ADS 468x60

10 June 2024

பவளவிழா கொண்டாடும் எருவில் கண்ணகி மகா வித்தியாலயம். கருத்தில் எடுக்கவேண்டிய கிராம்!

'எருவில் கிராமம்' நான் நேசிக்கும் அயல் கிராமங்களில் முதன்மையானது. பல கலைஞர்களும், கவிஞர்களும், சிறந்த சிந்தனையாளர்களும், பண்பாளர்களும், சிரத்தையுள்ளவர்களும், தமிழ் உணர்வாளர்களும் மற்றும் கல்விமான்களும் அதிகம் வாழ்ந்த மற்றும் வாழும் கிராமம். 

என்னுடைய பார்வையில் ஏன் ஒரு கிராமத்தினை எமது பகுதியில் பெரிதாக நேசிக்கின்றேன் என்றால், அதற்று பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டுவேன், அவர்களிடம் இன்னும் வளர்ந்துவரும்; சக மனிதர்களை மதித்தல், ஆதரித்தல், அத்துடன் தமிழருக்கே 'அதிலும் மட்டு மண்ணுக்கு உரித்தான' கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்பனவற்றினைப் பேணுதல் மற்றும் வளர்தல், பொருளாதார ரீதியாக ஒருமித்த வளர்சியில் முன்செல்லல் (அதிகரித்த வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வருவாய், சுயதொழில்மேன்மை, கூட்டுத்தொழில், சிறிய தொழில்பேட்டைகளை நிறுவல் மற்றும் பல) கல்வியில் வளர்சி, வேறு கிராமத்தவரின் நல்ல அனுபவங்கள், படிப்பினைகளை வாஞ்சையோடு உள்வாங்கி வளர்தல், பெண்கள் மற்றும் சிறுவர்களை பொக்கிசமாய் பாதுகாத்தல் மற்றும் அரசியலில் ஈடுபடும் தலைமைத்துவப் பாங்கு என்ற இன்னோரன்ன விடயங்களைக் குறிப்பிடுவேன். இவைகள் அனைத்துக்கும் உரித்துடைய தமிழ் கிராமம் இது.

'தென் எருவில் பற்று', என அழைக்கும் பிராந்தியத்தின் அடைமொழிக்குச் சொந்தமான ஒரு எழுச்சிமிக்க கிராமம். 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பார்கள். அந்த வாவிமகளே மாலையாக ஊரைச்சுற்றி அழகு ஊட்டும் ஒரு செழிப்பான கிராமம். வயல்நிலமும் செழிப்பான குழங்களும் இந்த ஊருக்கு வலுச்சேர்கும் இயற்கை ஆதாரங்கள் என்றால் அது மிகையில்லை. 

கைத்தறி நெசவுக்கு பேர்போன ஒரு கிராமம் என்றால் விரைவாய் மனக்கண்ணில் வருவது எருவில் கிராமம்தான், அது ஒரு பெரிய தொழில் அடையாளம். அதுபோல நாட்டுவைத்தியத்தின் சொந்தக்காரர்கள். இன்னும் ஒரு சிலரால் அது முன்னெடுத்து வருவது எமது இறுதி மூச்சை காப்பாற்றுவதுபோல தெரிகின்றது.

அதுபோல பிரபல ஈழத்துக் கவிஞர் எருவில் மூர்தி வாழ்த்து புகழ்சேர்த மண். அவர் 1956 ஜூன் 8 இல் மட்டக்களப்பில் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இரு கண்களையும் இழந்த போதிலும் இறுதிவரை தமிழ் இலக்கியப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டுக்கூத்தும் கண்ணகி அம்மன் சடங்கும் தமிழ்ர் மரபாக காத்து அதனூடே தமிழுக்கு மகிடம் சூடும் பொன்னான பூமி. இதை எல்லாம் எழுதும் போது எனது கண்களில் இப்போது நீர்கொட்டுகின்றது. ஏன் என்றால் இத்தனைக்கும் சொந்தக்காரர்களா எம் தமிழர்கள் என நினைத்து.

உடுகுச்சிந்து நூலின் 71 ஆம் பாடல்

பட்டிநகர், தம்பிலுவில், காரைநகர், வீரமுனை
பவிசுபெறு கல்முனை, கல் லாறு, மகிழூர்,
எருவில், செட்டிபாளையம், புதுக் குடியிருப்பு, செல்வ
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை,
அட்டதிக்கும் புகழு வந்தாறுமூலை
அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும்
வடிவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே

இக்கிராமம் கொடுத்துவைத்த ஒன்று ஏனெனில், இது ஒரு சிறுநகரான களுவாஞ்சிக்குடிக்கு தெற்கே அடுத்துள்ள கிராமம் ஆகையால் சுகாதார, கல்வி, போக்குவரத்து, பொலிஸ், பிரதேச செயலகம் என அனைத்து பிரதான சேவைகளையும் இலகுவில் பெறக்கூடிய ஒரு பெருமைக்குரிய கிராமம்.

