ADS 468x60

30 January 2011

ஓ அழகிய தீவே!

இன்று திறந்த வெளியாகி இருக்கும் இலங்காபுரியின் அழகிய தழிழ் வாழிடங்களை நோக்கிய சுற்றுலாப்பிரயாணிகளின் படையெடுப்பு 2009 யுத்த முடிவிற்கு பின்னர் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. இலங்கையின் வருமான மார்க்கங்களில் குறிப்பிடத்தக்க துறையாக வளர்ந்து இருக்கும் சுற்றுலாத்துறை மூலமாக கணிசமான வருமானம் இந்நாட்டின் தேசிய வருமானத்தில் பங்களிப்புச் செய்வதனை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரந்து விரிந்து காணப்படும் நீர் நிலைகள், கடல் ஏரிகள், வயல் வெளிகள் மற்றும் மலை முகடுகள் போன்ற இன்னோரன்ன இயற்கையழகு மற்றும் தழிழ் மணம் மாறாத பண்பாடு, புன்சிரிப்போடு வந்தோரை வரவேற்று விருந்தளிக்கும் விருந்தோம்பல் என்பன எல்லோரையும் ஈர்க்கும் ஒன்றல்லவா. இதனால் படையெடுக்கும் சுற்றுலாப்பிரயாணிகள் மூலம் இங்கு காணப்படுகின்ற மக்கள் கிடைக்கும் உள்ளூர் வளங்களை வைத்து வருமானங்களை ஈட்டி வரும் அதே நேரம் பல சீர்கேடுகள் வளச்சுரண்டல்கள் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கதல்லவா.

யுத்த காண்ட முடிவும் படையெடுப்பும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏ9 பாதை திறப்புக்குப் பின்னரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் விருப்பம் யாழ் தீவகப் பிரதேசங்கள் நோக்கி திரும்பியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாள்தோறும் 500 க்கும் மேற்ப்பட்டவர்கள் இங்கு, தரை, வான் மற்றும் பெரி மார்க்கமாக இந்த அழகிய தீவை பார்வையிட வருகின்றனர், இது அதிகரித்த வண்ணமுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றது. இந்தச் சுற்றுப்பிரயாணிகள் அங்கு காணப்படும் நெஞ்சை அள்ளும் ஆலயங்கள், புராதன இடங்கள், வனவிலங்குகள், கடைத் தொகுதிகள், உணவுகள், நூல் நிலையங்கள், மக்கள் வாழிடங்கள், யுத்தத்தின் சிதைவுகள், கடலேரிகள், தீவகப் பகுதிகள், கடற்கரைகள் கலாசார விழுமியங்கள் என்பனவற்றை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்களில் முனைப்பு..
சுமார் 17 கெஸ்ற் கௌஸ்கள் 11 உல்லாச விடுதிகள் என்பன ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்களவான நட்சத்திர கொட்டேல்கள் இல்லை என்கின்ற இடை வெளியை நிரப்புவதற்கு முதலீட்டாளர்கள் அவசர மதிப்பீட்டினை செய்து வருவதுடன் இத்துறையில் முதலீடு செய்ய பல தனவான்கள் முன்வந்துள்ளமை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகின்றது. இத்தனைக்கும் தலை வாசலாக நல்லூர் கந்தன் முருகன் ஆலயமே திகழுவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மூன்று தசாப்த கால யுத்த காலத்தில் யாராலும் உரசிப்பார்க்க முடியாமல் இருந்த வளம் கொண்ட பச்சைக் கம்பளமான இந்த வளத்தை பயன்படுத்தி உல்லாசப்பயனிகளை உறிஞ்சி எடுக்க உகந்த இடமென முதலீட்டாளர்கள் கண்ணில் எண்ணையை விட்டு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதன்மூலம் உள்நாட்டு உற்ப்பத்தி அதிகரிப்பதுடன் (அழகு சாதனப் பொருட்கள், பனம் உற்ப்பத்திப் பொருட்கள், உணவுப் பண்டங்கள்) அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்ளுவதுடன் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் சந்தர்பமும் எதிர்வு கூறப்பட்டுள்ளது இதனால் தலா வருமானம் அல்லது ஆழ்வீத வருமானம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த தொலை நோக்கங்களை மையமாகக் கொண்டுதான் இலங்கை சுற்றுலா சபை பெரியளவில் இத்துறையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சாவகச்சேரி கடற்கரை சூரியக்குளியலுக்கு உகந்த இடம் அதுபோல யாழ் நீர் ஏரிகள், இயற்கையின் பசுமை, தீவகப் பிரதேசங்கள் இவை உலக மக்கள் அனைவரையும் ஈர்கும் ஒன்றாகும். அத்துடன் எல்லா மக்களும் பயன்படுத்தும் படியான போக்குவரத்து வசதிகள் எல்லாப் பகுதிகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது இங்கு வரும் மக்களிடையே நம்பிக்கையையும் விருப்பத்தினையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

