ADS 468x60

02 June 2024

பட்டிருப்புத்தொகுதியில் சிறுவர்களின் மன உழைச்சலுக்கு மருந்து கிடைக்குமா?

நமது சமுதாயத்தில் சிறுவர் வளரும் சூழல்களைப் பற்றிச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது. சிறுவர்கள் இன்று நாட்டின் பொருளாதார, அரசியல், நாளுக்கு நாள் மாறும் நிலையற்ற கல்வி முறமை என்பனவற்றினால் மிகுந்த அழுத்தத்தில் இருக்கின்றனர். பெற்றோர்களும் சேர்த்து தான். பாடசாலைக்கல்வியினைத் தாண்டி பிரத்தியேக வகுப்புக்களில் அலைந்து அடிபடுகின்றனர். 

அவர்களின் அழுத்தம் அதிகரிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, இயற்கையான பொழுதுபோக்குகளின் இல்லாமையாகும்.  சுமார் 70 வீதம் சிறுவர்கள் தினமும் மொபைல் போன், டிவி போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர், இந்த நிலைமை அவர்கள் மனநலனிலும், உடல்நலனிலும் தீமைகளை ஏற்படுத்துகிறது.

அப்படி இருந்தும் இன்று உயர்தரப் பரீட்சை முடிவுகள் எமது மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு பெறுபேறுகள் அமைந்துள்ளன. அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், இந்த சிறப்பான பெறுபேறுகள் மட்டுமே போதுமானவை அல்ல. குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்காக அவர்களுக்கு விளையாட்டுத் திடல்கள், இயற்கையுடன் தொடர்புடைய இடங்கள், பொழுதுபோக்கான இடங்கள் மிகவும் அவசியம்.

எத்தனைபேர் சித்தியடைகின்றனர் என்றபெறுபேற்றினை மாத்திரம் இந்த சமுகம் வெளிப்படையாக பார்க்கின்றது? எத்தனை சிறுவர்கள், பெற்றோர்கள் சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளுக்குள் புழுங்கும் உள்ளுனர்வினை கண்டறிவதில்லை? ஆற்றுப்படுத்துனர்களும், ஆலோசகர்களும், அறிவுஜீவிகளும் சும்மா பேருக்குத்தானா எங்க ஊருக்குக் கிடையாதா? உள்ளுனர்வுகளை சரிசெய்யவேண்டும். போராலும், சாராய வாராலும் வேரறுந்த எம் சமுகம் நிண்டு நிலைக்க முடியாமல் பொருளாதார அரசியல் அவலங்கள் வேறு. இவற்றை சிந்திக்க முடியாத கல்வி, தலைமை எல்லாமே வேஸ்ட் தான்.  

பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ள ஆலய பெருவிழாக்கள் மட்டும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்காக இருந்து வருகின்றன. ஆனால், இது அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கு போதாது. அதனால், சிறுவர் பூங்காவை அமைப்பது அவசியமாகியுள்ளது.

தற்போதைய நிலை

நமது பட்டிருப்புத் தொகுதியில், குறிப்பிடத்தக்க சிறுவர் பொழுதுபோக்கு பூந்தோட்டங்கள், சிறுவர் பூங்காக்கள் இல்லாமை ஒரு பெருங்குறைபாடாகும். இதை யாரும் கண்டுகொள்வதில்லை. களுதாவளை, தேத்தாத்தீவுப் பகுதியில் இவை மிக மிகச் சிறியளவில் பாதுகாப்பற்ற, பராமரிப்பற்ற ஒன்றாக காணப்படுகின்றது. ஆனால் அவை தரம் வாய்ந்தவை அல்ல.

சிறுவர் பூங்காவின் முக்கியத்துவம்

சிறுவர் பூங்காவை அமைப்பதன் மூலம், சிறுவர்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்த முடியும். குழந்தைகள் இயற்கையை அனுபவித்து, ஆரோக்கியமான முறையில் விளையாடி மகிழ்வார்கள். இதனால் அவர்களின் சிந்தனை திறன்கள், சமூகதிறன்கள் மற்றும் உடல்திறன்கள் மேம்படும்.