இத்தனை முக்கியமாக ஒரு கிராமம், பல கால யுத்த அனர்த்தத்தில் சிக்கிச் சின்னாபின்னமாயிருந்து, பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்ததை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அப்படி இருந்தும் மட்/பட்/ எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் வெற்றிகரமாக 75 வருட அகவை காணுவது எத்தனை பெருமைக்குரியது! கல்வி, கலை, விளையாட்டு என அனைத்திலும் இடம் பிடித்து இப்பாடசாலையின் வெற்றியிலும், சாதனைகளிலும், வளர்ச்சியிலும் பங்காற்றிவரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களையும் மனமுவந்து தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இக்கல்வித்தாயின் வெற்றிப் பயணங்களும் சாதனைகளும் தொடர பிராத்திப்பதுடன் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.

எனது பார்வையில் கல்விச்சமுகத்தின் கடமைகள்!

  • இவ்வாறு இருந்தாலும், சில வழிகளில் இந்த ஊர் இன்னும் முன்னேற்றமடையலாம் என்பது எனது அவிப்பிராயம்.இங்கு அதிகம் வெளிநாடுகளில் திறன் அற்ற வகையில் தொழில்புரியும் உழைப்பாழிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் திறனைவளர்பதன் மூலம் நிச்சயம் 10 மடங்கு அதிக வருவாயினை ஈட்டமுடியும். 

  • இங்கு மீன்பிடியினை நாம் வளர்தெடுக்கலாம். வெறுமனே மீனைப்பிடித்து விற்று சிறுவருவாயை காண்பதற்கு அப்பால் அதனை காயவைத்து பக்கட் பண்ணி உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

  • கைத்தறி நெசவு இதனை முன்னேற்றவேண்டும். இன்று இலங்கைக்கு வருவாய் தரும் துறைகளில் இந்த ஆடைத்தொழில் முதன்மைவகின்றது. இந்த கிராமத்தினை ஒரு நெசவு கப் ஆக மாற்றலாம். இப்போது மின்சாரத்தில் இயங்கும் நெசவுகள் வந்துள்ளன அதற்கு உள்ளுர் முதலீட்டாளர்களை கவரலாம். அதுபோல இதனை நாம் வெளிக்கொணர்வதன் மூலம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகளை ஈர்த்து அதிக வருமானத்தினையும் ஈட்டலாம்.

  • இக்கிராமத்தின் இயற்கை வனப்பினையும் மீன் உற்பத்தியினையும் சமமாக பேண ஆற்றங்கரைகளில் இளைஞர்கள் பாடசாலைச் சமுகத்தின் ஒத்துழைப்புடன் மங்று (கண்ணா) மரங்களை நட்டு பாதுகாக்கவேண்டும்.
  • கல்விசார் மாநாடுகள், ஆய்வுகள், எழுத்தாளர்கள் இவற்றை பழையமாணவர்கள் பல்கலைக்கழகம், மற்றும் புத்திஜீவிகபளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைத்து அடிக்கடி எம்மை நாமே அளவிட்டுக்கொள்வதுடன் எமது எதிஜர்காலத்தினையும் அவதானிக்கலாம்.

  • எருவில் என்ற ஊரினைத் தேடும்போது கண்டுகொள்ளக்கூடிய அளவில் அதன் அத்தனை அம்சங்களையும் தரவுகளுடன் இணையத்தினை உருவாக்கி தரவேற்றம் செய்வதன் ஊடாக எமது கிராமத்தின் அடையாளங்களை, வரலாறாக பதிவுசெய்யலாம். அதற்கான ஒரு குழு நியமிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை செய்தால் நீங்கள் மற்றக் கிராமங்களுக்கு முன்னோடியாக இருக்கலாம்.

  • எருவிலில் ஒரு தமிழரின் பாரம்பரியங்களைப்பேணும் ஒரு அருங்காட்சியகத்தினை நிறுவலாம். ஏனெனில் இது பட்டிருப்புத் தொகுதியின் முத்துப்போல் நடநாயகமாக உள்ள ஒரு கிராமம். அத்துடன் இன்னும் பாரம்பரியத்துடன் இயங்கும் ஒரு பிரதேசம்.