நெஞ்சையள்ளும் குடாநாடு..
குறிப்பாக இந்த சுற்றுலா பிரயாணிகள் விரும்பி வருகின்ற இடங்களாக நல்லூர் முருகன் கோயில், செல்வச்சன்நிதி முருகன் கோயில், நயினை தீவு நாகபூசணி அம்மன்னோயில், நாகவிகாரை, யாழ் நூலகம், கீரிமலை சிவனாலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தஸ்சுவாமி ஆலயம் என்பன அழகு மிளிரும் இடங்களாகும்.

ஆடிப்போகும் கலாசார மாற்றம்..
இவ்வாறு வசீகரமாக இருக்கும் இடங்களை நோக்கி வருகின்ற வகை தொகையில்லாத மக்களின் தங்குமிடம், உணவு, குடிநீர் என்பனவற்றை எவ்வாறு சமாளிப்பது என்கின்ற கேள்வி இருக்கின்றது. குறிப்பாக நைநாதீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கான போதிய நீர் இல்லாமை காணப்படுவதனால் வேலனையில் (லைட்டன் தீவு) இருந்து நீர் கொண்டுவரப்படுகின்றது. அத்துடன் இங்கு வருகின்ற மக்களிடம் பொலித்தீன் பாவனையை நிறுத்த சொல்லியும் அது முடியாமல் உள்ளதால் நீர்நிலைகள், ஆலயங்கள் எல்லாம் அசுத்தமாகவே காணப்படுவதனைக் காணலாம். அத்துடன் மலசல கூடவசதியும் இத்தனை மக்களுக்காக வசதி செய்யப்பட்டு இல்லை ஆதலால் புனிதப் பிரதேசங்கள் புனிதம் கெட்டுபடபோவதனைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக நோய் பரவும் எச்சரிக்கையும் (பண்டிக்காய்சல், பறவைக்காச்சல்) அடிக்கடி விடப்படுவதும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது தவிரவும் இதனை தடுத்து உதவுவதற்க்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதும் குறைவாகவேயுள்ளது. இதற்கும் அப்பால் கலாசார சீர் கேடுகள் தலைதூக்க துடங்கியுள்ளமையும் இம்மக்களது பாரம்பரிய விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கி வருகின்றமையும் குறிப்பிடதடதக்கது.

ஆகவே என்னதான் வருமானம் வரத்தொடங்கினாலும் எங்கள் தமிழ் மக்கள் கட்டிக்காத்து வருகின்ற கலாசாரம், பண்பாடு, அணுட்டானம் என்பனவற்றை என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாது, அவை அழிந்தால் அழிந்ததுதான் ஆகவே எங்களை நாங்கள் பாதுகாத்து எமது பண்பாடுகள் கலாசாரங்கள் அற்ப்ப சொற்ப்ப விடயங்களுக்காக விலைபோக விடாது பாதுகாக்க வேண்டியது எமது கடமையே அல்லாது இன்னொருவருடையதல்ல.

28 January 2011

தமிழ்ச்சங்கத் தலைவரிடம் ஒரு முறைப்பாடு...

