ADS 468x60

29 February 2024

கல்லாநிதிகளின் பொல்லாத ஆசை

இன்று கல்லா நிதிகள் அவர்களை அழைப்புக்களில் போடுவதற்கும், பொது இடங்களில் அழைப்பதற்கும் மறந்துவிட்டால் அவர்களின் அளப்பறை தாங்க முடியாமல் பல நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் திக்குமுக்காடுவதைப் பார்க்கின்றோம். ஆம் இன்று உலகில் மூன்று நாடுகளில் கலாநிதிப் பட்டங்களை மிக மலிவாகப் பெறலாம். முதலாவது இந்தியா. அங்கு கலாநிதிப் பட்டங்களை வாங்க மிகக்குறைந்த ரூபாய்கள் மட்டுமே செலவழித்தால் போதும். இன்னும் ஒரு 250 ரூபாய் கொடுத்தால் கறுப்புத் துணி, பட்டமளிப்புத் தொப்பி அணிந்து, நீண்ட பிட்டு மூங்கில் போன்ற பட்டச்சுருள் உறையைப் பிடித்துக் கொண்டு பட்டமளிப்புப் படம் எடுக்கலாம் இல்லையா. 

27 February 2024

போரின் நிழல்கள்: மனதார மீள் எழுவோம்!

 2013ம் ஆண்டு கிளிநொச்சி அம்பாள்நகர் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நீண்டகால உளநல பாதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. புகைப்படத்தில், போரின் தாக்கம் அவர்களின் முகங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. அச்சம், கவலை, துயரம் போன்ற உணர்வுகள் அவர்களின் பார்வையில் தெரிகின்றன.

ஆய்வு மற்றும் மீட்பு முயற்சிகள்

போர் முடிந்த உடனே, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்திறனை ஆய்வு செய்யும் குழுவில் நான் பணியாற்றினேன். ஆய்வின் ஒரு பகுதியாக தரவு சேகரிப்புடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டோம். உதாரணமாக.

25 February 2024

மத்தியவங்கியின் சம்பள அதிகரிப்பும் ஒடுக்கப்பட்ட பொதுமக்களும்.

சம்பளம் போதாது, வாழவே பிடிக்கல, ஒரு பொருட்களையும் கிடைக்கிற சம்பளத்தில வாங்கமுடியல என எல்லோருமே அரசியல்வாதிகளைத்தவிர விரக்தியில் இருக்கின்றனர் இன்று. இந்த நேரத்தில்தான் மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரித்த சம்பள உயர்வு நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 29.53 வீதம் முதல் 79.97 வீதம் அதிக விகிதாச்சாரத்தில் மூன்று வருட ஊதிய திருத்தத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளது. 

தெரியுமா மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் மாதாந்த சம்பளம் 1.7 மில்லியனில் இருந்து அலுவலக உதவியாளர்களின் சம்பளமும் ரூ. 974,965 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு அலுவலக உதவியாளரின் மொத்த ஊதியம், ஒரு நுழைவு நிலை மருத்துவரின் ஊதியத்தை விட இப்போது உயர்ந்துள்ளது என்று அனைவரும் தெரிவிக்கின்றனர்.

22 February 2024

நெல்லைக்காட்டி விவசாயியை மறைப்பதுபோல உள்ளது இது

இன்று பரவலாக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை விவசாய அமைப்புக்களின் பிரதிநிதித்துவம் இன்றி நடாத்துவது தொடர்பில் அந்த அமைப்புக்களின் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. விவசாயி கீழே விழுந்து, கடத்தல்காரர்கள் வெளியே வர முயற்சிக்கும் காலம் இது. 

ஒரு சர்வதேச அளவிலான மாநாட்டில் இந்நாட்டின் பல விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வாய்ப்பை நிச்சயமாக வழங்கியிருக்க வேண்டும். இந்த நாட்டில் விவசாயம் பற்றி நன்கு அறிந்தவர்கள் விவசாயிகள். இந்த நாட்டை செழிப்பான பூமியாக மாற்றுவதற்கான போராட்டத்தின் முன்னணியில் நிற்பவர்களும் அவர்கள் தான். 