எமது தொகுதியில் தரமான சிறுவர் பூங்கா இல்லாமை ஒரு பெருங்குறைபாடாகும். இதை சரி செய்வது மிக அவசியம். சிறுவர் பூங்காவை அமைப்பதற்கான திட்டத்தை முறைப்படுத்தி, சரியான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.

சிறுவர் பூங்கா அமைப்பது யாருடைய பொறுப்பு?

இது யாருடைய பொறுப்பு என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கான பொறுப்பை உடையவர்கள் பலர்:

ஊர் பெரியவர்கள் - அவர்கள் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

துறைசார் அதிகாரிகள் (Divisional Secretary) - அவர்கள் இதற்கான அனுமதிகளை வழங்கி, திட்டத்தை செயல்படுத்த உதவ வேண்டும்.

பிரதேச சபை - அவர்கள் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஆரசியல் தலைவர்கள் - அவர்கள் நிதி உதவிகளை வழங்கி, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

படித்த மேதைகள் - அவர்கள் இதனை சுட்டிக்காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஏன் இவர்கள் பொறுப்பற்று இருக்கின்றனர்?

குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள பகுதிகளில், குழந்தைகள் பூங்காக்கள் போன்ற பொது வசதிகளை உருவாக்குவதில் பின்தங்குவதற்கான பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் நிறுவன குறைகளை மட்டும் அல்ல, சமுதாயத்தின் மனோபாவத்தையும் உள்ளடக்கியவையாகும். இந்த பிரச்சினைகளின் முக்கிய அம்சங்களை இங்கே ஆய்வு செய்கிறோம்.

பல்கலைக்கழகங்களில் மதிப்புமிக்க ஆய்வுகளின் குறைவு

சமூக முன்னேற்றத்தில் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஆனால், மட்டக்களப்பில் பல்கலைக்கழகங்கள் உள்ளூர் தேவைகளைப் பரிசீலிக்கும் மதிப்புமிக்க ஆய்வுகளை நடத்துவதில்லை. கல்வி நிறுவனங்கள் சமூகவியல் பிரச்சினைகளை கண்டறிந்து, நிலைத்த ஆதாரமான தீர்வுகளை முன்மொழிந்து, வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்க வேண்டும். ஏட்டுக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பாட்டுக் கல்வி செயலிழக்கும்போது, பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

கிராமத் தலைவர்களின் சமூகம் மீதான அலட்சியம்

கிராமத் தலைவர்கள், சமூகத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்தி, உள்ளூர் வளர்ச்சியை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், பல கிராமத் தலைவர்கள் மக்களின் ஆழ் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாதுள்ளனர். ஆனால் அவர்கள் வெளிப்படையான சமூக நலனுக்கும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பொழுதுபோக்கு இடங்களின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்கின்றனர். இது ஒரு தூரநோக்கற்ற சமுதாய வியாபாரிகளால் ஏற்படுத்தப்படும் பெரிய இடைவெளி ஒன்றாகும்.

அதிகாரிகளின் பொறுப்பின்மை

அரசு அதிகாரிகள் மக்களுக்கு நன்மை பயக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பொறுப்பாக இருக்கின்றனர். இங்கு, அதிகாரிகள் பெரும்பாலும் தங்கள் மேற்பார்வையாளர்களால் கொடுக்கப்படும் உத்தரவுகளை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள், சுயப்படைப்பு அல்லது சமூகப் பராமரிப்பு குறைவாகவே உள்ளது. 

அரசியல் தலைவர்கள் குறுகிய கால நன்மைகளில் மட்டும் கவனம்

அரசியல் தலைவர்கள் உடனடியாக பயன்தரும திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இதில் குழந்தைகள் பூங்காக்கள் போன்ற நீண்டகால சமூக நல திட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தேர்தல் வெற்றியில்; மட்டும் கவனம் செலுத்துவது, சமூகத்தின் உண்மையான தேவைகளை கவனிக்காத நிலையை உருவாக்குகிறது.

குடும்ப மட்டத்தில் மட்டும் சிந்திக்கும் சமுதாய மனோபாவம்

சமுதாயம் முழுமையாக தனிப்பட்ட குடும்ப நலனை முன்னிலைப்படுத்துகிறது. இதனால் பொதுவாக முக்கியமான சுகாதார மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்க பொதுமக்கள் அழுத்தம் விடுவதில்லை. இந்த குறுகிய நோக்கம் பொதுவாக மக்களின் நலனுக்கு அவசியமான கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்துவதற்கு தடையாக உள்ளது.

