கொழும்பு தமிழ் சங்கத்தில் இன்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டுக்கு நானும் ஒரு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தேன். நன்றி கௌசி அக்கா.
ஒரு நூல் என்னைப் பொறுத்த அளவில் அனுபவத்தில் இருந்தும், கற்றவை அல்லது பெற்றவையிலிருந்தும் மூன்றாவது இரண்டும் கலந்துமான மூன்று வகையில் பிரசிவிக்கப்படுகின்றன.
இந்த மூன்றாம் நிலை எழுத்து அதிகம் வாசகர்களை தன்னகத்தே கொண்டிருப்பது சிறப்பு.
இந்த மூன்றாம் நிலை எழுத்து அதிகம் வாசகர்களை தன்னகத்தே கொண்டிருப்பது சிறப்பு.
இந்த மூன்றாம் நிலை எழுத்துக்கு சொந்தக்காரரான ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மட்டக்களப்பினை பூர்விகமாகக் கொண்டவருமான கௌசி என அழைக்கப்படும் சந்திர கௌரி சிவபாலன் அவர்களின் 'முக்கோண முக்குளிப்பு' நூல் வெளியீடு கொ.த.ச தலைவர் தம்பு சிவசுப்ரமணியன் அவர்களின் தலைமையில் பிரபல எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், இலக்கிய வாதிகள், இணைய ஆசிரியர்கள் கலந்து கொள்ள ஆக்க பூர்வமான மாலைப் பொழுதாகவும் இந்தப் பெரியவர்களின் தொடர்புகளை தேடிக்கொண்ட ஒரு நாளாகவும் இது அமைந்து இருந்தது.
எமது தமிழ் மொழி உலகத்தில் அழிவடைந்து வரும் 25 மொழிகளில் 8 ஆவது இடத்தில் இருக்கின்றது என யுனெஸ்கோ ஆதாரம் காட்டுகிறது. மாறாக உலகில் அதிகளவில் பேசப்படும் 14 மொழிகளுக்குள் எமது செம்மொழியும் ஒன்றாக இருந்து வருகின்றது என்கின்ற இனிப்பான செய்தியும் எமக்குண்டு.
அதற்கு மேலாக காவாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசனம் ஒன்று தயார்படுத்தப்பட்டு வருகின்றது அதில் 50 விகிதம் நிறைவேறி இருக்கின்றது. என்பதற்கெல்லாம் எமது தாயத்தை விட்டு வெளியேறிய எமது தொப்புள் கொடி உறவுகள் காரணமாக பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அந்த வகையில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது தாய்மொழியை மறவாத அக்கா கௌசி அவர்களை இந்த இடத்தில் என் தமிழை வாழ வைக்கும் கைங்கரியத்தில் கை கோர்த்து பணியாற்றும் ஒருவராக அறிமுகம் செய்ய விரும்புகிறேன். உங்கள் தமிழ் பணி தமிழ் ஆர்வம் நின்று நிலைத்திருக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்.
0 comments:
Post a Comment