20 February 2024

எல்லாநேரத்திலும் மக்களை முட்டாள் ஆக்கமுடியாது


 

16 February 2024

அடேங்கப்பா: நாளொன்றுக்கு சுமார் 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக செலவிடுகின்றனர்

எமது நாட்டில் நாற்பதுகள் மற்றும் ஐம்பதுகளில் கூட, புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் மிகவும் குறைந்த உயரடுக்கு வர்க்கத்திற்கு மட்டுமே இருந்தது. அப்போது அந்த வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் புகைப்பிடிக்க குழாய் பைப்பை அதிகம் பயன்படுத்தினார்கள். அந்த அரசியல்வாதிகளில் பிரதமர்களும் அமைச்சர்களும் அடங்குவர். எந்தப் பொதுக்கூட்டத்துக்கு வந்தாலும் நெருப்பு எரியும் குழாயுடன்தான் வந்தார்கள். அவை மறைந்து சிலைகளாக மாறும்போதும் நாம் சொன்ன குழாய் அவர்களின் கைகளில் இருக்கிறது. ஆனால், பின்னாளில் அந்த குழாய் சுருட்டு, சிகரெட், பீடி என மாறி பெரும் சமூகப் பேரிடராக மாறியது. இந்நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொற்றாத நோய்களை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளில், புகைபிடித்தல் முக்கிய காரணியாக மாறியுள்ளது.

அனுபவம்


 

15 February 2024

எது முதல்தேவை


 

07 February 2024

இளைஞர்களின் அரசியல் ஈடுபாடும் இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்துக்கான தேவையும் 2024

அறிமுகம்

2022ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் (18-29 வயது) பங்கேற்கும் தேர்தல் நடக்கவிருக்கும் 2024ம் ஆண்டில், நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு புதிய மாற்றத்திற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதில், இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 72% இளைஞர்கள் அரசியல் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது 2019ம் ஆண்டில் 58ம% ஆக இருந்தது. மேலும், 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்குப் பிறகு, இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கான தேவையை அதிகமாக உணர்கின்றனர்.

04 February 2024

சுதந்திர நாட்டைக் காப்பாற்றும் அளவுக்குத் தகுதியான அரசியல்வாதிகள் நம் நாட்டில் இல்லை!

இன்றோடு 76 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சுதந்திரம் அடைந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேய ஏகாதிபத்தியங்களின் கீழ் நசுக்கப்பட்டு, சிக்கித் தவித்த இந்நாட்டு மக்களுக்கு அந்த நாளில் சுதந்திரம் மிகவும் விசித்திரமான உணர்வைத் தந்தது. 

அப்போதும் இலங்கை அரை நிலப்பிரபுத்துவ நாடாகவே இருந்தது. 1800களின் கடைசிப் பாதியில் இந்த நாட்டில் நிலவிய நிலப்பிரபுத்துவ நடைமுறைகள் 1948ஆம் ஆண்டிலும் ஏறக்குறைய நாட்டில் அப்படியே இருந்தன. 

பழைய ஏகாதிபத்திய் வியாபாரிகளின் பண பலம் அப்படியே இன்னும் இருந்தது. குடும்ப ரீதியாகவோ, பரம்பரையாகவோ இல்லாத புதுப் பணம் படைத்தவர்கள் தலை நிமிரத் தொடங்கிய அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்று நடந்தது. அதுதான் இந்த நாட்டில் வருமானப் பங்கீட்டு ஏற்றத்தாழ்வின் ஆரம்பம். 

01 February 2024

இலங்கை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி: சாத்தியக்கூறுகள்

அறிமுகம்:

இலங்கை, இயற்கை அழகு, வரலாற்று சின்னங்கள், மற்றும் வளமான கலாச்சாரம் கொண்ட ஒரு தீவு நாடாகும். சுற்றுலாத்துறை இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஆய்வுக்கட்டுரை, இலங்கை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது.

சமூக அடிப்படையிலான சுற்றுலா என்றால் என்ன?

சமூக அடிப்படையிலான சுற்றுலா என்பது, உள்ளூர் சமூகங்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு நன்மை பயக்கும் சுற்றுலா வடிவமாகும். இது உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் வாழ்க்கை முறைகளை அனுபவிக்க சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பளிக்கிறது.