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் ஒட்டு மொத்தமும் தேத்தாத்தீவில் தமிழ் ஒன்றுகூடலில் சங்கமித்த 25.01.2011 புதன் அன்று நம்மை விட்டு அகன்றும் அகலாத ஒரு மகான் நினைவுகூரப்பட்ட நன்நாளில் சில குறை நிறைகள் தமிழை வளர்த்துச் செல்வதில் அறிஞ்ஞர்களால் விவாதிக்கப்பட்ட சுவாரசியமான சில விடயங்களை பகிரலாம் என்று இந்தப் பதிவு வருகிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும் எல்லோரையும் கவரும் வகையில் வித்தியாசமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  (தமிழ் ஒன்று கூடலில் அகமகிழ வைத்த அகழ்விளக்கேற்றல் )
ஓன்று தமிழ்ச்சங்க கட்டிடம் கட்டுதல் என்ற விடயம், இந்த விடயத்துக்கான நிலம் மற்றது மாநகர சபையின் அனுமதி என்பன பெறப்பட்டு அதற்க்கான பூர்வாங்க வேலைகள் நிறைவு பெற்றிருப்பது வித்துவான் செபரட்ணம் அவர்களால் அனைவருக்கும் அறியத்தரப்பட்டது. அது போன்று இது சம்மந்தமாக பேராசிரியர் செல்வராசா அவர்கள் பேசுகையில் அங்கு தமிழ் ஆய்வரங்கம், மற்றும் பூராடனார்போன்ற பெருமக்களின் நூல் ஆய்வரங்கு, விருதறிவித்தல் என்பன கட்டடம் திறந்ந பின்னர் செம்மைப்படுத்தவேணும் என்றும் சொல்லப்பட்டது.

இன்னொரு விடயம் அங்கே காரசாரமாய் விவாதிக்கப்பட்டது, மூத்த ஊடகவியலாளர் பேரின்பராசா அவர்கள் 'எமது கிழக்குப் பல்கலைக்கழகம் மூத்த கலைஞர்களை பல்கலைக்கழக மட்டத்தில் பாராட்டுவதில் ஏனைய பல்கலைக்கழகம்போல் செயற்ப்படவில்லை' என்றும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதனால் எவ்வாறு தமிழை வளர்த்துச் செல்வது, ஊக்குவிக்கப்படும் என்றும் வினா எழுப்பினார். 
                                           (பதில் கூறும் பேராசிரியுர் ச.செல்வராசா கி.ப.க)
அதற்கு பதில் இறுத்துப்பேசிய கிழக்குப்பல்கலைக்கழக கல்வியியல் பேராசிரியரும் அங்கு பட்டம் வளங்குவதற்க்காக நியமிக்கப்பட்டிருக்கும் குழுத்தலைவருமான செல்வராசா அவர்கள் கூறுகையில் 'இவ்வாறான கௌரவிப்பு நடைமுறைகள் முறையாக ஒழுந்கமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவற்றை அறிந்து அதனூடாக செயற்ப்படுகின்றவர்கள் சிலரே என்றும் அதற்கு அறிஞர்களின் அசண்டையீனமான போக்கே காரணமாகும் என்றும் கூறினார்;. கலைஞர்கள், அவர்களின் ஆக்கங்களை உபவேந்தர் ஊடாக இந்த பட்டமளிக்கும் செயற்குழுவுக்கு முறையாக அனுப்பிவைக்கவேண்டும்; என்றும,; அதன்பின் பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த கௌரவிப்பு வளங்கப்படும்' என்றும் உறுதிபடக் கூறினார்.
                               
தவிரவும் ஈழத்துப்பூரடனார் பெயரில் கலை கலாசார மண்டபங்கள் திறந்து அவரை வருடா வருடம் நினைவுகூரப்படவேண்டும் என்றும,; அவரது பலநூற்றுக்கணக்கான நூல்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், அன்நினைவுகூரலில் எம் கனடாவாழ் தமிழ் உறவுகளின் பண மற்றும் மன உதவியுடன் செம்மையாக நடந்த பல்கலைக்கழக மாணவர் பாராட்டு மற்றும் பரிசு வழங்கிக் கௌரவிக்கின்ற நிகழ்வுகள் போன்ற பயனுள்ள இன்னோரன்ன நிகழ்வுகளும் எல்லோரையும் ஒரேகூரையின்கீழ் இணைத்த வகையில் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் வித்துவான் செபரெட்ணம் அவர்களால் அறைகூவப்பட்டது குறிப்பிடும்படியாய் இருக்கிறது.