  • இங்கு நெல் உற்பத்தி அதிகம் உள்ள கிராமம் ஆகையால், அடிக்கடி ஆற்றின் உப்புத்தண்ணி உட்புகுந்து பல தடவைகளில் அழிவடைந்து வருவது தெரிந்தும் நாம் அதை செய்யாமல் இருக்கின்றோம். உங்கள் தலைமைகளிடம் அதனை ஒருமித்த குரலில் தெரிவிக்கவேண்டும். அப்போது நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் உயர, நெல் உயரும், நெல் உயர கிராமம் உயரும்.

  • 'வெள்ளம் வருமுன் அணைகட்டவேண்டும் இல்லையா' இன்னும் வெள்ளத்தில் பாதிக்கும் ஒரு கிராமமாக இருக்கின்றோம் அதற்கான அனர்த்த முன்னாயத்தங்களை முன்னெடுக்கவேண்டும். வடிகான்களை திட்டமிட்டு செயற்படுது;தவேண்டும். இதனையும் அந்த பழைய மாணவர் குழுவினால் அறிக்கையாக தயார்செய்து எந்த அபிவிருத்தி நடவடிக்கையினை செய்யும்போதும் அது கருத்தில்கொள்ளப்படும்படியாக இருந்தால் வெள்ளத்தால் பாதிக்கப்படாத நல்ல உள்ளங்களைக்கொண்ட ஊராய் மிளிரலாம்.

  • பாடசாலை மாணவர்களை வெறுமனே பாடசாலைக்கல்விக்குள் புதைத்துவிடாமல், சிறுவயதிலேயே உலகத்தினைக் காட்டவேண்டும். ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் எருவில் ஊருக்குள் அவர்களை வைத்திராமல், யாதும் ஊரே என, பல மேலதிகக் கலைகளையும், அழிந்துபோகும் பாரம்பரிய நாட்டு வைத்தியம், நாட்டார் கலைகள் மற்றும் பாரம்பரியத் தொழில்முறைகளில் பயிற்றுவிக்கவேண்டும்.

  • எல்லாவற்றுக்கும் மேலாக ஏழை என்கின்ற இல்லாத ஜாதியை இல்லாமல் செய்யவேண்டும். பாடசாலைச் சமுகம் பழைய மாணவர்கள் தொழில் ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக அவர்களை வலுப்படுத்த தொடர்புகளைப் பேணவேண்டும். அவர்களை உரியவர்களுடன் கொண்டு சேர்த்து அவர்களுக்கு உறுதுiயாக இருக்கவேண்டும். ஒரு வருடத்தில் 10 ஏழைக்குடும்பங்களை மீட்டெடுக்க திட்டமிடுங்கள்.

  • வெளிநாட்டு தொழிலாளர் அமைப்பினை நிறுவுங்கள். ஆதன் மூலம் அங்கு உள்ள நம்பகமாக தொழில்களை கண்டறியும் தொடர் நடவடிக்கையினை முன்னெடுத்து, இக்கிராமத்தில் ஆர்வமாக உள்ள இளைஞர்களை உள்ளீர்துக்கொள்ளுங்கள். ஆங்கு தேவையாக உள்ள திறன் என்னவென நேரத்துத்து நேரம் தெரியப்படுத்துங்கள். ஆதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகப்படுத்தலாம். நும்பகமான தொழில் முறையை மேற்கொள்ளலாம்.

  • இறுதியாக நன்னு கற்ற, ஊர்பற்றுள்ள, தெழிவான அபிவிருத்திச் சிந்தனையுள்ள, விழுமியங்களையும், கலாசாரத்தினையும் அறிந்த இளைஞர் யுவதிகளை தலைவர்களாக உருவாக்குங்கள். அவர்களை கற்கும்போதே அடையாளம் கண்டு உரமூட்டி வளர்தெடுங்கள்.

இவற்றை இந்த கல்விச் சமுகத்தின் மூலம் விதைபோட்டு விழிப்பூட்டவேண்டும். அது உங்களின் கடமை, அந்தக்கடமை நிறைவேறும்போது அந்த கல்வித்தாய் நூற்றாண்டை அடைந்த மகிழ்சியில் திழைப்பாள் என்பதில் என்னய்யா ஐயம்!

'நிலைறோனதும் ஒழுக்கத்துடனும் கூடியதுமான கல்வித்தரத்தினை மாணவர்கள் மத்தியில் மேம்படுத்துவோம்'

பாசமிகு தோழன் எஸ்.ரி.சீலன்


0 comments:

Post a Comment