ADS 468x60

12 June 2024

மறக்க முடியாத உபவேந்தர்: பேருக்கில்லாமல் கடமைக்கு வாழ்ந்தவர்!

பேராசிரியர் கிட்ணன் கோபிந்தராஜா   https://web.facebook.com/Kobi.Kiddnan அவர் முன்னால் உபவேந்தர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிந்தனையாளன்,  கல்வியியலாளன். அபிவிருத்தியாளன் மற்றும் ஒரு நிருவாகத் திறமைசாலி இதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக்கிடையாது. அண்மையில் எனது லிங்ட்னில் காணக்கிடைத்தது. அவரைப்பற்றி இன்னும் தேடத்துவங்கினேன்.

அதனூடாக, ResearchGate எனும் ஒரு ஆய்வுத்தளம் அதில் கண்டுபிடித்தேன். இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆய்வுத்தளம். இதில் எத்தனை விரிவுரையாளர்களின் பப்ளிக்கேசன் உள்ளது என்பதனை வைத்து அவர்களின் ஆய்வுத்திறனை உலகளவில் மட்டிடலாம்.

அப்போது ஒரு தமிழ்ப் புத்தகத்தினை PDF வடிவில் பார்தேன் 'கணிதம் கடினமானதா?' (https://www.researchgate.net/.../353346044_kanitam...) என ஒரு புத்தகம்.

அதனை எழுதியவர் வேறுயாருமல்லதவறயரல நான் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய பேராசிரியரின் ஒரு புத்தகம். உண்மையில் அதனை வாசிக்கத் துவங்கினேன். அதனை எவ்வளவு அழகாக, இலகுவாக, விளங்கும் வண்ணம் அவர் எழுதிக்கொண்டு போகின்றார்!. பெருமையடைகின்றேன்.

இப்படி ஆரம்பிக்கின்றார் 'கணிதம் என்பது மிகவும் கஷ்டமான பாடமெனவும், பெரும்பாலான பாடநெறிகளில் அது கட்டாய பாடமாக இருப்பதால் வேறு வழியின்றி அதில் சித்தியடைய வேண்டும் என்பதற்காகவும், கணிதத்தில் சித்தியடைந்தால் தான் ஏதாவதொரு நல்ல வேலை எடுக்கலாம் என்பதற்காகவுமே வேண்டாவெறுப்பாக எம்மில் பலர் அதனை கற்கின்றனர். இயற்கையுடன் இரண்டற கலந்திருக்கும் கணிதமானது எமது அன்றாட வாழ்வியலில் ஒரு தவிர்க்க முடியாத அம்சமென்பதையும் மனித நாகரீக வளர்ச்சியில் அதன் அளப்பரிய பங்களிப்பு பற்றியும் எம்மில் பலர் உணர்வதில்லை.' மிக எழிதான ஆழமான புரியக்கூடிய மற்றும் வாசிக்கத்தூண்டும் ஆரம்பம்.

இப்படி ஆரம்பித்து அதனை அத்தனை எழிய முறையில் எழுதி இந்த சமுகத்தின் அடைத்திருந்த கண்ணை திறந்து விடுகின்றார். இவர்களைப் போன்றோரைத்தான் நான் மனம் திந்து பேராசிரியர் என அழைக்க தோணுகின்றது. அது சமுகத்தின் பாலும் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத விருப்பு, பொறுப்பு, கடமை என்பதை உள்ளடக்கியதாகும்.

இன்று உலகெங்கும் சென்று தனது கல்விச்சேவையினை தடம்பதித்தாலும், தனது எண்ணமும் சிந்தனையும் இங்குதான் சுற்றித் திரிகின்றது என்பதனை என்னுடன் உரிமையோடு உறவாடும் நேரங்களில் அடிக்கடி கோடிட்டுக்காட்டுவார்.