அவர்மேலும் வினயமாக ஒன்றைக் கேட்டுக்கொண்டார் அதாவது இச்தமிழ்ச்சங்கத்தினில் அனைத்து தமிழ் ஆர்வலர்களும் இணைந்து கொண்டு எம்தமிழை வளர்த்துச் செல்லவேண்டும் என்றும் அதற்க்காக சந்தாப்பணம் செலுத்தி இதில் சேரவிரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இப்போதாவது சுடுர்விடுகிறதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு பெருமை சேர்க்கும் நினைவுப்பேருரை மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, மட்டக்களப்பு அறிஞர்கள் சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.

ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு. இதை நாங்கள் இன்று கட்டிக்காக்க தொடங்கியிருக்கிறோம்.

ஆக ஒட்டுமொத்தத்தில் ஈழத்துப்பூராடனார் ஒரு தமிழ் வித்து அவர் இட்ட வித்துகள் முளைக்கத் தொடங்கி இருக்கின்றது இதற்கு நீரூற்றி வளர்த்து அது அனைத்து தமிழ் மக்ககுக்கும் ஒரு நிழல் விருட்சமாக்குவது எமது ஒற்றுமையான ஒருமித்த செயற்ப்பாட்டிலதான்; தங்கி இருக்கின்றது அல்லவா?

தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு பெருமை சேர்த்தவர்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம்,  அக மகிழ்வோம்.
நிகழ்வின் படங்கள்

காத்திருக்கிறேன் ..

காத்திருக்கிறேன் -என்
கனவு நனவாகுமென்று,
கல்வி பயின்றொழியுமென்று,
வேட்டுப்போல் போகும்
போட்டி உலகில்
வேலை கிடைக்கும் என்று,
பூட்டி வைத்த என் இதயத்தை
சேர்த்து விடவேணும் என்று,

ஆனால்,
திகதி குறித்த என்
மரண ஓலை மட்டும்
காத்திருக்காமல் கிடைக்க
உயிரோடு இருந்தும் செத்தவனாக,
உலாவருகின்றேன்......

26 January 2011

யார் பெறுவார் இந்த அரியாசனம்...

 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்ப்பவர் யார்?'
கிடைக்கின்ற பெருமைக்கு பின் பல உழைப்பு இருக்கும் என்பார்கள் அதற்கமைவாக கோடியில் ஒருவராய் மறைந்தும் மறையாமல் இன்றும் தழிழை உலகெங்கும் மணக்கவைத்து மக்களின் மனதில் நிற்கும் ஈழத்துப் பூராடனார் கலாநிதி சு.தா. செல்வராச கோபால் அவர்கள் போற்றப்படவேண்டியவர். தமிழை அறிந்து ஆய்ந்து அதன் சுவையை நுகர எத்தனையோ மேலைத்தேயவர்கள் எமது கீழைத்தேயம் நோக்கி வந்து தமிழ் பரப்பினர். ஆனால் கீழ்த்தேசத்தில் இருந்து அதுவும் ஈழத்தின் கீழைத்தேயமான மட்டக்களப்பிலிருந்து மேலைத்தேயத்தை தமிழால் அலங்கரித்த பெருந்தகை இவர் என்றால் அது மிகையாகாது. 

இப்படிப்பட்ட மகான் போற்றப்படவேண்டியது அதுவும் அவர் வாழ்ந்த மண்ணான தேத்தாத்தீவில் பாராட்டப்பட வேண்டும் என்ற அவாக்கொண்ட மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தேற்றாத்தீவு கலை இலக்கிய மன்றத்தினரின் ஏற்பாட்டில் 26.01.2011 அன்று மட்/சிவகலை வித்தியாலய கலை மண்டபத்தில் பிற்பகல் 03.30 மணியில் இருந்து 6.00 மணிவரையும் ஒரு தமிழ் ஒன்றுகூடலாக இது நிகழ்த்தப்பட்டது. (முதலில் அவரது வீட்டில் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது பின்னர் மழைகாரணமாக  இடமாற்றப்பட்டது) இந்த நினைவுப்பேருரையுடன் தேற்றாத்தீவில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை (2009க்கு முன்னர் தற்போது பல்லைக்கழக மாணவர்களாக இருப்பவர்களுக்கு) பரிசு வழங்கிப் பாராட்டுகின்ற நிகழ்வும் கனடா வாழ் எமது தேற்றாத்தீவு மக்களின் அனுசரணையுடன் இனிதே நடந்தேறியது.

