எம்முன்னோா் கல்வி பற்றி பல விடயங்களை கூறியுள்ளனா். ‘அனைத்து அறிவும், புலமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே புதைந்துள்ளது‘ என்று ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். மனிதனுக்குள்ள ஆற்றலை வெளிக்கொணர்வது இந்திய கல்வி முறையாக இருந்தது. ஆனால், வெளியில் இருப்பவற்றை மனித மனதிற்குள் ஏற்றுவதுதான் பிரிட்டிஷ் கல்வி முறை. அது ஊக்கம் அளிக்கும் கல்வி முறையல்ல; தகவல் அளிப்பது மட்டுமே கல்வியாக உள்ளது. இதுதான் கல்விமுறையில், மனிதனின் புரிதலைப் பற்றிய அடிப்படை வேறுபாடு.
27 April 2016
படித்த வாரிசுகளை எமது சமுகம் வன்முறையாளா்களாக பாா்க்க விரும்புவதில்லை.
இன்றய காலத்தில் கல்வி மனிதனை அழிக்கவும் அதுபோல் பாதுகாக்கவும் இருக்கின்ற ஒரு கருவியாகிவிட்டது. அதனால் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது.
அது போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.
18 April 2016
இன்னும் எழுச்சியடைவேன்!
நான் வேறமாதிரி!
நான் ஒன்றும் சுத்தமாய் இல்லை
ஆனால் நலம் வேண்டும் அன்பர்க்கு
நல்லதோர் பிள்ளை
பாரம் பரியமாய்ப் போனா
இன்று வேலையற்றவன் போல
பாக்குது வீணா
கைகட்டி வாழ்பவன் நானா
மூடர் கதை கேட்டு மூர்கமாய்
எழுகிதென் பேனா
இடர்பட்டு கிடப்போரின் ஆளு
என்னை எள்ளினால் தலை கொய்யும்
கூரான வாளு
யாரும் இல்லை என்னை அடக்க
வந்தால் வேறு முகம் கொண்டு
ஏறுவேன் முடக்க
பட்டி தொட்டி எல்லாம் திரிவேன்
அவர்கள் துன்பத்தை தலைக்கொண்டு
பழுதூக்கி முறிவேன்!
ஆனால் நலம் வேண்டும் அன்பர்க்கு
நல்லதோர் பிள்ளை
பாரம் பரியமாய்ப் போனா
இன்று வேலையற்றவன் போல
பாக்குது வீணா
கைகட்டி வாழ்பவன் நானா
மூடர் கதை கேட்டு மூர்கமாய்
எழுகிதென் பேனா
இடர்பட்டு கிடப்போரின் ஆளு
என்னை எள்ளினால் தலை கொய்யும்
கூரான வாளு
யாரும் இல்லை என்னை அடக்க
வந்தால் வேறு முகம் கொண்டு
ஏறுவேன் முடக்க
பட்டி தொட்டி எல்லாம் திரிவேன்
அவர்கள் துன்பத்தை தலைக்கொண்டு
பழுதூக்கி முறிவேன்!
08 April 2016
ஒரு மாற்றம்

ஒரு மாற்றம்
தடு மாற்றம்
உண்ண முடியாமல் ஒரு கணம்
உறங்க முடியாமல் மறுகணம்
தீக்குள் இருக்கிறேன் சுடவில்லை
மழையில் நிக்கிறேன் படவில்லை
இல்லாததை தருகிறாள்
இல்லாதபோதும் வருகிறாள்
என்னமா சிரிக்கிறாள்
ஏக்கத்தை எரிக்கிறாள்
சொல்லவும் தெரியவில்லை
சொன்னாலும் புரியவில்லை
ஒற்றை நாளில் வந்தாள்
உள்ளத்தை அள்ளி சென்றாள்
ஒளிய நினைக்கிறேன் தொலைந்து
இருந்தும் அவளைத் தேடுகிறேன் வலிந்து
03 April 2016
நீ மட்டும் தூரத்தில்
வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்
பனித்துளி உறங்க பருவங்கள் வளர்த்தாய்
நான் அணைக்கும் நல்லநாள்; எது
நீ மட்டும் தூரத்தில்
நீர் சொட்டும் ஓரத்தில்
ராத்திரியும் சுமையாச்சே
மலர்களும் ஏங்குது
மனங்களும் தூங்குது
மழைத் துளியில் மறைந்தாயே
கோபத்தை விடு நீ
பாவம் உன் அழகு
நீ உதித்தால் மட்டும் நான் இருப்பேன்!
வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்!!
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்
பனித்துளி உறங்க பருவங்கள் வளர்த்தாய்
நான் அணைக்கும் நல்லநாள்; எது
நீ மட்டும் தூரத்தில்
நீர் சொட்டும் ஓரத்தில்
ராத்திரியும் சுமையாச்சே
மலர்களும் ஏங்குது
மனங்களும் தூங்குது
மழைத் துளியில் மறைந்தாயே
கோபத்தை விடு நீ
பாவம் உன் அழகு
நீ உதித்தால் மட்டும் நான் இருப்பேன்!
வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்!!
24 March 2016
யார் சொந்தக்காரன்?
கொம்புச்சந்திக் கோயில்- எங்க குடியிருப்பு வாயில் இங்கு எத்தனைபேர் சொந்தக்காரன் எத்தனைபேர் உறவுக்காரன் சொல்லுகிறேன்.......
