ADS 468x60

04 February 2024

சுதந்திர நாட்டைக் காப்பாற்றும் அளவுக்குத் தகுதியான அரசியல்வாதிகள் நம் நாட்டில் இல்லை!

இன்றோடு 76 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சுதந்திரம் அடைந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேய ஏகாதிபத்தியங்களின் கீழ் நசுக்கப்பட்டு, சிக்கித் தவித்த இந்நாட்டு மக்களுக்கு அந்த நாளில் சுதந்திரம் மிகவும் விசித்திரமான உணர்வைத் தந்தது. 

அப்போதும் இலங்கை அரை நிலப்பிரபுத்துவ நாடாகவே இருந்தது. 1800களின் கடைசிப் பாதியில் இந்த நாட்டில் நிலவிய நிலப்பிரபுத்துவ நடைமுறைகள் 1948ஆம் ஆண்டிலும் ஏறக்குறைய நாட்டில் அப்படியே இருந்தன. 

பழைய ஏகாதிபத்திய் வியாபாரிகளின் பண பலம் அப்படியே இன்னும் இருந்தது. குடும்ப ரீதியாகவோ, பரம்பரையாகவோ இல்லாத புதுப் பணம் படைத்தவர்கள் தலை நிமிரத் தொடங்கிய அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்று நடந்தது. அதுதான் இந்த நாட்டில் வருமானப் பங்கீட்டு ஏற்றத்தாழ்வின் ஆரம்பம். 

அதாவது ஏழையின் சட்டைப் பையில் ஒரு ரூபாயும், பணக்காரனின் சட்டைப் பையில் ஆயிரம் ரூபாயும் இருக்கும். இந்த இரண்டு மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான தேவைகள் இருந்தன. ஏழைகள் ஒரு ரூபாயில் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தனர், பணக்காரர்கள் அந்தத் தேவைகளை ஆயிரம் ரூபாயில் பூர்த்தி செய்தனர். இதன் காரணமாக, இல்லாதவர்களுக்கும் உள்ளவர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் விரிவாகியது. 

இதன் காரணமாக முதல் சுற்று எழுச்சி ஏப்ரல் 1971 எழுச்சியுடன் முடிவடைகிறது. சுதந்திரம் அடைந்து 23 ஆண்டுகள் பொறுமை காத்த மக்கள் 1971ல் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு காவல்துறையை நோக்கி சுட்டு நாட்டை கைப்பற்ற முயன்றனர். இதெல்லாம் சரியாகப் போகவில்லை. 

இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ராணுவம் மற்றும் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் இரண்டாம் சுற்று 88, 89, 90 ஆகிய மூன்று வருடங்களிலும் இதே முறையில் மீண்டும் மீண்டும் புரட்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதன்காரணமாக அங்கு சுமார் 75,000 இளைஞர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டனர்.

1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இன்னும் இது பெரும்பாலானோர் அறியாத கதை ஒன்று உள்ளது. அது இலங்கை எப்பொழுதும் தோற்றுப்போன நாடாகவே இருந்து வருகின்றது. அதாவது, எங்கள் கணக்கில் எப்போதும் கடன் தொகை வருமானத்துக்கு மேலாக இருக்கும். 

ஏகாதிபத்தியங்களால் கட்டமைக்கப்பட்ட, 500 ஆண்டுகளாக ஐரோப்பிய ஆடைகளை அணிந்த நகர்ப்புறவாசிகளின் தலைமுறை, இருந்ததைத் தின்று, புதியதை உருவாக்க முயற்சிக்கவில்லை. மேலும், இந்நாட்டின் பூர்வீக தமிழ் சிங்கள கிராமவாசி மிகவும் நாட்டுப்பற்றுக்கொண்டவர்களாக இருந்தனர்; மற்றும் அவர்கள் தமது உழைப்பை மாற்றானுக்கு அடிமையாக விற்று பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. 

இதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்லலாம். 1800களில் இலங்கைக்கு தேயிலை பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லர், இலங்கை தமிழ் சிங்களவர்களின் உழைப்பு தோட்டச் தொழிலை மேம்படுத்தும் என எதிர்பார்த்தார். ஆனால் காசுக்கு உழைப்பை விற்காமல், வேலை செய்யும் இந்நாட்டார்;, ஜேம்ஸ் டெய்லரிடம், தான் தன் தேயிலைத் தோட்டங்களில் இலவசமாக வேலை செய்வோன் என்றும், தான் விவசாயம் செய்யும் போது டெய்லரும் அவனது குடும்ப உறுப்பினர்களும் அந்த வயல்களில் இலவசமாக வேலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். 

