப்பது போன்றோ செய்து கொடுக்கலாம்.

மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்றால், இன்று ஒருநாள் சமையல் அறையில் இருந்து, அவர்களுக்கு விடுப்பு கொடுங்கள். உங்களுக்கு தெரிந்ததை செய்து கொடுங்கள். அதைவிட அவர்களுக்கு பெரிய சந்தோஷம் இருக்காது.

0 comments:

Post a Comment