ADS 468x60

27 February 2014

அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல

அடியே பொண்ணு ஐயாரெட்டு
அம்பாரக் கரும்புக் கட்டு
அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல
ஒன்னப் பாத்து பாத்து ஏங்கிறனே தன்னால

04 January 2014

கடவுளாப்பாத்து அனுப்பி இருக்கிறாரு

 கிளிநொச்சி அன்று யுத்தவேக்காடு மாறாத பூமியாக இருந்தது. அது மனிதர்களை மாத்திரமல்ல மரம் செடி கொடிகளையும் இழந்த பூமி. எனக்கு இந்த மக்களோடு பழக கிடைத்த நாட்கள் கடவுள் தந்த தருணங்கள் தான் என நினைக்கிறேன் . 

'என்னுடய கணவர் நித்தியானந்தராசா, என்னுடைய மகன் மார்களான ஜெயராசா, மகேந்திரன் மற்று என்னுடைய மகள் ஜெகலதா என்னுடைய அம்மா, தங்கச்சி, அவன்ட ரெண்டு பிள்ளைகள், என்ட மூத்த அண்ணா அசோக்குமார், என்னுடைய மருமகள் அருந்ததி எல்லாமாக பத்து உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கிறன் தம்பி' என ஆரம்பித்தார் இராசலெட்சுமி. திருநகர் கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமமாகும். அங்குதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றர்கள்.

01 January 2014

முடியுமானால் முன்னுக்கு வா !!

என் நூறாவது கவிதை... மகிழ்சியுடன்  மண் வாசம் சேர்த்தவாறே!!







ஜலதரங்கம் பாடும் கடற்கரை வெற்றிலை போட்ட கிழக்குவாணம் வீடு சென்று திரும்பும் தென்னறல்
நெழிந்து நெழிந்து
வளைந்து வளைந்து ஒளிந்து ஒளிந்து ஓடுகின்ற வாவி
சங்கீதம் பாடும் மழை-அதில் நனைந்து நனைந்து சலங்கை ஒலிக்குத் வேளான்மை வயல்

என்னதான் என்றாலும் எண்ட ஊர்போலில்லை

தங்க மணல் ஜொலிக்கும் கடற்கரை
தாவி மீன் பாடிடும் குளக்கரை
செல்லும் இடம் எல்லாம் ஆற்றங்கரை
சேர்ந்து மணம் பரப்பும் தாமரை

ஒரு தாய்மக்கள் நாம்!

நெறிப்படுத்தும் மதம்
நேசிக்கும் இனம்
தொழிலுக்கான சாதி
பிரிந்து வாழும் பிரதேசம்
இவையெல்லாம்
மனிதாபிமானத்தின் வேர்கள்

26 December 2013

சுனாமி

காலத்தின் தலைகீழ் மாற்றத்தில்
மனிதன் மாத்திரமல்ல
நீயும் எமக்கு எதிரி
வருடங்கள் உருண்டு
ஒளிந்து கொண்டாலும்-நீ
வந்து போன நாள்
இருட்டித்துக் கொள்ளுகின்றது..

மாந்திப் போகாத நினைவலைகள்
சாந்தி சாந்தி எனப் பகரட்டும்---

24 December 2013

யாவரும் மகிழ்சி கொள்வோம்!!.

மெசியா மெசியா!
யூதர்கள் அழைத்தனர் அன்று,
நானும் ஒரு இடையன்,
அவலம், அவமானம்,
சவால்கள், சங்கடங்கள்,
பாவம்,  துரோகம்
இவற்றுடன் களைத்துவிட்டேன்.....

பாவ அடிமைத்தனம்,  அடக்குமுறைகளில்
இருந்து இன்னும் மீளாமல்...
அருவருப்பான, எளிமையான,
துன்பம் நிறைந்த, ஒதுக்கப்பட்ட
இடையன்  என்னிடம்,
இறை மகனே வாருவாயா!

என்னிடம் உன் வருகை சொல்ல
வான தூதர்கள் கிடையாது,
செருக்குடையோர் தலைக்குனிவும்,
வலியோரின் வலு இழப்பும்,
எழியோரை உயிர்த்தெழுதலும்,
உன் வருகையால் நிறைவேறட்டும்,
மகிழ்ச்சி பிரகாசிக்கட்டும்
விடிவெள்ளியாக எனக்கு
வெளிச்சம் காட்டு!!

காட்டுப்பாதையின் முட்புததர்களை
காண்பதற்க்காய்
ஒளியை ஏற்று!!...
என்நாளும் இன்னாளாய் இருக்க
தேவனே உன்னை பிரார்த்தித்து
அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்....

10 December 2013

புன்னகை மட்டும்












அன்பு கனத்துவிட்டுப்போகும்
மனதையும் கரைய வைக்கிறது
பொறுமை நம்மை
அடிக்க ஏங்குவோர்கு ரணமாகிறது
எழிமை எல்லோரையும்
நம்மில் விருப்பம் கொள்ளச் செய்கிறது
புன்னகை மட்டும் 
வரண்ட உள்ளங்களுக்கு மழைத்துளியாகிறது..
மழைத்துளியாக இல்லாவிட்டாலும்
மிருகங்களாக மாறாமல் இருப்போம்
ஏனெனில் அவை புன்னகைப்பதில்லை