இது மண்முனைத் தென் எருவில் பற்று கலாசார பேரவையின் செயலாளர் இரா .கோபாலபபிள்ளை அவர்களின் தொடக்கவுரையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வை சிறப்பித்த பெருந்தகைகளாக விழாவை அலங்கரித்தவர்கள் வித்துவான் தமிழ் ஒளி க.செபரெத்தினம், பேராசிரியரும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவருமான ச.செல்வராசா, மற்றும் கலாபூசணம் ஆ.அரசரெத்தினம், மூத்த எழுத்தாளர் அன்புமணி, ஊடகவியலாளர் செ.பேரின்பராசா, கலாபூசணம் பெ.ஆறுமுகம், திரு.வ.திருநாவுக்கரசு, மட்/தேற்றாத்தீவு மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்ற ஊரில் சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் சு. தா. செல்வராசா கோபால். தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.  இவர் துணைவியார்  பசுபதி அம்மா இருவரும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறினர்.

அவரின் ஒரு அழகிய கவிதை....
குளங்களிலே சேற்று மணம்
குலைகளிலே காற்று மணம்
களப்பினிலே கதகதென்று கவியொழிரும் கழனி மணம்
வளம் மிகுந்த வயலினிலே வைக்கோலின் வரண்ட மணம்
அளவாக வளர்பூக்கள் அமைவாலே ஆகுமணம்
கடற்கரையில் ஒதுங்கு சிற்ப்பி கரைதட்டி சுண்ட மணம்
பகல் பாம்பு வம்மிப்பூவாய் பள்ளயத்து பந்தி மணம்
தெருக்களிலே புது வித்துக்கள் எழுந்து வீசும் மணம்
வருக்கனொடு தேன்வதைகள் வாழைபலா கமுகு தெங்கு
உருக்கொண்ட பாவையரின் உடுபுடவை உகந்த மணம்
கருவோடு குழந்தைகளின் கலையோடு கலந்த மணம்
இத்தனையும் கலந்த மணம் இயல் மட்டக்களப்பதிலே
சுத்தஇசை மீன் மகளின் சுதியூட்ட இருபாங்கும்
முத்தமிழின் கூத்தொலியும் முரல்பாயும் மண்வாசனை 
வித்தக பேச்சுவளம் விழங்கு தழிழ் வாசனையே..
இத்தனை பெருமையா எங்கள் திருநாட்டினுக்கு என வியக்கும் கவிஞன், கட்டுரையாளன் ஆய்வாளன், எழுத்தாளன், அச்சுக்கலைஞன் ஒட்டு மொத்தத்தில் இவர் ஈழத்துப் பன்முகத்தமிழ் அறிஞர் என இங்கு பறைசாற்றப்பட்டார்...
(பேராசியர் ச.செல்வராசா நினைவுப் பேருரையாற்றுகையில்)
இவர் பெருமை உங்களுக்கு தெரிந்தாலும் இவர் வழியில் செல்ல என்ன செய்யவேண்டும் என்ற வினாவுக்கு விடையிறுத்த பெருந்தகைகளுள் பேராசியர் செல்வராசா குறிப்பிடுகையில் இந்த மகான் விபுலானந்த அடிகள் போன்று போற்றப்படவேண்டய பெருந்தகை என்றும் இவர் பேரில் கலை மண்டபங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், விருதுகள் வருடா வருடம் கொடுக்கப்படவேண்டும் என்றும் இவரது நூல்களை பல்கலைக்கழக மட்டத்தினில் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் அது முதுமாணி, கலாநிதி பட்டத்தை தொடர்பவர்களுக்கும் கொடுக்கப்படவேணும் என்று விதந்துரைத்தமை அவரின் புகழை காட்டுகின்றதல்லவா..
(கலை நிகழ்வில் கலைஞர்கள்)
இதுக்கும் அப்பால் இந்நிகழ்வு தமிழ் பண்பு நடை, உடை பாவனை தமிழ் வாசனை மாறாமல் இருக்கும் அழகான தேற்றாத்தீவு களரியில் நடத்தப்பட்ட முறை , பலரையும் மூக்கில் விரல்வைத்து வியந்து பாராட்ட வைத்தமை மீண்டும் ஒருமுறை கலையூர் என்பதனை பறைசாற்றி இருக்கின்றது தேனூர்.  இந்நிகழ்வுகளை மேலும் மெருகூட்ட செவிக்கு விருந்தாக பல கலை நிகழ்வுகள் இடையிடையே படைக்கப்பட்டமை மட்டக்களப்பின் மண்வாசனையின் நீள அகலங்களை வரையறுத்துக் காட்டியது. அதுபோல் இந்நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கிய ச.இன்பராஜனையும் இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
(பல்கலைக்கழக மாணவர்க்கான பரிசு வழங்கலும் கௌரவிப்பும்)
இத்தனைக்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் பிரசன்னம் எமக்கெல்லாம் பூரிப்பைத்தந்தது, அவர்கள் தமிழ்ச்சங்கத்தை நிறுவ காரண கர்த்தாவாக உந்து சக்தியாக இருந்தமைக்கு இவரே (ஈழத்துப்பூராடனார்) மூலகாரணம் என வித்துவான் அவர்கள் பெருமைபடக் கூறியதுடன் இந்நினைவுப் பேருரை இவ்வளவு அழகாய் ஒழுங்கமைத்த தேத்தாத்தீவு மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
(தமிழ்வாழ்துப்பா பாடும் தேத்தாத்தீவு மகாவித்தியாலய மாணவிகள்)
இங்கு தேத்தாத்தீவின் புகழ்கீதம் பல்கலைக்கழக மாணவர்களால் பாடப்பட அதே போன்று நிகழ்வின் இறுதியில் தமிழ் வாழ்த்துப்பா பாடப்பட்டு நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிது முற்றுற்றது.

