ADS 468x60

14 September 2013

மீன்பாடும் தேநாடு வாருமையா


மீன்பாடும் தேநாடு வாருமையா-எங்க
மேலான பண்பாட்டை பாருமையா
தேனோடு பால்தயிர் சேருமையா-நம்ம
தேமதுர தமிழ் ஊறுமையா

நெஞ்சினில் வஞ்சகம் இல்லையையா-எங்க
நிலத்தினில் பஞ்சமும் இல்லையையா
கெஞ்சாமல் தஞ்சமும் கிடைக்குமையா- இரந்து
கேட்போர்கு அமுதள்ளி படைக்குமையா

இல்லாதோர் இல்லாமல் செய்வோமையா-இங்கு
இருக்கின்ற பேதத்தை கொய்வோமையா
கல்லாமை இருள்நீங்கி உய்வோமையா- நம்ம
காலத்தில் உறவினை நெய்வோமையா

ஒரு கிராமத்து காத்து

மண்டூர் வருக்கன் சொழயே  உன் மம்மி எந்தஊரு
வாவிமகள் பாடும் நாடா  வந்தூh கேக்கிறேன்.
நீ வாவிமகள் பாடும் நாடா வந்து கேக்கிறேன்.

சோலையூர் சிவன் தேரு உன் சொந்தம் இங்கயாரு
சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்
நீ சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்

காரைதீவுப் பொண்ணப் போல காரமாகப் பார்கிறாய்
போரதீவு பாலப் போல பொங்கிவிட்டு போகிறா
தேத்தாத்தீவு கலையப் போல பாத்தாநீயும் கலக்கிறாய்
புளியந்தீவு கோட்டை யாட்டம் நெஞ்சிக்குள்ள பூட்டுறா
நீ எனக்கு இல்லைஎன்றால் அச்சொடைஞ்ச சில்லு சில்லு
நீ சிரிச்சிப் போனாப்போதும் மப்புஏத்தும் கள்ளு கள்ளு

வெல்லாவெளி வெள்ளாம போல் தலகுனிஞ்சி போகிறா
வாழச்சேனை கடதாசி போல் இடைமெலிந்து இழுக்கிறாய்
கதிரவெளி சோளன் குலையே கண்டமெல்லாம் மணக்கிறாய்
கன்னங்குடா கூத்தப் போல கண்டபடி ஆட்டுறா
காதல் கடல் தாண்ட நீதான் மட்டக்களப்பு வெளிச்சவீடு
கண்ணிரண்டும் ஒன்னத் தேடும் காதறுந்த தோடு தோடு

04 August 2013

இலங்கையின் பேண்தகு வீட்டுத் திட்ட செலன்முறைகளும், வாழ்கை முறையும்.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் அவன் வாழ்வதற்க்கு தேவையான உறைவிடம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதனால்தான் எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் வீட்டுத்துறை முக்கியமானதாகக் அபிவிருத்தி திட்டங்களில் கருத்தில் எடுக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பினைத் தூண்டி விடுகின்ற வகையில் எல்லாத் துறைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் முகாமைத்துவத்தின் தேவையை வலியுறுத்துகிறது. 

அழகான வீடு ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானத் தேவையாகும். இது முழுவதுமாக வீட்டுக்காரரின் விருப்பு மற்றும் வாழ்கைத் தரம் என்பன மூலம் செல்வாக்குச் செலுத்துகின்றது. வீட்டுத் திட்டங்களில் ஏற்ப்படுகின்ற முன்னேற்றம் பல வழிகளில் நன்மை பயக்கின்றது. உதாரணமாக பொருளாதார நன்மைகள், சேரிப்புற வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி, சேமிப்பு ஊக்குவிப்பு, நேரடி மறைமுக கட்டுமானப் பணி வேலைவாய்ப்புகள் மற்றும் நுகர்வு என்பனவற்றினை குறிப்பிடலாம்.

31 July 2013

கருணையுள்ளம் மட்டும்

படித்தவன்தான் இன்று

பகல் வேசம் போடுறான்-பணம்

படைத்தவன்தான் இன்று

அடுத்துயிரை கொல்கிறான்

கிடைத்தவற்றை பிரித்து

அடுத்தவர்கும் கொடுக்கும்

கருணையுள்ளம் மட்டும்

எங்களிடம் அதிகம் அதிகம்

பேஸ் புக்

என் சட்டைப்பேனைக்கு
விடுதலை கொடுத்தவன்
கண்ணீர் துளிக்கு
பெறுமதி சேர்த்தவன்

கண்டங்களுக் கிடையே
பாலம் சமைத்தவன்
சமையல் விவகாரத்தையும்
சர்வதேசத்துக்கு அறிவிப்பவன்

ஒற்றை இடைவெளிக்குள்
காதல் கணை தொடுத்தவன்
அள்ளக்கையர்களையும்
கவிஞ்ஞராக்கியவன்

புகைப்படங்களின் ஆல்பங்களை
அழ வைத்தவன்
கள்ளத் தொடர்புக்கு
சாவி கொடுப்பவன்

இன்னும் ஒன்ன நம்பித்தான்
ஐபோனும் சம்சுங்கும்
சக்கைபோடுகிறது
சொர்க்கமும் நரகமும்
நீதான் அமைத்துக் கொடுக்கிறாய்
பேஸ் புக் - நீ
புரட்சிகளின் புதிய ஆரம்பம்.

உயிர் காப்பதற்க்காக....

நிஜம் ஒறுத்துவிட்டது
அதற்க்காக பொய்கள்
விலைக்கு போகலாமா??

இன்னும் உள்ளுக்குள்
குமறுவதில் மட்டும்
வாழ்ந்து போகிறோம்.....
உயிர் காப்பதற்க்காக....

28 July 2013

தோணிதாட்ட மடுவின் சோகக் கதை....


போய்க்கொண்டே இருந்தோம் அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

20 July 2013

எட்டு உயிரை ஒரே குடும்பத்தில் பறித்து ஏப்பம் விட்ட ஆழி அலை-- நடந்தது என்ன!

கரு இருந்து தெரு வரைக்கும் சீவியங்களை பறித்து பசியாறிச் சென்ற ஆழி அலைக்கு வயசு ஒன்பது. காலங்கள் காத்திருப்பதில்லை ஆனால் அது ஞாபகங்களைத் எறிந்து விட்டு நடப்பதும் இல்லை. 26.12.2012 அன்று குப்பம் இருந்து குடிமனை வரை நீத்த உயிர்களுக்கு சாந்திவேண்டி கண்கள் பனிக்க மௌனங்கள் அஞ்சலிக்கப்பட்டன.