சிறுவர் பூங்காவுக்கான திட்டம்

சிறுவர் பூங்காவை அமைப்பதற்கான திட்டம் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். இதில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்க வேண்டும்:

குழந்தைகள் விளையாட்டுப் பகுதி: குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடக்கூடிய இடங்கள். இதில் சூழலுக்கு பாதிப்பு செய்யாத இழகான இடம்;, கட்டுமான விளையாட்டுப் பொருட்கள், சறுக்குதல்கள், ஊஞ்சல்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

உயிரியல் பூங்கா: குழந்தைகள் இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் விதமாக சிறிய உயிரியல் பூங்காவை உருவாக்கலாம். இதில் பறவைகள், குட்டி உயிரினங்கள் மற்றும் சிறிய தாவரங்கள் உட்பட இயற்கை சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

நூலகம்: சிறுவர் நூலகம் அமைத்து, அவர்களுக்கு படிப்புத்திறனை மேம்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். இதில் சிறுவர் இலக்கியங்கள், கதைகள், அறிவியல் மற்றும் கலை புத்தகங்கள் இடம்பெற வேண்டும்.

குளியல் குளம்: குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொள்வதற்கும், விளையாடுவதற்கும் பாதுகாப்பான நீச்சல் குளம் அமைக்க வேண்டும். இது அவர்களின் உடற்பயிற்சியை மேம்படுத்தும்.

பொழுதுபோக்கு நிகழ்வுகள்: சிறுவர் பூங்காவில் பரபரப்பான பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்தலாம். இதில் இசை நிகழ்வுகள், குட்டித்தியேட்டர், நாடக நிகழ்வுகள், ஆவணப்படங்கள் போன்றவை அடங்கும்.

தற்போதைய சிறுவர் பூங்காக்கள்

இன்று, வடகிழக்கு தமிழர் பகுதிகளைத் தவிர்ந்த மற்ற இடங்களில் பல சிறுவர் பூங்காக்கள் உள்ளன. சில முக்கியமானவை:

1. Viharamahadevi Park - Located in Colombo, this is one of the oldest and largest parks in Sri Lanka, featuring a children's play area.

2. Galle Face Green - A popular destination in Colombo along the ocean, offering open space for children to play.

3. Independence Square Park - Situated in Colombo, this park provides a spacious area for children to play and enjoy outdoor activities.

4. Diyatha Uyana - Located in Battaramulla, it features a playground, walking paths, and a beautiful environment along the Diyawanna Oya.

5. Gampaha Botanical Garden - Offers a lush environment and space for children to explore and play.

6. Viharamahadevi Open Air Theatre - Part of the Viharamahadevi Park, often hosts children’s events and performances.

7. Beddagana Wetland Park - Also in Colombo, it provides a unique natural setting for children to explore and learn about wetlands.

8. Mount Lavinia Beach - A great spot for families with children to enjoy the sand and sea.

9. Victoria Park (Nuwara Eliya) - Known for its beautiful gardens and open spaces suitable for children.

10. Peradeniya Botanical Gardens - Located in Kandy, it's a vast and scenic garden where children can learn about various plant species.

முடிவுரை

சிறுவர் பூங்கா அமைப்பதன் மூலம் நமது குழந்தைகளின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவர்கள் உடல் மற்றும் மனநலத்தில் நல்ல மாற்றங்களைப் பெற்றுக்கொள்வார்கள். இது மட்டும் அல்லாமல், நமது சமூகத்தின் முன்னேற்றத்தையும், சிறுவர்களின் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் உறுதிசெய்யும். எனவே, சிறுவர் பூங்காவை அமைக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது யாருடைய பொறுப்பாக இருந்தாலும், நமது குழந்தைகளின் நலன் கருதி அனைவரும் ஒன்றாக செயல்படுவது அவசியமாகும். அந்த வகையில், சிறுவர் பூங்கா அமைப்பதற்கான முயற்சியை எமது சமூகத்தில் தொடங்குவோம்.

0 comments:

Post a Comment