தன் கைகளைக் கொண்டு செயல்படுகிறவன் தொழிலாளி, தன் கைகளோடு மூளையையும் கொண்டு செயல்ப்படுகிறவன் கைவினைஞன் ஆனால் தனது கைகள் மூளை இவற்றுடன் இதயத்தையும் கொண்டு செயல்படுகிறவனே கலைஞன் அப்பேர்பட்ட கலைஞன் மறைந்தாலும் தமிழர்களின் மனதில்  உட்காந்து இருக்கும் இந்த அரியாசனம் யார் பெறுவார்.??

"வாழ்க தமிழ் வளர்க தமிழ்"

25 January 2011

அலட்டாகிய ஆறுமுகத்தான் குடியிருப்பு...

இலங்கையில் நதிகள் மிகையாகப்பாயும் நாடு என்ற பெருமை மட்டக்களப்புக்கே சாரும்... அந்த வகையில் அண்மைய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 14 பிரதேச செயலகப்பிரிவுகளில் ஏறாவூர்பபற்றும் ஒன்றாகும். இங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஆற்றங்கரை ஓரமாக மயிலம்பாவெளியில் இருந்து வாழைச்சேனை நோக்கி வருகின்ற வளியில் இருக்கிறது. இங்கு வாழுகின்ற அனேகம் மக்கள் மீன்பிடி, கமம் மற்றும் கூலித்தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது...

 இக்குக்கிராம மக்கள் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு வெந்து நொந்து இருக்கின்றமை அறியக்கிடக்கிறது. நேற்றைய தினம் அதாவது 24.01.2011 அன்று பெரியதொரு ஆர்ப்பாட்டப்பேரணியினை தங்கள் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டனர்..

