'குழந்தைகளுக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் உதவியாகும், இந்த மழை பொழுதிலும், பசியாலும், கொடிய வெள்ளத்திலும் இடம்பெயர்ந்து வாடும் இந்த குழந்தைகள் எப்படி இந்த கிறிஸ்த்மசை கொண்டாடுவது என்று எண்ணி இருந்திருப்பார்கள்! இவர்களை தேடி வந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்த இத்தனை ஏற்ப்பாடுகளையும் செய்த இந்த குழுமத்தினரை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்' என்று மகிழ்ச்சியோடு பாஸ்ட்டர் ஐசையா தனது ஆசீர்வாதச் செய்தியோடும் இந்த விழாவினை ஆராதனையுடனும் ஆரம்பித்து வைத்தார்.
24 July 2012
17 July 2012
நொந்த நீயும் சொந்தமாவாய்....
உனக்கீடு உண்டோ அழகு
செம்மண்ணும் பசும் புல்லும்
சிலு சிலுக்கும் நீரோடையும்
கனிச் சாரலும் களிக்கீறலும்
வயற்கீற்றும் வாய்க்கால்களும்
உரசி இம்மண் பட்டு நடக்காத கால்கள்
என்னடா கால்கள்....
உனக்கீடு உண்டோ அழகு...
கெழுத்தி கோர்வையும் கீரைக் கட்டும்
பழுக்கப்போட்ட மாங்காச் சாக்கும்
கிண்ண்காயும் பனம் பாணியும்
திராய்ச் சுண்டலுடன் விரால் மீனும்
உண்டு மகிழ கோடி இருக்கும்...
மட்டு மாநிலம் வந்து பாருடா...
நொந்த நீயும் சொந்தமாவாய்....
08 July 2012
இருட்டினில் தொங்குகிறாய்
திரும்பிப் பார்!!!;
உலகம் உன்னை விட்டு
எங்கோ போயிற்று...
நீ....
தாய் மொழியை மடியில் கட்டி
சாதித்தது என்னவோ!!!
அரச தொழிலை நம்பியே- உனக்கு
அரை வயசு போயிற்று...
மாதங்கள் மலையேறி
நாட்கள் நடைகட்டி
மணித்தியாலம் மறைந்துபோய்
நிமிடங்கள் நிலையில்லாது
கணப்பொழுதில் உலகை அறியும்
கணணி உலகமடா
ஆனால்....
நீ இன்னும் இன்னும்...
வருடங்களை கையில் பிடித்து
இருட்டினில் தொங்குகிறாய்...
குருகுலக் கல்விக்குள்
ஊறிக் கிடந்தால்
உலகை மட்டும் அல்ல
உன்னைக் கூட வெல்லமாட்டாய்
தமிழன் உனக்கு என்ன செய்தான்
வானகத்தை அசுத்தம் செய்த மனிதன்
நன்றி கெட்டு நடந்தான்- ஆதலால்
வான மழை பொச்சுப்போய்
வயிற்றுப் பிளைப்பு கெட்டுப்போச்சு
பட்டினிச் சாவும் இயற்க்கை
கெட்டு உயிர் அனர்த்தமும்
விட்டு வைத்ததா உன்னை!!!
மனிதன் கிரகங்களை அச்சுறுத்த
கிரகங்கள் மனிதனை வதைக்கிறது
இருந்தும்,,
தவிச்ச வாய்க்கு –தண்ணி
தரமறுக்கும் பூமித்தாயே
தன்னை போன்றே பிறந்த
மண்ணை பூசிக்கும் - தமிழன்
உனக்கு என்ன செய்தான்???
16 June 2012
மரம் பேசுகிறது...
நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு
படுக்க கட்டில்
விரிக்க பாய்
உடுக்க துணி
உண்ண உணவு
வீட்டுக்கு வளை
விருந்துக்கு இலை
நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு
பாட்டுக்கு குழல்
பசித்தால் பழம்
ஆடக் காவடி
அடைக்க கதவு
கொதிக்க கொள்ளி
கொப்பளிக்க பன்னீர்
நான்தான் உனக்கு இருப்பு
வைக்காதே எனக்கு நெருப்பு
18 May 2012
13 May 2012
ஏய் நிலவே
தூரப் பார்க்கிறேன்- அந்த
நிலாவின் அழகை
ரசிப்பதற்க்காக மட்டும்தானா! என்று
ஆச்சரியத்துடன்!!
உருவம் இல்லாத- என்
உள்ளம் சொன்னது!
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம் என்று.
அந்த நிலவுக்கு
வழிகள் தேவையில்லை
விழிகள் மட்டும் போதும்.
சாந்தமான பூமி
குளிர்ந்த முகம்
இதமான காற்றின் அரவணைப்புடன்
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம். என்று...
ஓ அந்த நிலா...
என் பக்கம் வருமா!!
12 May 2012
மட்டக்களப்பில் பிள்ளைகளை பெற்றோர்கள் சுமையாக நினைக்கின்ற நிலை
'எம் எதிர்காலம் கல்வியின் எதிர்காலத்தினைப் பொறுத்தே அமையும்' என நாம் அடிக்கடி சொல்லி வருகின்றோம்;. இந்நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தினை இட்டு பெருமையடைகிறார்கள், இருந்தபோதும் எம்மக்கள் கல்வியறிவின்மையால் ஆண்டுதோறும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது பெரும்பாலும் புரிவதில்லை. காலம் செய்த கோலத்தால், குறிப்பாக தமிழ் இனம் கல்வியை துலைத்து விட்ட நிலையில் இன்று சமுக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மிகப் பின்னடைந்து இருக்கின்றமை வேதனையே. இருப்பினும் இன்று படிப் படியாக இவற்றை உணரத் தொடங்கி இருக்கும் எமது உறவுகள் கை கொடுக்க தொடங்கியிருப்பது வரவேற்க்கத்தக்கதே!




