ADS 468x60

29 February 2024

கல்லாநிதிகளின் பொல்லாத ஆசை

இன்று கல்லா நிதிகள் அவர்களை அழைப்புக்களில் போடுவதற்கும், பொது இடங்களில் அழைப்பதற்கும் மறந்துவிட்டால் அவர்களின் அளப்பறை தாங்க முடியாமல் பல நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் திக்குமுக்காடுவதைப் பார்க்கின்றோம். ஆம் இன்று உலகில் மூன்று நாடுகளில் கலாநிதிப் பட்டங்களை மிக மலிவாகப் பெறலாம். முதலாவது இந்தியா. அங்கு கலாநிதிப் பட்டங்களை வாங்க மிகக்குறைந்த ரூபாய்கள் மட்டுமே செலவழித்தால் போதும். இன்னும் ஒரு 250 ரூபாய் கொடுத்தால் கறுப்புத் துணி, பட்டமளிப்புத் தொப்பி அணிந்து, நீண்ட பிட்டு மூங்கில் போன்ற பட்டச்சுருள் உறையைப் பிடித்துக் கொண்டு பட்டமளிப்புப் படம் எடுக்கலாம் இல்லையா. 

ஆனால் இலங்கையில கலாநிதிப் பட்டம் ஒன்றின் விலை கணிசமான அளவு அதிகமாகத்தான் உள்ளது. பல இடங்களில்; உள்ள சில போலி முகவர்கள் மற்றும் நிபுணர்கள் என அழைத்துக்கொள்பவர்கள் மற்றும் போலி மருத்துவர்களால் அமைக்கப்படும் அமைப்புகளிடம் சுமார் ஐயாயிரம் ரூபாய் செலுத்தி கலாநிதிப் பட்டம் பெறலாமாம். 

பிச்சையாக டொக்டர் பட்டம் பெற்ற தோற்கடிக்கப்பட்ட அரசியல் தலைகள் மற்றும் சில அரச உத்தியோகத்தர்கள் இன்றும் நாடு முழுவதும் திரிவதைப் பார்கின்றோம். மோல்டா போன்ற நாட்டிற்குச் சென்று இரண்டரை லட்சம் ரூபாய்க்கு இணையான தொகையை செலுத்தும் போது கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகிறது என்பது தகவல்.

 இப்படிப்பட்ட முட்டாள் புகழரசர்கள் தங்கள் மாவீரர் பட்டத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். 1986 முதல், இலங்கை அரசாங்கம் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு தரப்படுத்தப்பட்ட கௌரவங்களை வேறாக வழங்கி வருகிறது. 

இன்றும் சில வருடங்களுக்கு ஒருமுறை இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அத்தகைய கௌரவத்தை அடைவது மிகவும் கடினமான பணியாகும். அதற்காக, சம்பந்தப்பட்டவரின் கல்வி, தொழில், சமூக சேவை போன்றவை குறித்து தனி ஆதாரங்கள் பரிசோதிக்கப்படுகின்றது. 

ஆனால் இந்தப் பெயர்களை வெளிச் சந்தையில் எளிதாகவும் விரைவாகவும் பெறலாம் மற்றும் விற்கலாம் என்ற நிலமை காணப்படுகின்றது. சில சமூக சேவை நிறுவனங்களை நிறுவும் மோசடிக்காரர்களும் பணத்திற்காக அரசாங்கம் வழங்கும் அனைத்து தரப்படுத்தப்பட்ட பட்டப் பெயர்களையும் வழங்குகிறார்கள். 

இவ்வாறான ஒரு பின்னணியில்தான், அண்மையில் தேசிய விருதுகள் மற்றும் கௌரவப் பட்டங்களை சட்டவிரோதமாக பெற்றுக் கொள்ளும் அல்லது பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் அது வரவேற்கத்தக்கது.

1981 ஆம் ஆண்டு முதல், இதுபோன்ற போலிப் பெயர்களை விசாரித்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொறுப்பான அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார்கள்;. ஆனால் திருடர்களுக்கு பெயர் வைப்பதை தேசிய பணியாக கருதி எந்த பொறுப்பானவர்களும் அந்த கோரிக்கைக்கு காது கொடுக்கவில்லை போலும்.

  ஆனால் மக்களின் எந்த கோரிக்கையும் இன்றி இந்த ஊழல் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த டொக்டர் பட்டங்களைப் பெற்ற கல்லாநிதிகளும் ரியல் எஸ்டேட் வியாபாரிகளும் இந்த ஓர்டரைப் பார்த்து அடுத்த ஆட்டத்தை எப்படி விளையாடுவது என்று யோசிப்பார்கள். போலி கலாநிதிப் பட்டங்கள் உட்பட போலி பட்டங்களை வழங்குதல் மற்றும் பெறுதல் ஆகிய இரண்டு குற்றங்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். அந்த தண்டனையை ஒருபோதும் நிறுத்தி வைக்கக்கூடாது என்பது உண்மையாகப் படித்து பட்டம் பெற்றவர்களின் வேண்டுதல்.


0 comments:

Post a Comment