பெண்கள் அதில் வெந்து நொந்து கோபாவேசத்தோடு நின்றதை காணக்கூடியதாக இருந்தது.. பதாதைகளில் ஆறுமுகத்தான் குடியிருப்பின் பாராமுகம் ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஒரு கணம் வீதியில் சென்ற வாகனங்கள் இருமருங்கும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இவர்கள் இந்நிலமைக்கு றோட்டில் எம் இனத்தினை கொண்டு விடும் அளவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா??? அல்லது இவர்கள் வேலையில்லாமலா றோட்டில் இந்த அற்ப்ப சொற்ப்ப நிவாரணங்களுக்காக துவம்சம் பண்ணுகிறார்கள் என்ற கேள்வி என் மனத்திரையில் இழையோடியது, 

பாவம் இம்மக்கள்... எல்லோரும் இன்நாட்டு மன்னர்கள் என்பது சும்மாவா???

24 January 2011

ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எமக்கருள?

அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வடு இன்னும் காயாத ஓயாத நிலையில் புதிதாய் எழுந்திருக்கும் சந்தேகங்கள் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ளது. ஏற்ப்பட்ட பெரு வெள்ளத்தினால் அரிசிக்கு விலை அதிகரிக்கும் என்னும் ஒரு கதை அடிபடத்தொடங்கியது உண்மை. கிட்டத்தட்ட இலங்கைக்கான நெல் உற்பத்தியின் பாதிக்குமேல் கிழக்கிலங்கையில் இருந்து விளைவிப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இச்செய்தி பற்றிய உன்மை இலங்கை விவசாய அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது திருப்தி தருகின்ற ஒன்றாகும்.
அதாவது அரிசிக்கான விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அதற்க்கான முன்னேற்ப்பாடாக நெல் சந்தைப்படுத்தும் சபையில் நெல்லை சேமித்து வைப்பதற்க்காக 5 பில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் ஒருகிலோ நெல் ரூபாய் 30 கு கட்டுப்பாட்டு விலையிலேயே விற்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்..

வெள்ளநீர் வடியத்தொடங்கி இருப்பதனால் பொலநறுவை போன்ற பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர் என்றும், அவர்கள் மீளவும் மாரிப்போகச் செய்கை பண்ணுவதற்க்கான அரச உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதெனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கான விதைநெல், மற்றும் நிலப்பண்படுத்துதலுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அது போன்று அவர்களுக்கான மின்கட்டனம் அறவிடப்படுவதில்லை என்ற தீர்மானமும் நன்மையளிப்பதாகவே இருக்கின்றது. அத்துடன் பெய்த மழை வெள்ளத்தில் அனேகமான குளங்கள் நிரம்பி இருக்கின்றமையினால் இப்போகச் செய்கைக்கான நீர் பாய்சல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வெள்ளத்தின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய இலங்கையில் பெருமளவு விவசாயம் செய்யும் 10000 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக 12,000 க்கும் அனேகமானவர்கள் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8000 பேர் வரை அம்பாரை மாவட்டத்தினில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிப்பீட்டின்படி அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் பாதிப்பு மொத்த விவசாயத்தில் 10 விகிதம் என்றும் மட்டக்களப்புக்கான மதிப்பீடு இன்னும் நிறைவு பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கணிப்பீடு இதுவரை இடம்பெறாமல் இருப்பது இம்மாவட்டத்தின் மீதான பாரிய இழப்பை சொல்லுகின்ற அதே சமயம் இங்கு மக்ககளை கவனிக்க யாரும் இல்லாத சூழல் உள்ளதோ என்ற அச்சத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இன்னும் பட்டகாயம் ஆறாத பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப்பணிகள்கூட ஒழுந்கான முறையில் வழங்கப்படாமல் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் அசமந்தபோக்கு காணப்படுகின்றமை தமிழ் மக்களின் சாபம் என்பதா அவர்களின் பாவம் என்பதா சொல்லத் தெரியவில்லை. இதனால் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பொலிகள் ஆங்காங்கே கிளம்பத்தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய மாவட்ட மக்கள் கவனிக்கப்படுவதபோல் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் இன்நாட்டு மக்களாக கவனிக்கப்படுவதில் பின்னிப்பதற்கு யார்தான் காரணமோ?

