ADS 468x60

30 August 2016

தோழில் சாய நீ இருந்தால் போதுமே!

என் இனிய தமிழ் நெஞ்சங்களே! எனது பிரதேசத்தின் வயல் காட்டிலும் கடற்கரை வாடிகளுக்குள்ளும் மலை ஓரங்களிலும் கட்டுண்டு கிடந்த கிராமத்து காதலை சிறைப்பிடித்து வந்து உங்கள் சாளரங்களின் ஓரம் வலைப்பூக்களின் வாசம் உரசி எண்ணி உருசிக்க கொண்டுவந்து தந்துள்ளேன். நீங்கள் ஒரு கணத்தை செலவிட்டு இந்த மாசற்ற காதலை மனதில் காணுங்கள்.
பெண்: வாவி வளைந்து சலசலக்குது
வரம்பில் கதிரு கலகலக்குது
பாவி மனம் துடிதுடிக்குது மச்சானே- இஞ்சே
பதில கொஞ்சம் பார்து சொல்லுங்க அத்தானே

ஆண்: குடும்ப பாரம் நெறய இருக்கு
குருவி விரட்டப் போக வேணும்
உடும்பப் போல புடிக்கிறயே கண்ணம்மா- என்ற
உசிர முடிஞ்சி இழுக்கிறயே என்னம்மா

பெண்: வாய்காலத் தான் எறச்சி எறச்சி
வயசி போன பிறகும் இன்னும்
வாழ்க்கை ஒன்று வாழனுமா மச்சானே- ஒடனே
வசதி பார்து தாலி கட்டனும் அத்தானே

ஆண்: தை பொறந்து வரட்டும் புள்ள
தாலி செய்யப் பொன் உருக்கணும்
தரையில் விழுந்த கதிரறுக்கணும் கண்ணம்மா- மறுகா
தாளம் மேளம் முழங்கும் முழங்கும் பொன்னம்மா

பெண்: தாலி வேணாம் வேலி வேணாம்
தருணம் பாக்க தரகன் வேணாம்
தோழில் சாய நீ இருந்தால் போதுமே- உனக்கு
தோழியாக நான் இருப்பேன் அத்தானே

0 comments:

Post a Comment