எமது கிராத்தில் இருந்து முழு உலகத்திலும் உள்ள மாணவ மணிகளை படைத்து இன்று எமை விட்டு மீழாத் துயில்கொள்ளும் இராசையா திருஞானசம்பந்தன்(ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்) சேருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் முதலில்.
நான் நினைக்கின்றேன் அது 90 ஆம் ஆண்டு காலம். அப்போ அதிபயங்கரமான காலகட்டம். கல்வி என்பதே முயல்கொம்பு எங்களுக்கு. அந்த காலத்தில். அதிலும் ஆங்கிலம் கச்சி வேப்பங்காய். ஏனெனில் ஒழுங்கான ஆசிரியர்கள் அந்த நேரத்தில் கிடையவே கிடையாது. ஏதோ ஆங்கிலம் தவிர்ந்து ஐந்து பாடங்களில் சித்தியடைந்து, தத்தி தவழ்ந்து கரைசேர்ந்தாலே பெரிய விடயம் அப்போ.