23 January 2011

கதரின் வராக்கின் வருகையும் காத்திருக்கும் மக்களும்..


தற்போதைய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தகவலின் பிரகாரம் 43 பேர் அண்மைய வெள்ளத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் உயிர் இழந்துள்ளதோடு ஒரு மில்லியனுக்கும் மேலாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், பிரதி ஐ.நா. மனிதாபிமானச் செயலாளரும், ஐ.நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தற்போதய பிரதி அவசர நிவாரண இணைப்பாளருமான கலாநிதி கதரின் வரக் அவர்களின் இலங்கை நோக்கிய விஜயம் ஒரு திருப்பு முனையாகவும் அதேநேரம் திருப்தியளிப்பதொன்றாகவுமே இருக்கின்றது.

 குறிப்பாக இவர் அண்மையில் வெள்ளத்தினில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்க்கொண்டு அங்கு வெள்ளத்தினாலும், 2009 மே மாதம் வரை இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அங்கு கடமையாற்றும் அரச அதிகாரிகள் மற்றும் ஐ.நா அமைப்பினரை சந்தித்து வெள்ள நிவாரணம் பற்றிய ஒரு மதிப்பீட்டினையும் மேற்கொண்டுள்ளார்.

மூன்று நான் விஜயத்தினை மேற்க்கொண்ட கதரின் அவர்கள் அவரின் விஜயத்தின் முடிவில் கருத்துரைக்கையில் அவர் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் நிவாரணங்கள் மீதான திருப்தி பற்றி அறிந்துகொண்டதோடு, வெள்ள அனர்த்தத்தினில் இடம் பெயர்ந்தவர்களின் மீளக் குடியமர்த்துதலை துரிதப்படுத்துதல் மற்றும் அவர்களை தையிரியப்படுத்துதல் என்பனவற்றினூடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மீழுருவாக்குதல் என்பன பற்றி கவனம் செலுத்தி இருப்பதாகவும், இதற்க்காக வெள்ளத்தினில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய பிரதேச மீள் கட்டுமானத்துக்காக 51 மில்லியன் டொலர் அவசரமாக கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உன்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் போய்சேருகின்றதா என்ற கேள்விக்கு அப்பால் யாருக்கோ எங்கிருந்தோ உதவி கிடைக்கிறது என்ற பெருமூச்சுடன், இறைவன் கருனையால் வருகின்ற உதவிகள் உன்மையாக பாதிக்கப்பட்டு தொழில், இருப்பிடம், இயல்பு வாழ்கை என்பனவற்றினை இழந்த மக்களுக்கு போய்ச்சேர வேண்டுமென்று பிராத்திக்கிறேன்.

கதரினா பற்றி ஒரு குறிப்புரை,
இவர் தனது கலாநிதிப்பட்டத்தினை குற்றவியலில் அல்வனி, சுணி பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளதுடன், தனது முதமானிப்பட்டத்தினை குற்றவியல் தத்துவத்தில் கேம்றிஜ் பல்கலைக்கழகத்தினில் முடித்து 2007 இல் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால்  பிரதி ஐ.நா. மனிதாபிமானச் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

22 January 2011

நீ வேணும்டா....













'டேய் என்னடா பண்ணுகிறாய்?'
'ஏன்டா போண் பண்ணல?'
செல்லமாய் ஒரு அதட்டல்..
மெதுவாகச் சொன்னேன்
'அம்மா இருந்தாங்க பக்கத்தில'
என்றேன்...

'அடி விழும்' என்ற நீ
சிறிது சிணுங்கியவளாய் இருக்க
நான் 'என்னமா என்றேன்'
'நான் மட்டும் தனியாய் துடிக்க
நீ அங்கே
சந்தோசமாய் இருக்கிறாயோ!!'
என்று ஏங்கியவளுக்கு,
நான் சொன்னேன்...

'ஆமா சந்தோசமாய்தான் இருக்கிறேன்
ஏனென்றால்
கூடுதான் இங்கே-உன்னை
தேடும் இதயம் அங்கே' என்றேன்
கேட்டவள்... அழுதுகொண்டு
'நீ வேணும்டா' என்று முத்தமிட்டாள்.
.