ADS 468x60

09 August 2016

பெருகும் இளைஞா்கள் வேலையின்மை

நம்ம நாட்டில வருடா வருடம் உ/த படிக்கிறவங்களில் பல்கலைக்கழகத்துக்கு தகுதியானவர்கள் என சுமார் 1,50,000 தெரிவாகுவர். பின் கிட்டத்தட்ட 25,000 பேர் அதில் தெரிவாகி அரச ப.க.கழகங்களில் கல்வியினை தொடா்வாா்கள். மிகுதியானவர்களில் 70,000 பேர் தொழில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் திறந்த ப.க.கழகங்கள், தனியாா் ப.க.கழகங்கள் போன்றவற்றில் வெளிவாரி பட்டம் என சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட ஒரு 5,000 பேர் வெளிநாடுகளில் திறனற்ற தொழிலாளிகளாக இணைந்து கொள்ளுவர். ,இப்படியாகபோக மிகுதி 50,000 போ் (43%) வருடாவரும் வருகின்ற படித்த இளம் இரத்தம் கொண்ட, கல்வியினை தொடர முடியாத, கிராமப்புற இளையோரின் நிலையை யோசித்து பார்த்தால் கிா்என தலை சுற்றுகிறது.

நான் கவிஞ்சனும் இல்லை!

கவிதை எழுதி கனகாலம்- என
கண்ணை மூடி அமர்தேன்
அடைத்த வீடு
ஆருமில்ல தனிமை
விருப்பமற்ற உணவு
வேலையில் அழுத்தம்
வீட்டுக் குறைகள்
நாட்டு நடப்புகள்!!
பந்திப பந்தியாய்
முந்தி வருகிறது! எனக்குள்!

மண்ணை நம்புங்க!

பெண்ணை நம்பாமல் 
மண்ணை நம்புங்க!
பெண் உளைச்சல்
மண் விளைச்சல்!!

08 August 2016

நினைக்க முடியாத பிரிவில்



என் இனத்தின் சாவைக்கூட
நினைக்க முடியாத பிரிவில்
நானும்!
கொத்துக் கொத்தாக உயிர்கள்
ஆகுதியான போது - அதில்
மகிழ்ந்து,
அதை
அரசியலாயும், வியாபாரமாயும்,
வெற்றியாயும் கொண்டாடும்
கூட்டத்தின் மத்தியில்,

இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைப்பு


இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைத்தமை மிக்க நல்லதொரு முனைப்பு. குறிப்பாக கிராமப்புறங்களில், இன்று எமது மாவட்டத்தில் கல்வியின் வளர்ச்சி கணிசமான அளவு முன்னேற்றம் காணவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.
அன்று சமய வளர்சியுடன் ஒன்றித்த வகையில்தான் கல்வி முன்னேற்றம் கண்டு வந்தது. அது இன்று நகர அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது வெளிப்படை. இந்த நிலைமையினை மாற்றும் முனைப்பில் இந்தச் சபையினர் கிராமப்புற மாணவர்களை ஒன்று சேர்ந்து ஆலயத்துக்கு வந்து கூட்டு வளிபாடுகளில் ஈடுபட வைத்து, பல நடைமுறை ஒழுக்க, வழிபாட்டு முறைகளை தெழிவுறுத்தி மற்றும் கல்வியுடன் தொடபுபடுத்தும் ஒரு தந்திரோபாயத்தினை செய்து, மறைமுகமாகவும் நேரடியாகவும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், கல்வியையும் மற்றும் சமயத்தினையும் செழித்தோங்கச் செய்யும் இத்தகைய கைங்கரியத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதை இட்டு மகிழ்சியடைகிறேன்.

பட்டிப்பளைப் போடியார்களுடன்!


இன்னும் மதிப்பளிக்க வேண்டிய போடியார்கள் 
உண்ண உணவளித்த உத்தமர்கள்
வேட்டி கட்டி வேலை செய்பவர்கள்
வரம்பு வெட்டி வயலை வளர்ப்பவர்கள்
நான் பெருமைப் படுவதெல்லாம்
இந்த உழைப்பாளிகளின் உருத்தென்பதால்
நான் சிறுமைப் படுவதெல்லாம்
இவர்களை ஒதுக்கிவைக்கும் கருத்தென்பதால்
எப்பொழுதும் நானும் உங்களில் ஒருவனே!

அரசியல்வாதிகளை பார்து பார்த்து சலித்து போகிறது, வெறுப்பாகிறது.

அரசியல்வாதிகளை படம் எடுக்க என்றே பின்னால் திரிந்து அவர்கள் மாலை அணிவதையும், வரவேற்க்கப்படுவதையும் படமாகப் போடுவதை பார்து பார்த்து சலித்து போகிறது, வெறுப்பாகிறது.
இதை ஒரு ஆரோக்கியமான செய்தி அல்லது தகவல் என நாம் நினைக்கவில்லை. மாறாக என்ன திட்டங்களை வறுமை ஒளிப்பதற்கு, வேலைவாய்பினை அதிகரிக்க, திறன் அபிவிருத்தியினை ஏற்படுத்த, கல்வியில் அடைவு மட்டத்தினை அதிகரிக்க, விவசாயம் மற்றும் ஏனைய தொழில் விருத்தியினை ஏற்படுத்த செய்கிறார்கள் என்கின்ற ஆக்கபூர்வமான செய்தியை படிக்க கேட்க ஆவலாக இருக்கின்றோம்.
மாவட்ட, தொகுதி ரீதியான மனிதவள, பொருளாதார, இயற்கைவள பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்த்திரத்தன்னை போன்றவற்றை கட்டியெழுப்புவதற்கான மாநாடுகளை நடாத்தி அதில் இருந்து ஆய்வு பேப்பர்களை உருவாக்கி அதன் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தி வெற்றி காண விளையவேண்டும். சும்மா சும்மா நிகழ்சி பார்வையாளர்களாக கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்கும் அரசவியல்வாதிகளின் முகத்தை காண யாரும் விரும்பவில்லை அதிகாரிகளையும் சேர்த்து.

பூவே!

கோபமும் உனக்கு அழகு
ஓற்றை நாளுக்குள்
ஓராயிரம் சந்தோசம்
ஓராயிரம் பரவசம்
ஓராயிரம் வாசைன
ஓராயிரம் புன்னகை
உன்னால் மட்டுமே
ஒண்ணுகிறது
இதை மனிதன் கூட
ஏண்ணுவதில்லை