ADS 468x60

11 August 2026

மாமாங்கம் அருள்தரு ஈஸ்வனே

மீன்மகள் பாட ஆடும் தென்னை

மேவியே தென்றல் வந்து பாடும்

தேனகர் வந்துறை சிவசிவனே

மாமாங்கம் அருள்தரு ஈஸ்வனே


ஓம் ஓம் நமசிவாயய சிவ

ஓம் ஓம் நமசிவாயா

ஓம் ஓம் நமசிவாயய சிவ

ஓம் ஓம் நமசிவாயா


ஆடியில் தேரினில் நீவருவாய்

ஆறிட என்வினை நீயருள்வாயே

சேற்றினில் ஆடிடும் தீர்த்தமது

போக்கிடும் பாவங்கள் நீர்த்துளியாக

மட்டு மண்வாழும் ஈஸவரனே

மக்கள் மனம்நிறைந்த பேரருளே

பிட்டு உணவாக நீவேண்டி

சுட்ட மண்சுமந்த சுந்தரனே


தாயக மண்ணின் தனித்தமிழ் முதல்வா

தூயனே உனைத்தொழ தொல்லைகள் அகலும்

தாயென உனைநாம் தாழினைத் தொழுதோம்

சேயென எம்குறை தீர்த்திட உடன்வா

ராமன் வணங்கிய தற்பரனே

யாவும் அறிந்திடும் சிவனுருவே

பாவம் குறைந்திட பார்வையினால்

பார்த்து உன்னருள் தந்திடுவா

தேனகரில் சிவனுருவே

தேடிவருவோரின்; நெஞ்சிருப்பாய்









0 comments:

Post a Comment