ADS 468x60

30 October 2017

கிராமப்புறங்களில் துளிர்விடும் மட்டக்களப்பு மாண்மீகம்.

தமிழும் சமயமும் இரு கண்கள் என்பதை என்பதை நாவலர் சொன்னதன் பின் நேரில் அதிகம் கண்டுகொள்ளும் பாக்கியத்தினை கடந்துவந்த தடம்பிரண்ட பாதைகளில் அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் வலு இழக்கச் செய்யப்பட்டோம். இருந்தும் ஸ்த்தாபிக்கப்பட்ட பெயரளவான நிறுவனங்களின் இயங்கு நிலை 'முருங்கையில் வேதாளமாய்' பெயரளவில்; மட்டும் இருந்து துரும்புக்கும் உதவாமல் இருப்பது மட்டக்களப்பின் நிலை. இவ்வாறான பாதைகளில் இந்த தேவைகளிளை நிரப்பிக்கொண்டு தமிழ், அதன் செல்வாக்கு, எமது பாரம்பரியம், நடைமுறை, வாழ்வியல் போன்றவற்றை பறைசாற்றும் பல படிநிலைகளை வெற்றிகரமாக கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினர் எடுத்தேத்தி வருகின்றனர்.

22 October 2017

நீ பூத்தூவும் மேகம்!!

Image may contain: 1 person, closeup and outdoorநான் வந்து முன்னே #நின்றேன்
நீ பாா்த்து சிரித்தாய் #அன்று
ஓர் உயிர் எனக்கு #என்று
உலகத்தில் படைத்தான் #இன்று
நீ பூத்தூவும் #மேகம்
பசும் புல் பூத்த #தேகம்
உன் காதல் #வேகம்
எனைத் தூண்டும் #தாகம்
இன்று நான் வாங்கும் #மூச்சி
என்றும் நீ தானே #பேச்சி
என் சோகங்கள் #போச்சி
எனக் இன்று என்ன #ஆச்சி!!!

கூத்து .

Related imageஆட்டம் மதுவிலும் வரும் 
மகிழ்சியிலும் வரும்
இரண்டும் கூத்துத்தான்!

மகிழ்சியில் வரும் கூத்து
மருவிப்போனதும்

மதுவில் வரும் கூத்து
பெருகிப்போனது.

மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது

கிட்டத்தட்ட 58000 ஏக்கர் வயல் நிலங்களை தன்னகத்தே கொண்டு அன்னமளிக்கும் எமது தமிழ் மண்ணின் மட்டு நிலம் நெல்லை மட்டும் விளைவிக்கவில்லை கூடவே அங்கு ஈடுபடும் குழந்தைகள் இருந்து முதியோர் வரைக்கும் சந்தோசத்தினையும் விளைவித்து இருந்தது. ஆட்டம் பாட்டு, கொண்டாட்டம் எல்லாம் உழவில் ஆரைம்பித்து நெல்லை அறுவடை செய்து வீடுவரை கொண்டு சேர்க்குமட்டும் மகிழ்சியாகவே இருந்தது. அன்று மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவன் அனுபவித்துவந்த அகத்தூண்டும் இன்பம் அழிந்தே விட்டது.

21 October 2017

முகிலே முகிலே!

முகிலே முகிலே- மழை
மூட்டம் எங்கே
வெயிலே வெயிலே- பெரும்
வாட்டம் இங்கே
கடல் மூழ்கி நீயும்
நீரை அள்ளித் தரலாமே!
மழை கொண்டு வரலாமே!

20 October 2017

ஊழலில்லாத அரசியலா!


ஊழலில்லாத அரசியலா
உணர்வில்லாத உறவுகளா
ஆசையில்லாத தலைவர்களா
வேஷமில்லாத மேடைகளா

18 October 2017

தீபாவளியில் ஒரு பொய்யான கருத்தை நாம் வைத்திருக்கிறோம்.

இந்து மதத்தில் கூறப்படுகின்ற ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களிடையே பண்பாடுகளை நெறிப்படுத்துகின்றன. நாம் வாழ்வாங்கு வாழ்வதனை வெளிப்படுத்துவதோடு ஓர் இனத்தின், மதத்தின், சமுகத்தின் கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கு செம்மைப்படுத்தி அதன் உட்கருத்துக்களும் பாரம்பரியங்களும் வரலாறுகளும் கடத்தப்பட வேண்டிய பொறுப்பு இப்பண்டிகைகளுக்கு உண்டு.

16 October 2017

சிருஷ்டிக்கும் பெண்!

Image may contain: one or more people, people sitting, people eating and foodஅம்மா
நீ காசிகள் சேர்க்க
கருவாடுகள் விற்கும் பணம்
தேசிய வருமானத்தில்
வருகிறதா தெரியாது!
நானும் உன்ட உழைப்பில்தான்
சம்பளம் எடுக்கிறேன்!
நீ மட்டும்தான்
பெற்றதனால் மக்களையும்
விற்றதனால் மனிதர்களையும்
சிருஷ்சிக்கிறாய்...