க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (25ஆம் திகதி) முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பதட்டமில்லாமல் அனைவரும் சித்திபெற முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
விழிப்பாக இருங்கள்: பரீட்சை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதை மீறினால் 5 வருடங்களுக்கு பரீட்சைகளுக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தேர்வு நடைபெறும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு செல்லுங்கள். அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள்;.
அனர்த்தம் காரணமாக மாணவர் ஒருவர் பரீட்சைக்குத் தோற்றுவது தடுக்கப்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசேட ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை அறை இலக்கங்களான 0113 668020, 0113 668100, 0113668013, 0168013, அல்லது பரீட்சை திணைக்கள அவசர இலக்கமான 1911க்கு அழைக்கவும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகளினால் ஏற்படக்கூடிய தடைகளை தவிர்த்து இவ்வருடம் உயர்தர பரீட்சையை நடாத்துவதை மையப்படுத்தி விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளன. 333,185 விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
அதில் 253,390 விண்ணப்பதாரர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,795 தனியார் விண்ணப்பதாரர்கள்.
பரீட்சைக்கு இடையூறு விழைவித்து உரிய சட்டங்களை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் இருப்பின் 0112421111 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாருக்கு அறிவிக்குமாறும், பரீட்சை திணைக்களத்தின் 1911 அல்லது 0112784208, 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாம் எமது மாணவச் செல்வங்கள் வளம்பெற ஒத்தாசையாய் இருப்போம், அவர்களை வாழ்துவோம்.
0 comments:
Post a Comment