ADS 468x60

16 June 2012

மரம் பேசுகிறது...



நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு

படுக்க கட்டில்
விரிக்க பாய்
உடுக்க துணி
உண்ண உணவு
வீட்டுக்கு வளை
விருந்துக்கு இலை

நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு

பாட்டுக்கு குழல்
பசித்தால் பழம்
ஆடக் காவடி
அடைக்க கதவு
கொதிக்க கொள்ளி
கொப்பளிக்க பன்னீர்

நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு

18 May 2012

வானம் பார்த்த பூமி


நடு விரல் சுழுக்கு போல்
மேலும் ஆசையாக
உன் பார்வையும் இதயத்தில்
இன்னும் வேண்டும் என்ற...
ஏக்கத்தில்....

நானும்,
வானம் பார்த்த பூமியாக,
பிம்பங்களில் மட்டும்,
தோன்றி மறையும் -உன்னை,

கனவுகளின் வெக்கையில்
காய்ந்து கிடக்கும் -என்
இதயத்துக்கு- உன்
கடைக்கண் பார்வையும் கடும் மழைதான்....

13 May 2012

ஏய் நிலவே


தூரப் பார்க்கிறேன்- அந்த
நிலாவின் அழகை
ரசிப்பதற்க்காக மட்டும்தானா! என்று
ஆச்சரியத்துடன்!!

உருவம் இல்லாத- என்
உள்ளம் சொன்னது!
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம் என்று.

அந்த நிலவுக்கு
வழிகள் தேவையில்லை
விழிகள் மட்டும் போதும்.
சாந்தமான பூமி
குளிர்ந்த முகம்
இதமான காற்றின் அரவணைப்புடன்
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம். என்று...

ஓ அந்த நிலா...
என் பக்கம் வருமா!!




12 May 2012

மட்டக்களப்பில் பிள்ளைகளை பெற்றோர்கள் சுமையாக நினைக்கின்ற நிலை

'எம்  எதிர்காலம் கல்வியின் எதிர்காலத்தினைப் பொறுத்தே அமையும்' என நாம் அடிக்கடி சொல்லி வருகின்றோம்;. இந்நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தினை இட்டு பெருமையடைகிறார்கள், இருந்தபோதும் எம்மக்கள் கல்வியறிவின்மையால் ஆண்டுதோறும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது பெரும்பாலும் புரிவதில்லை. காலம் செய்த கோலத்தால், குறிப்பாக தமிழ் இனம் கல்வியை துலைத்து விட்ட நிலையில் இன்று சமுக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மிகப் பின்னடைந்து இருக்கின்றமை வேதனையே. இருப்பினும் இன்று படிப் படியாக இவற்றை உணரத் தொடங்கி இருக்கும் எமது உறவுகள் கை கொடுக்க தொடங்கியிருப்பது வரவேற்க்கத்தக்கதே! 

19 April 2012

எந்தன் தேசத்தின் புகழ்

தேன் கதலி வருக்கன்
மா இளநீர் பெருகி
வான் பிளந்து மழை பொழிய
வயல் நிலங்கள் செழிக்கும்
நான் பிறந்த மட்டு மாநில
நல்ல தமிழ் நாடே


முந்திரிகை கொழித்து மணம்
மூக்கினுள் வந்து மோத

பந்தி வைத்து பசியாற்றும்
பண்புடைய தேன் நாடே
செந்தமிழில் முந்தி இருக்கும் திருநாடே
நீ வாழி வாழியவே....

11 April 2012

பிறந்த நிலமே மறந்து விடுமா!!


புதிய வானம் புதிய பூமி
என்னை அழைக்கிறதே!
இளமைக் கோலம் வசந்த காலம்
கண்ணில் தெரிகிறதே!
மட்டக்களப்பே! மட்டக்களப்பே!
தேன்சிந்தும் பூமி நீதானே
பிறந்த நிலமே மறந்து விடுமா
எனை ஈன்ற சாமி நீதானே

ஆற்றங்கரையும் அசையும் இலையும்
என்னைச் சுகம் கேட்குதே
காற்று வெளியும் கடலின் ஒலியும்
என்னைக் கண்டு துள்ளுதே

ஒரு அன்னையைப் போல்
சிறு பிள்ளையைப் போல் - மண்ணில்
பாசம் உன்டாகுதே
ஒரு பறவையைப் போல்
இரு சிறகினுக்குள் - என்னில்
நேசம் கொண்டாடுதே

சொந்த மண்ணில் சோகம் நேர்ந்தால்
கைகள் கொடுத்திடுவோம்
வந்தோர் எல்லாம் வாழ வைத்த
சொர்க்கம் காத்திடுவோம்

26 February 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்...

மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்க்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவான இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்ப்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும், இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் '"பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்' எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் செல்ல இதனை வரைகிறேன்.

06 February 2012

"புதிர் உண்ணுதல்" பாரம்பரியத்தின் சுவாரசியம்தான் என்ன?

தமிழர்களின் வாழ்வு; பொருளாதாரம், அரசியல், சமயம் மறறும் கலாசாரம் என்பனவற்றுடன் ஒன்றொடொன்று பிரிந்துவிடாமல் பிணைந்திருப்பது அதன் வரலாற்று முதிர்சியை புடம்போட்டுக் காட்டுதுங்க..

இன்று தைப்பூச திருநாளுங்க...உன்மையில் நம்ம தமிழர் பண்பாடு மற்றய இனத்தினரையும் விரும்பவைக்கும் வகையில் அதில காணப்படுகின்ற பண்பாடு,  நாகரிகம் மற்றும் ஒழுக்க விழிமியங்கள் சிறப்பாக அமைந்திருக்கு..

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.