எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் பழமையான சுதந்திர நாடு மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் இரண்டாவது பெரிய நாடு. 1977 இல் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய மங்கிஸ்டுவின் இராணுவ ஆட்சி, நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, எத்தியோப்பியா உலகின் ஏழ்மையான நாடாக இருந்தது. எத்தியோப்பிய மக்கள் தொகையில் 50 வீதமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்தனர். பஞ்சம், வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மையால் ஆயிரக்கணக்கானோர் பட்டினியால் இறக்கும் ஒரு பரிதாபகரமான நாடாக எத்தியோப்பியா மாறி இருந்தது.
மெங்கிஸ்டு ஹைலே மரியமின் இராணுவ ஆட்சிக் குழு, அதுவரை இருந்த ஜனநாயகத்தை ஒழித்து, சர்வாதிகாரத்தின் தொடக்கத்தில் இருந்தது. அவர் எதிர்க்கட்சி அரசியல் இயக்கங்களை அடக்கி, பொதுமக்களை படுகொலை செய்தார். ஜனாதிபதி மெங்கிஸ்டுவின் ஆட்சி இரத்தத்திலும் கண்ணீரிலும் ஆண்டது.
எத்தியோப்பியாவின் ஒரு மாநிலமான எரித்திரியா, சுதந்திரத்திற்காக போராடியது, மற்றும் எரித்திரியர்களின் விடுதலை இயக்கங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான அடக்குமுறைக் கொள்கையைப் பின்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடிஸ் அபாபாவின் தெருக்களில் கொல்லப்பட்டனர். அவர்களுக்காக செலவழிக்கப்பட்ட வெடிமருந்துகள் வீணான வெடிமருந்துகளாக கருதப்பட்டன. புதிய புதிய வரிகள்; அறிமுகப்படுத்தப்பட்டது. வரி செலுத்தாத பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் உடல்கள் ஹைனாக்களுக்கு உணவுக்காக காடுகளில் வீசப்பட்டன.
மெங்கிஸ்டுவின் ஆட்சியின் கீழ், எத்தியோப்பியாவின் மொத்த தேசிய உற்பத்தியில் 46 வீதம் இராணுவச் செலவுக்காக ஒதுக்கப்பட்டது. 1983-85 பஞ்சத்தில் 1.2 மில்லியன் எத்தியோப்பியர்கள் இறந்தனர். நான்கு இலட்சத்திற்கும் அதிகமான திறனுடையோர்; மற்றும் புத்திஜீவிகள் எத்தியோப்பியாவை விட்டு வெளியேறினர். 2009 ஆம் ஆண்டில், உள்நாட்டுப் போர்கள் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இம்மக்களின் பெரும் சிரமத்திற்கு மத்தியில 2016 ஆம் ஆண்டு; ஒரு அதிசயம் நடந்தது. அது படித்த இளைஞராக இருந்த அபி அகமது ஆட்சிக்கு நியமிக்கப்பட்டார். ஏழை மக்களின் ஆசியுடன் எத்தியோப்பியாவை தலைகீழாக மாற்றினார் அபி அகமது.
புத்திஜீவிகளின் பங்கேற்புடன் நாட்டில் வெளிப்படையான ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. எரித்திரியாவுடனான போரை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர அபி அகமது நடவடிக்கை எடுத்தார். எத்தியோப்பியாவிற்கு கடல் அல்லது துறைமுகம் இல்லை. அண்டை மாநிலமான ஜிப்ரால்டருடனான ஒப்பந்தம் எத்தியோப்பிய நகரமான அடிஸ் அபாபாவையும் ஜிப்ரால்டர் துறைமுகத்தையும் நெடுஞ்சாலையுடன் இணைத்தது.
புதிய முதலீடுகளுக்காக பல தொழில் ஊக்குவிப்பு வலயங்களை தொடங்குவதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதன் மூலம், எத்தியோப்பியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 277 வீதமாக உயர்ந்தது. அதற்கு விகிதாச்சாரத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்து ஐந்தாண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஐரோப்பாவில் இரண்டாவதாக இல்லாத நகரங்கள் எல்லாம் எத்தியோப்பியாவில் பிறந்தன.
கடந்த கொரோனா தொற்றின் போது இலங்கையில் கைவிடப்பட்ட பல ஆடைத் தொழிற்சாலைகள் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவின் தொழில் நகரங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று, எத்தியோப்பியா பணக்கார மற்றும் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட ஒரு செழிப்பான நாடு. ஐந்து ஆண்டுகளில், ஒரு ஜனரஞ்சக ஆட்சியாளரும் அவரது குழுவினரும் பூமியில் உள்ள நரகத்தை பூமியின் சொர்க்கமாக மாற்றியுள்ளனர்.
உலகிலேயே மிகவும் வங்குரோத்தான நாடாக மாறிவிட்ட நம் நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான வளர்ச்சிப் போருக்கு மக்களைத் திரட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாட்டின் முதல் மற்றும் அடிப்படை நிபந்தனையாக இருந்த ஊழல் மற்றும் மேட்டுக்குடிகளிடம் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான முதல் படியில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இலங்கை வாக்காளர்கள் எடுக்கும் சரியான தீர்மானத்தின் அடிப்படையில் இன்னும் மூன்று நாட்களில் இலங்கையை உலகின் மகிழ்ச்சியான நாடாக மாற்ற முடியும்.
0 comments:
Post a Comment