ADS 468x60

07 June 2024

குழந்தைகளை இப்படியா துன்புறுத்துவது?

எல்லாருக்கும் வணக்கம்!

இன்று உங்களோட பேசுற விஷயம், நம்ம மனசாட்சியையே உறுத்தும் ஒன்னு. அது, குழந்தை துன்புறுத்தல். இலங்கையில் இப்போ இந்த பிரச்சனை ரொம்ப கவலைக்கிடமா மாறிஇருக்கு.

கடந்த வருஷம் ஜனவரி முதல் அக்டோபர் வரை 8,000 குழந்தை துன்புறுத்தல் கேஸ்கள் ரிப்போர்ட் பண்ணப்பட்டிருக்கு. இது 2022ல 10,500 ஆகவும், 2021ல 11,200 ஆகவும் உயர்ந்திருக்கு. இது வெறும் கணக்குகள் இல்லை. இது, அப்பாவி குழந்தைகளோட கஷ்டமும், வலியும் துன்புறுத்தலும். இதில, பெரும்பாலான கேஸ்கள் கொழும்பு மாவட்டத்துல இருந்து ரிப்போர்ட் பண்ணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை துன்புறுத்தல் என்பது மன ரீதியான சித்திரவதை, உடல் ரீதியான தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், கொலைனுன்னு பல கொடுமையான வடிவங்கள்ல நடக்குது. இது பெரும்பாலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமா இருக்க வேண்டிய வீடுகளிலேயே நடக்குறது ரொம்ப துன்பம் தரும் விஷயம். இன்னும் வேதனைக்குரிய விஷயம் என்னான்னா, இந்த துன்புறுத்தலை செய்யறது, நெருங்கிய உறவினர்கள் தான். குறிப்பாக அண்ணன், மாமா, மைத்துனர், அப்பா, தாத்தானுனு இருக்கலாம்.

ஆனா, இதையெல்லாம் எதிர்க்குறதுக்காக, நம்ம அரசாங்கம் தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகார சபையை (National Child Protection Authority - NCPA)  உருவாக்கியிருக்கு. இந்த அதிகார சபையோட ஹெல்ப்லைன் நம்பர் 1929. இந்த நம்பருக்கு போன் பண்ணி, குழந்தை துன்புறுத்தல் நடக்குறதை பற்றி யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், இவ்வளவு வசதியும் போதுமானதாக இல்லை. இந்த அதிகார சபையோட அதிகாரத்தையும், வசதியையும் இன்னும் அதிகப்படுத்துறது ரொம்ப முக்கியம்.

குழந்தைகளை பாதுகாக்கிறதுக்கு நான்கு முக்கியமான சட்டங்கள் இருக்கு. ஆனால், அவற்றை உடனடியா மாற்றியமைக்க வேண்டியது அவசியம். குழந்தை துன்புறுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கிற விதிகள் வேணும். வெளிநாடுகளில, குழந்தைகளோட சாட்சிக்கு அதிக மதிப்பு கொடுக்கறாங்க. அங்க, ஒரு குழந்தையை ஐந்து வயசுல துன்புறுத்தினவனுக்கு, அவள் அல்லது அவன் 50 வயசுல கூட கேஸ் போட முடியும்.

இந்த பிரச்சனையை எதிர்க்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துறது மிக முக்கியம். பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு சின்ன வயசுலேருந்து, பாலியல் தொல்லைன்னா என்ன, தொடக் கூடாத தொடுதல் பற்றி கற்றுக் கொடுத்தால், அவங்க துன்புறுத்தலை கண்டுபிடிச்சு, இலகுவாகச் சொல்ல முடியும்.

இந்த பிரச்சனையை சரிசெய்ய, இப்போதே நடவடிக்கை எடுக்கணும். குழந்தை துன்புறுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை கடுமையா இருக்கணும். ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை கண்டறிஞ்சு, உடல் ரீதியான தண்டனை என்பது துன்புறுத்தலின் ஒரு வடிவம் என்பதை புரிஞ்சுக்கொள்ள பயிற்சி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகவும், மதிப்புடனும், அவர்கள் குரல் கேட்கப்படுவது போல் இருக்குற சூழலை உருவாக்கணும்.

இறுதியாக, குழந்தை துன்புறுத்தல் என்பது நம்ம சமூகத்திலிருந்து துடைத்தெறிஞ்சே ஆக வேண்டிய கொடுமை. இதை ஒழிக்க, அரசாங்கம், காவல்துறை, கல்வியாளர்கள், மக்கள்னு எல்லோரும் ஒண்ணா சேர்ந்து பாடுபட வேண்டியது அவசியம். நெல்சன் மண்டேலா சொன்ன மாதிரி, 'ஒரு சமூகத்தோட உண்மையான குணத்தை, அது தன்னோட குழந்தைகளை எப்படி நடத்துதுன்னு பார்ப்பதன் மூலமே தெளிவாக புரிஞ்சுக்கொள்ள முடியும்.'  குழந்தைகள் எல்லோரும் பயமில்லாம, நம்பிக்கையுடன் வளரக்கூடிய சூழலை உருவாக்க பாடுபடுவோம்.

நம்ம குழந்தைகளை பாதுகாப்பது நம்ம கடமை மட்டுமில்லை, அது நம்ம மனிதாபிமானத்தோட அளவுக்கோல். குழந்தை துன்புறுத்தலை இப்போதே முடிவுக்குக் கொண்டு வர ஒன்றுபட்டு நிற்போம்!


0 comments:

Post a Comment