"காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்"
கௌரவ பா.உறுப்பினர் திருமதி சாந்தினியை முந்தநாள் பாராளமன்றத்திற்கு ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்த போது மீண்டும் இரு வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது மகிழ்சி.இவர் போன்ற அனுபவமும் விடய அறிவும் படித்தவர்களும் பா.ம செல்வதை நான் மிகவும் வரவேற்கிறேன். இவர் அன்பானவர் அதேபோல் நுனி நாக்கில் புள்ளிவிவரங்களை வைத்து தொனி உயர்த்தி பேசும் பல்மொழி ஆற்றல் கொண்ட ஒரு திறமைசாலி. அவரை மீண்டும் கண்டு பேசியதில் மகிழ்சி. இவ்வாறானவ்களைத்தான் கௌரவ என அழைக்க தோணுகிறது.
ஒவ்வொரு அமைச்சில் இருந்தும் இவ்வாறான முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கும் போது அதிக அதிகமான அமைச்சர்களும் பா.ம உ களும் பிரசன்னமாகி அவர்களது மக்களுக்காக பிரதேசநலன்களுக்காக குரல்கொடுத்து சலுகைகளைளும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் உத்தரவாதப்படுத்திக்கொண்டு செல்வதை அவதானித்தேன்.
ஆனால் அந்த இடத்தில் எமது மாவட்ட பிரதிநிதிகள் யாரையும் காணக்கிடைக்கவில்லை. நம்மவர்கள் இங்கு எப்படி இவர்களது ஆளுமையையும், சிந்தனையையும் மிஞ்சி செயற்பட முடியும் என சிந்தித்தேன், அத்தனை திறமையான பொருளாதார, அரசியல் சித்தாந்திகளாகவும் பேச்சாற்றல் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். இவா்கள் மக்களுக்காக வந்தவா்கள். நம்மவா்கள்?????? எமது மக்கள் பாவம் அது அவர்களுக்கு வேண்டும்.
சமுகம் சார்ந்த அக்கறையுடையவர்களை அரசியல் கொண்டிருக்கவேண்டும். அது இங்கு உள்ளவர்களிடம் இல்லை. அத்துடன் முழுமையான விடய அறிவு குறிப்பாக திட்டமிடல், பிரச்சினைகளை அடையாளங்காணல், ஆய்வு, திட்ட அமுலாக்கம், கணக்கறிக்கை, கணக்காய்வு, திட்ட மீள் பரிசீலனை என்பவற்றுடன் இவற்றை மக்களிடமும் மன்றத்திலும் சமர்பிக்கும் பேச்சுத்திறமை அதிலும் இவற்றை ஏனையவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆங்கில அறிவு இல்லாதவர்கள் தயவு செய்து அரசியல் செய்ய வந்து ஒட்டு மொத்த மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள். ஆப்படி நீங்க அரசியல் செய்துதான் வாழனும் என்றால் தயவு செய்து படிக்கச் செல்லுங்கள் பின்னர் இவ்வாறான அனுபவங்களை பெற்றுக்கொள்ளுங்கள் அதன் பின் மக்களிடம் செல்லுங்கள். உங்களையெல்லாம் வினயமாக கேட்கிறேன். உங்கள் மத்தியில் இருக்க எனக்கு வெட்கமாகவும் துக்கமாகவும் இருக்கிறது.
0 comments:
Post a Comment