எல்லா மனிதரும் யாராவது ஊக்கப்படுத்தவேணும், தட்டிக்கொடுக்கவேணும் என்று காத்துக்கிடக்கிறார்கள். அந்தப் பொறி எங்க இருந்து கிளம்புது என்பதை பலர் தமது ஈகோவால் அறிய மறுத்து விடுகின்றனர். நான் வழமைபோல கள விஜயம் போனேன், 1)ஒரு மக்கள் சந்திப்பு அவர்கள் தந்த குளிர்பானம் அருந்திவிட்டு அவர்களது சுகதுக்கங்களை கேட்டு அவர்களோடு உரையாடி வந்தேன், 2). இன்னும் ஒரு பாலர் பாடசாலைக்கு வரச் சொல்லி அங்கு போனேன் அவர்களுடன் பாடினேன் அவர்கள் ஊட்டிய கடலையை உண்டேன் ஆசிரியர்களை பாராட்டினேன், 3). இன்னும் ஒரு குடும்பம் பல இழப்புகளை சந்தித்த குடும்பம் உரையாடினேன் நாங்கள் கொண்டுபோன உணவுகளை பகிர்ந்து உண்டோம்.
இவர்கள் எல்லாம் யாராவது ஒருவர் உற்சாகச் சூழலை ஏற்ப்படுத்த மாட்டாரா என தாமரை மலர்கள் சூரியனது வருகையை மலர்வதற்க்காக பார்த்திருப்பதுபோல் காத்துக் கிடக்கின்றனர்.அதிலும் பாதிப்புக்குள்ளாகி நலிவுற்றுள்ள எம்மக்கள்.
ஆக இவர்கள் எல்லாம் நம்மைப் போன்றவர்கள் வந்து இவர்களோடு கதைப்பார்களா! என்று எதிர்பார்க்காதவர்கள். இதைத்தான் பல பொதுஜன அதிகாரிகள் மற்றும் சில படித்து பெரும் பதவியில் இருப்போரும், உழைத்து உச்சத்தில் இருப்போரும் செய்துவருகிறார்கள், ............இது என்னங்க நியாயம்!!!.
உங்கள மாதிரித்தானேங்க இவங்களும் தட்டிக்கொடுப்பு, உற்சாகத்தை எதிர்பார்ப்பாங்க!! றைபண்ணிப் பாருங்க நம்மளுக்கும் அவங்களுக்கும் நெறய சந்தோசம் கிடைக்குமுங்க! சில அரசியல்வாதிகளும் அந்தப் பரிபாரங்களும் இப்படித்தான் பல நேரங்களில! ................கிராமத்துப்பக்கம் அந்த வாக்குகள பெற மட்டும் போவாங்க! அப்புறம் மக்கள்தான் அவங்கட்டபோய் காத்துக்கிடக்கணும். மக்கள் பாவமுங்க அவங்களுடன் ஒன்றிணைந்து அவர்களை உற்சாகப்படுத்தலாமே!
// 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்'//
0 comments:
Post a Comment