உடைக்கவென ஊற்றெடுத்து –ஆலயம் படைக்கவென ஏற்றம்கொண்டோர், கட்டவைத்த வீட்டுக்கல்லை ஒட்டுமொத்தமாய் கொடுத்தவர்கள்! மண்ணையெல்லாம் கொண்டுபோய் மனமுவந்து கொடுத்தவர்கள், உண்ண உணவு கொடுத்து உள்ளிருந்து உதவிசெய்தோர், வர்ணம் பூசவென லெட்சமாய் வாரிவாரிக் கொடுத்தவர்கள், வேலைக்கு போகுமுன்பே வெண்சாந்து குழைத்தவர்கள், தேனீரும் சிற்றூண்டியும் தேவையறிந்து கொடுத்தவர்கள் இவர்கள் ஆலயத்தின் உரித்துடையவர்கள்.
வாசலில் உயர்ந்த மரத்தை வரும்போது அறுத்துக்கொடுத்தோர், ஆசையில் சேர்த்த செம்பையெல்லாம் ஓசைமணி செய்ய ஒப்படைத்தோர், வெய்யிலில் கருகி பனியில் உருகி வெளிநாட்டு வேதனங்களை வேளையறிந்து கொடுத்தவர்கள், ஊரூராய் சென்று ஊக்க நிதி திரட்டியோர், அல்லும் பகலும் நின்று கல்லும் மண்ணும் சுமந்தவர்கள், பாடல்கள் படங்கள் செய்து- உலகில் பறை சாற்றியவர்கள் வரி என்று உணராமல் வரும்போதெல்லாம் கொடுத்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து விக்ரகங்கள் தருவித்தோர் இவர்கள் ஆலயத்தின் சொந்தக்காரர்கள்.
பேசாமல் இருந்துகொண்டே பெரிதாய் பணங்கொடுத்தோர், அரை நேர உணவு உண்டு அனைத்தையும் கொடுத்வர்கள், அயலூரானாலும் அனுசரனை தந்தவர்கள், ஒலிபெருக்கி எடுத்து உன்மை நிலை விளம்பியோர், எலிவாகனன் மீது என்றும் மறவா பக்திகொண்டோர், குறைந்த விலையில் கோயில் கட்ட கூடிய பொருள் கொடுத்தோர், நிறைந்த பெருமானுக்கு நீண்டுயர மனத்தோடு அடிக்கல் இட்டோர், சட்டச் சிக்கல்களை சடுதியில் முடித்துக் கொடுத்தோர்- அபிவிருத்தி திட்டங்கள் வரும்போது தேனூருக்கு உதவியவர்கள் இவர்கள் உரிமைக்காரர்கள்.
கம்பு சுமந்தவர்கள் கலை செம்பில் படைத்தவர்கள் சிற்ப்பம் செதுக்கியவர் சிலை நுட்பம் விளக்கியவர், ஓவியங்கள் வரைந்து காவியம் படைத்தவர்கள், மின்சார உதவி செய்து மின்னொளி பாச்சியோர், ஏற்றி இறக்கவென இயந்திரங்களை கொடுத்தோர், இலகுவாக்க சிலவற்றை எடுத்துரைத்து தீர்த்தோர், உலகமே தடுத்தபோதும் உலங்கு வானூர்தி வருவித்தோர், எங்கிருந்தபோதும் வந்து ஏலுமான உதவி செய்தோர், இந்த ஆலயம் உயர மனிதர்கள் மாத்திரமல்ல மாடும் வயலில் உழைத்தன இவங்கபோல இன்னும் இருக்கிறார்கள் பங்கு கேட்க தகுதியுடை சொந்தக்கரார்கள் பரவி நிதம் தொழும் உரிமைக்காரர்கள்.
நன்றி சொல்ல இருக்கு இன்னும் ஆயிரம் -அதற்கு நான் எழுத வேண்டும் தொண்டர் பாயிரம்
இவர்கள் தொண்டு வளம்பெறட்டும்
இவர்கள் குடும்பம் ஆசீர்பெறட்டும்
இவர்கள் எதிர்காலம் சுபீட்சமாகட்டும்
இவர்களது பக்தி சிறக்கட்டும்
என இறைவனை இறைஞ்சிகிறேன்
13 March 2016
நண்பர்களுக்கு பெரிய மதிப்பு இருக்கும்!
சில சமயம் சிலரைப் பார்த்தால் ஆத்திரம் வரும் சிலரைப்பார்த்தால் பரிதாபம் வரும், எனக்கு யாரைப்பார்த்தும் ஆத்திரம் வருவதில்லை, அப்படி வந்தாலும் யாரையும் நோகடிப்பதில்லை. உங்களுக்கு தெரியும், சிலர் காரணம் இல்லாமலேயே மற்றவங்க மேல பழியப்போடுவாங்க, அதுக்கு பயந்து எதிர்க தெரியலன்னா போச்சி, சங்குதான்!! மல்டி வரல்போல தொடந்து அடிப்பாங்க.
ம்ம்ம்... ஒரு காலத்தில செய்யாத குற்றங்களுக்காய் சரசரப்புக்கெல்லாம் பயந்து நடுங்கி இருக்கிறன் அது ஒரு காலம். அப்போ எல்லாம் இந்த 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' இதெல்லாம் ஞாபகம் வந்ததில்ல. 'தருமம் தலைகாக்கும்' அது மட்டும் இருந்திச்சி.








