எமது மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளிடையே அதிக இடை குறைந்த பிள்ளைகளை கொண்ட மாவட்டங்களில் முன்னிலை வகிப்பது வதுளை இது 32.8 விகிதமாக இருக்க அடுத்தபடியாக மட்டக்களப்பு மாவட்டம் 27.5 ஆக உள்ளதென என ஆய்வு தெரிவித்திருப்பது கவலைக்குரியதாகும். இது நேரடியாக அந்த மாவட்டத்தின் வறுமையை அதிகரிக்கும் என்பதற்க்கமைவாக எமது மாவட்டத்தின் வறுமையின் அளவு அதிகரித்துக் காணப்பட்டமை அனைவரும் அறிந்தது.
எனவே மக்களின் நல்ல வாழ்க்கையை ஏற்ப்படுத்த மந்த போசனையை குறைவடையச் செய்யவேண்டும். இது பிள்ளைகளின் இடையில் குறைவினை ஏற்படுத்தி அவர்களது கற்றல் செயற்ப்பாட்டினை குறைப்பதுடன் நோய்க்கு ஆட்படுத்தி அவர்களின் சுகாதார செலவினை அதிகரிக்க வைக்கின்றமையினைக் காணலாம். இது இக்குடும்பங்களின் வினைத்திறனான உற்பத்திக்கு தடைக்கல்லாக இருந்துவருவது புத்திஜீவிகள் கருத்தில் எடுக்கவேண்டியதொன்றாகும்.
- இவற்றை இல்லாது செய்ய மக்களிடையே ஒருங்கிணைந்த தெழிவிவை விழிப்புணர்வினை அதிகரிக்கவேண்டும்
- மாவட்டத்தின் உணவு உற்பத்தித் திறனை அதிகரிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தவேண்டும்
- அவர்களுக்கான மானிய வசதிகள்இ சந்தைவாய்புக்களை அதிகரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கரிசனை கொள்ளவேண்டும்.
- கிராமப் புறங்களுக்கான நகரும் சுகாதார சேவைஇ நடமாடும் சுகாதார சேவையை ஒருங்கிணைந்த வகையில் அதிகரிக்க ஆட்சேபனை செய்யப்படவேண்டும்.
0 comments:
Post a Comment