இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுத் தேர்தலில் அரசாங்கம் பெற்ற வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. அமைச்சரின் சிறப்புரிமைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
இப்படியிருக்கையில், அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைக்கும் பிரேரணை குறித்து இங்கிருப்பவர்களிடமிருந்து குறைந்த முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்துள்ளது. தொலைதூர மாகாணங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகள் இல்லாமல் எப்படி நாடாளுமன்றத்துக்கு வர முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதிகாரப்பூர்வ கார்கள் இல்லாமல் எப்படி வேலை செய்வது என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத் தொடரின் மதியம் நாடாளுமன்றத்தில் உணவு வழங்கப்படவில்லை என்று கூறுவதையும் கேட்க்கக்கூடியதாய் உள்ளது.
கிரேட் பிரிட்டனின் பாரம்பரியத்தின்படி சிம்மாசன உரையை ஜனாதிபதி ஆற்றுவார். குதிரை வீரர்கள் அணிவகுத்துச் செல்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது, ஜெய மங்கலக் காதைகள் முழங்குவது போன்ற பாரம்பரிய விழாப் பாரம்பரியத்தை புதிய ஜனாதிபதி கைவிட்டதை சிலர் பாராட்ட விரும்பவில்லை விமர்சிக்கின்றனர்.
தேவையற்று பூசப்பட்ட மன்னராட்சி மரபுகளைக் காப்பாற்ற அரசு செயல்படக் கூடாது. நடந்து வரும் தேவையற்ற கோமாளித்தனங்களை விரைவில் தடுத்து நிறுத்தி, சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கோரும் மாற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசர்களின் கிரீடங்கள் அரண்மனையின் ஜன்னலிலிருந்து தெருவில் விழுந்து சாக்கடையில் மிதப்பதை நாட்டு மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக இந்த நாட்டின் ஆட்சியில் சோர்வடைந்த மக்கள், 2022 இல் இந்த அமைப்பை மாற்றக் கோரி தெருக்களில் இறங்கினர்.
ஒரு நாட்டின் பெருமை என்பது குதிரைப்படையையோ அல்லது ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்துவதையோ சார்ந்து இருப்பதில்லை. அந்த நாட்டு மக்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு நிம்மதியாக உறங்கச் சென்றார்களா என்பதைப் பொறுத்தது. இதை இன்னும் சொல்வதானால் 'நெல் உயரக் குடியுயரும் குடியுயரக் கோன் உயர்வான்' என்பதற்கு அமைய மக்கள் சிறப்பாய் வாழ வழிவகுக்கவேண்டும்.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் குடியிருந்து வரும் சிலர் நாடாளுமன்றத்துக்கு கூட ஓழங்காக வருகைதரவில்லை. நாடாளுமன்ற விவாத நாட்களில், எம்.பி.க்கள் நாற்காலிகளை சுழற்றிச் சுழற்றி சூடாக்குவதை நாட்டு பொதுமக்கள் பார்தனர்;. நாட்டைப் பாதிக்கும் முக்கியமான விவாதம் நடைபெறும் பல நாட்களில், தேவையான கோரம் இல்லாத நாடாளுமன்றத்தை நாம் பார்த்திருப்போம். நாட்டின்; தலைவர் நாடாளுமன்றத்துக்கு வரும் நாளில்தான் அங்கு வரும் எம்.பி.க்கள் இருந்ததைப் பார்தோம்.
சில எம்.பி.க்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கும் உதவித்தொகையை இன்னும் கூட்டிப் பெறவும் பாராளுமன்றத்தை சுற்றி வருகிறார்கள். மக்களால் நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் எப்படி நடந்து கொண்டாலும் கடந்த 76 வருடங்களில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் எம்.பி.க்களின் பாக்கெட்டுகளை பொதுமக்களின் பணத்தால் நிரப்பியே வந்துள்ளது. அந்தச் செயலாலர், இந்தச் செயலாலர் போன்றோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மக்களைப் புத்துயிர் பெறச் செய்யும் அரசியல் கட்சிகளும் சட்டங்களை இயற்றியதை மறந்துவிடக் கூடாது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்த கொடுப்பனவாக ரூ.54,285 வாகவும், அலுவலக கொடுப்பனவு 100,000 ரூபாயாதகவும், தொலைபேசி கொடுப்பனவு 50,000 ரூபாயாதகவும், ஒரு அமர்வுக்கு வருகைக் கொடுப்பனவு ரூ.2,500. எரிபொருள் கொடுப்பனவு 33,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது மற்றும் தூரத்தைப் பொறுத்து அதிகரிக்கிறது. அதுதவிர சுகாதார வசதிகள் இலவசம். இத்துடன் கூடுதலாக ஓய்வூதியம் கிடைத்தது. இப்படி குறிப்பிடுமளவான கொடுப்பனவினை மாத்திரமே கூறுகின்றேன்.
ஆகவே இவற்றைத் துறந்து நாட்டின் மீட்சிக்காக அதிகபட்ச அர்ப்பணிப்பை வழங்க தயாராக இருப்பதாக திசைகாட்டி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இனிமேல், நாட்டுக்காக அர்ப்பணிப்புகளைச் செய்யத் தயாராக இருக்கும் உண்மையான அரச ஊழியர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதனையே பலருக்குப் படிப்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment