ADS 468x60

08 March 2022

நீடித்த பால்நிலை சமத்துவத்தில் பெண்களுக்கான முன்னுரிமை.

 இன்று உலகம் எப்போதையும் விட நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய், சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள், மனித உரிமைகளுக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான காலநிலை நெருக்கடி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து இந்த உலகமும் மற்றும் அதன் சமூகமும் இன்னும் மீழவில்லை. இதனால் நமது சமூகங்கள் மற்றும் அமைப்புகளில் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக, இந்த உலகளாவிய சிக்கல்கள் தனிநபர்களையும் குழுக்களையும் வித்தியாசமாகவும்  சில சமயங்களில் மிகவும் ஆழமாகவும் பாதிக்கின்றன.

இந்தப்பின்னணியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முன்னேறி வரும் நிலையில், பெண்களின் உரிமைகள் குறித்த அபிவிருத்தி பின்னோக்கிய கடிகாரத்தினைப்போல் நகர்கிறது. ஆதனால் நாம் அனைவரும் அதற்காக இன்று அதிக விலை கொடுக்கவேண்டியுள்ளது.

பெண்களின் தலைமைத்துவம் முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது என்பதை சமீபத்திய ஆண்டுகளில் அடுக்கடுக்காக வந்த நெருக்கடிகள் எடுத்துக்காட்டுகின்றன. மருத்துவர்கள், தாதியர்கள்; மற்றும் பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பணியாளர்கள் என பெண்கள் கோவிட்-19 தொற்றுநோயை தையிரியத்துடன் முன்னே நின்று எதிர்கொண்டுள்ளனர். ஆனாலும்; அதே நேரத்தில், பெண்களும் சிறுமிகளுமே முதலில் வேலைகள் அல்லது பாடசாலைக் கல்வியினை இழக்கின்றனர், அதேபோல அதிக ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர், மேலும் வீட்டு மற்றும் இணையவழி துஸ்பிரயோகம் மற்றும் குழந்தைத் திருமணங்களின் என்பன உயரும் நிலைகளையும் எதிர்கொள்கின்றனர்.

தொற்றுநோய் இன்னும் அப்பட்டமாக ஒரு உண்மையை எடுத்துக்காட்டியுள்ளது: அது ஆணாதிக்கத்தின் வேர்கள் இன்னும் ஆழமாக நம்மத்தியில் ஓடுகின்றன. நாம் இன்னும் ஆண் ஆதிக்க உலகில் ஆண் ஆதிக்க கலாச்சாரத்துடன் வாழ்கிறோம். இதன் விளைவாக, நல்ல நேரத்திலோ அல்லது கெட்ட காலத்திலோ, பெண்கள் வறுமையில் விழும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது. அவர்களின் நாளாந்த சுகாதாரம் தியாகம் செய்யப்படுகிறது மற்றும் அவர்களின் கல்வி மற்றும் வாய்ப்புகள் கூட குறைக்கப்படுகின்றன.

எத்தியோப்பியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் முதல் உக்ரைன் வரை நாம் பார்ப்பது போல, மோதலைத் தாங்கும் நாடுகளில் - பெண்களும் சிறுமிகளும் மிகவும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நலிவுற்றவர்களாகக் காணப்படுகின்றனர். அதனால்; அமைதிக்கான மிகவும் அழுத்தமான குரல்களை அவர்களே முன்னிறுத்திவருகின்றனர்.

நாம் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, அனைவருக்கும் நிலையான மற்றும் சமமான மீட்பு என்பது பெண்ணிய மீட்சியாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றிலான தெழிவான இலக்கு முதலீடுகள் என்பன மூலமான பொருளாதார முன்னேற்றம் எம்மத்தியில் தேவையாக இருக்கின்றது. ஆகவே உலகளவில் 2030ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வரிசையில் பெண்கள் முதலிடம் வகிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

சமூக பாதுகாப்பில் மற்றும் பாதுகாப்புக்கான பொருளாதாரத்தில் முதலிடுவதனூடான உண்மையான சமுகமுன்னேற்றம் ஏற்படுத்தலாம்.  இத்தகைய முதலீடுகள் பெரிய கடன் வீடதலையினை அளிக்கின்றன, பசுமையான, நிலையான வேலைகளை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட உதவி தேவைப்படும் எங்கள் சமூகங்களின் உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கின்றன.

பல வளிகளிலும் திவாலான உலக நிதி அமைப்பை சீர்திருத்த, எங்களுக்கு நிதி முன்னேற்றம் தேவை, ஆகவே அதற்காக அனைத்து நாடுகளும் பெண்களை மையமாகக் கொண்ட பொருளாதார மீட்சியில் முதலீடு செய்யலாம். இதில் கடன் நிவாரணம் மற்றும் நியாயமான வரி முறைகள் ஆகியவை அடங்கலாம், இது உலகெங்கிலும் ஓரு இடத்தில் குவிந்துகிடக்கும் பாரிய செல்வங்களை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்குப் பயன்படுகின்றது.

பெண்கள் மற்றும் சிறுமிகளை விகிதாச்சாரத்தில் பாதிக்கக்கூடிய பாலின ஏற்றத்தாழ்வுகளின் பொறுப்பற்ற அதிகரிப்பினை மாற்றியமைக்க மாற்றத்தக்க காலநிலை நடவடிக்கை அவசரமாகத் தேவைப்படுகின்றது. வளர்ந்த நாடுகள், புதைபடிவ எரிபொருட்களில் இருந்து ஒரு நியாயமான மாற்றத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவில் தங்கள் கடமைகளை அவசரமாக வழங்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் வெற்றிகரமான, நிலையான பொருளாதாரங்கள் பசுமையான, பாலினத்தை உள்ளடக்கிய மற்றும் நிலையானதாக இருக்கும்.

நிதியமைச்சர்கள் மற்றும் வர்தகர்கள் உட்பட அரசாங்கம் மற்றும் வணிகத்தில் தலைமைப் பொறுப்பில் அதிக பெண்கள் தேவை, அவர்கள் மூலம் மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பசுமை மற்றும் சமூக முன்னேற்றக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். உதாரணமாக, அதிகமான பெண்களை நாடாளுமன்றத்தில் சேர்ப்பது வலுவான காலநிலை பொறுப்புகள் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வியில் அதிக முதலீடுகள் என்பன அவர்கள் மூலம் ஏற்படுத்தப்படும் என்பது மறுக்கமுடியாது.

தைரியமான பாலின ஒதுக்கீடுகள் மூலம் அரசியல் முடிவெடுக்கும் அனைத்து நிலைகளிலும் பெண்களின் சமமான தலைமை மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இலக்கு நடவடிக்கைகள் மூலமான அரசியல் முன்னேற்றம் நமக்குத் தேவை.

ஐக்கிய நாடுகள் சபையில், நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக - தலைமையகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மூத்த நிர்வாகத்தில் பாலின சமத்துவத்தை நாங்கள் அடைந்துள்ளோம். நாங்கள் சேவை செய்யும் சமூகங்களை சிறப்பாக பிரதிபலிக்கும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களின் திறனை இது வியத்தகு முறையில் மேம்படுத்தியுள்ளது.

செல்லும் வழியின் ஒவ்வொரு அடியிலும், நம் உலகின் ஒவ்வொரு கோளத்திலும் ஒவ்வொரு மூலையிலும் முன்னேற்றத்திற்கு உந்தும் பெண்கள் மற்றும் பெண்களிடமிருந்து நாம் உத்வேகம் பெறலாம்.


0 comments:

Post a Comment