இதைக் கேட்ட டெய்லர் திகைத்துப் போனார். வயல்களில் சேறும் சகதியுமாக அவருக்கு வேலை செய்து பழக்கமில்லை. எனவே, மாற்றாக, இந்தியாவில் இருந்து கூலியற்ற தொழிலாளர்களை வரவழைக்க முடிவு செய்தார். 

அதற்கு அரசின் அனுமதியும் கிடைத்தது அப்போது. தோட்டத் தொழிலாளர் பிரச்சினையின் இன்னும் வெடிக்காத குண்டுகள் இங்குதான் ஆரம்பிக்கின்றன. 

1948ல் நாம் சுதந்திரம் பெற்ற போது இந்த நாட்டை ஆண்ட தலைமுறையே இன்றும் இந்த நாட்டை ஆள்கிறது. எனவே, இந்த நாட்டில் வரவு செலவுக் கணக்கு எப்போதும் எதிர்மiறாயன பாதீட்டு மீதியைக் கொண்டதாகும். 

1800 களின் முற்பகுதியில் இங்கிலாந்தின் காலனித்துவ செயலாளரால் இலங்கைக்கான முதல் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அப்போது வெள்ளையர்கள் இந்த நாடு மிகவும் நஷ்டமடையும் நாடு என்றும் இந்தியா மிகவும் லாபகரமான நாடு என்றும் வெளிப்படுத்தினர். 

இந்தியா சுதந்திரம் அடைந்த சிறிது காலத்திலேயே, இலங்கை பணத்தை மிச்சப்படுத்தவும் இந்த நோயிலிருந்து விடுபடவும் தொடங்கிய பின்னர் வெள்ளையர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி இலங்கைக்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்தனர்.

சுதந்திரம் என்பது ஆடம்பரமான வார்த்தை. அது உள்ளடக்கிய கருத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை என்று உணர்கிறோம். ஆனால் 1948 இல் இந்த நாடு பெற்ற சுதந்திரத்தை விளக்குவதற்கு ஏராளமான வார்த்தைகள் உள்ளன. 

சுதந்திர நாட்டைக் கைப்பற்றும் அளவுக்குத் தகுதியான அரசியல்வாதிகள் நம் நாட்டில் இல்லை, அதனால் சுதந்திரம் கிடைத்ததால் தோற்கடிக்கப்பட்டோம். வருமானமற்று இழப்பை சந்தித்த நாட்டை விட்டு வெள்ளையர்கள் வெளியேறினர். 

கடந்த 76 ஆண்டுகளாக, சுதந்திர தினத்தை நினைத்து பிப்ரவரி 4ம் தேதி வானத்தைப் பார்த்து கைதட்டி பெரிதாக எதுவும் பெரிமிதம் கொள்ளுவதற்கு இல்லை. 

பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரத்தை கொண்டாடும் இந்நாட்டு மக்கள் ஐந்தாம் திகதியில் இருந்து வெறுமையான பையில் கையை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்கின்றனர். 

இந்த நாட்டின் அரசியல்வாதிகள் சுதந்திரத்தைப் பற்றி பெருமைப்படவோ மகிழ்ச்சியாக கொண்டாடவோ எதையும் விட்டு வைக்கவில்லை. இலங்கை எந்த சேமிப்பும் இல்லாத நாடாக பலதடவை முத்திரை பதித்துள்ளது. முதலில், எங்களிடம் எதுவும் இல்லை. இரண்டாவதாக, விட்டுச் சென்ற ஒன்றைப் பராமரிக்க நமக்கு விருப்பமும் இல்லை.

இந்நாட்டு மன்னர்கள் காலத்தில் இருந்தே இலங்கை இருண்ட நாடாக இருந்து வருகிறது. அரசன் நல்லவனாக இருந்தாலும், அங்கிருந்த அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டான். அரசனுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி அந்த இடைவெளியினூடாக சாமானியர்கள்; அரசனிடம் அண்டிச் செல்ல முடியாதபடி செய்வது மேற்கூறிய நிலப்பிரபுக்களின் கேவலமான நடைமுறையாகும்.

0 comments:

Post a Comment