ADS 468x60

08 August 2016

இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைப்பு


இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைத்தமை மிக்க நல்லதொரு முனைப்பு. குறிப்பாக கிராமப்புறங்களில், இன்று எமது மாவட்டத்தில் கல்வியின் வளர்ச்சி கணிசமான அளவு முன்னேற்றம் காணவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.
அன்று சமய வளர்சியுடன் ஒன்றித்த வகையில்தான் கல்வி முன்னேற்றம் கண்டு வந்தது. அது இன்று நகர அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது வெளிப்படை. இந்த நிலைமையினை மாற்றும் முனைப்பில் இந்தச் சபையினர் கிராமப்புற மாணவர்களை ஒன்று சேர்ந்து ஆலயத்துக்கு வந்து கூட்டு வளிபாடுகளில் ஈடுபட வைத்து, பல நடைமுறை ஒழுக்க, வழிபாட்டு முறைகளை தெழிவுறுத்தி மற்றும் கல்வியுடன் தொடபுபடுத்தும் ஒரு தந்திரோபாயத்தினை செய்து, மறைமுகமாகவும் நேரடியாகவும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், கல்வியையும் மற்றும் சமயத்தினையும் செழித்தோங்கச் செய்யும் இத்தகைய கைங்கரியத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதை இட்டு மகிழ்சியடைகிறேன்.
இருப்பினும் வயிறு நிறையாமல் எதையும் செய்ய முடியாது என்பதனை உணர்ந்து வாழ்வாதார உதவிகளையும் நலிவுற்றவர்களுக்கு கொடுத்து உதவுகின்றமை இவர்களின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்த மன்றத்துடன் இணைந்து செயலாற்ற பற்றுள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். "எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் //அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்" சுவாமி விவேகாநந்தா்.//www.eluvannews.com/2016/05/blog-post_519.html

0 comments:

Post a Comment