எனக்குத் தெரிந்தவகையில் இவர் இருந்தகாலம் பல்கலைக்கழகம் மளமளவென வளர்ந்ததனை கண்ணால் பார்த்தேன், இவர் சென்றபின்னர் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் மளமளவென வளர்ந்ததனைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் மீண்டும் பல்கலைக்கழகம் வளர வரமாட்டீர்களா என பலர் இங்கு ஏங்குகின்ற வகையில் அந்த பெரிய இடைவெளி பளிச்செனத் தெரிகின்றது. அது நீங்கள் அன்றி யாரும் நிரப்பமுடியாதது.

எனது சக்திக்கு உட்பட்டு உங்களை ' எங்கிருந்தாலும் வாழ்க' என வாழ்த்தமட்டும் முடியும். இன்னும் பல சமுகப்பணிகளை நீங்கள் முன்னெடுக்கவேண்டும், பேராசிரியர் என்ற வகையில். ஏன் எனில் நீங்கள் உங்கள் நல்லெண்ணங்களை பல தடைவ என்னுடன் பகிர்ந்துகொண்டதன் நிமித்தம் அதனை மீண்டும் வேண்டுகின்றேன். உபவேந்தராக மீண்டும் வரவேண்டும் அந்த அபரிவித வளர்சியினை உங்களைப்போன்றவர்களால் மாத்திரம் முன்னெடுக்க முடியும் அதற்கும் தன்னலமற்ற மனம் வேண்டும்.
ஒரு சட்டபீடம், ஒரு கடற்றொழில் மற்றும் நீரியல் வழங்கல் திணைக்களம், போன்றவற்றுடன், கிழக்குப் பிராந்திய பொருளாதார மற்றும் சமுக ஆய்வுமையம் என்பனவற்றினைக் கொண்டுவரனும். என்பன நாம் எதிர்கால முன்னேற்றத்துக்காக கொண்டுவரவேண்டிய துறைகள், திட்டங்கள். நான் இவை சம்மந்தமாக இப்போதுள்ள பலரிடமும் பேசினேன், வேண்டுகோள்விடுத்தேன் ஆனால் அவற்றை கணக்கெடுக்கவில்லை.

வயம்ப பல்கலைக்கழகத்தில் ஒரு ஒரு கடற்றொழில் மற்றும் நீரியல் வழங்கல் பிரிவு இருக்கும் போது கடலாலும் களப்பாலும் நிரம்பிக்கிடக்கும் இந்த பிராந்தியத்தினை வளரச்செய்ய அந்தப்பிரிவு எமது பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடாதா? யாருக்கு அக்கறை உண்டு?

இந்தப்பிரதேசத்தின் தேவை, அதன் எதிர்காலம், பிரச்சினைகள் அவற்றை அறிந்து அதற்கு அமைவாக எமது பொருளாதார, சமுக வளர்சியினை நிருணயிக்க விஞ்ஞான ரீதியயான இயங்கு நிலை ஆய்வகம் இன்னும் இல்லை யாராலும் மறுக்க முடியுமா! அதனால்தான் தேவையில்லாத அபிவிருத்தியும் தேவையில்லாத அனர்த்தங்களும் இடம்பெறுவது சாட்சியாக உள்ளது. ஆக நமக்கு ஒரு ஆய்வு நிலையம் தேவையா இல்லையா?

பொதுமக்களாகிய நமது வேண்டுதலை நிராகரிக்கும் மற்றும் செவிசாய்காத அளவுக்கு அது அந்த மக்களின் வரிப்பணத்தில் இயங்குவதனை மறந்து நிற்க்கும் ஒரு கொடூரத்தினை தட்டிக்கேட்க யாரும் இல்லாத நிலையினை நினைத்து இந்த மக்களில் ஒருவனாய் மனம் வருந்துகின்றேன். இந்த இடத்தில்தான் உங்களைப்போன்றவர்களின் தேவை உணரப்படும் இடைவெளி தெரிகின்றது.

ஆகவே உங்களைப்போல மிகத்துரிதமாக வினையாற்றும் செயல்வீரன் இலங்கையின் கல்விப்புலத்தில் இல்லாமை இவற்றையெல்லாம் பொதுவெளியில் எழுதவைத்துள்ளமை எமது துரதிஷ்டமே.

0 comments:

Post a Comment