"சுயநலமே ஒழுக்க கேடு, சுயநலமின்மையே நல்லொழுக்கம் இதுவே நாம் ஒழுக்கத்துக்கு தரும் ஒரே இலக்கணம்" சுவாமி விகானந்தர் சொல்லி இருப்பதற்கு இணங்க பொதுநலத்தை கருத்தில்கொண்டு வருடா வருடம் நடைபெறும் அமரா் த.பாக்கியராசா அவர்களின் ஞாபகார்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று 14.08.2016 அடியேனும் கலந்துகொண்டிருந்தேன். உங்களுக்கு மனமுவந்த நன்றிகள். அது மிகவும் பிரயோசனமாகவும் எடுத்து காட்டானதாகவும் முன்னோடியானதாகவும் இருந்தது.
என்னைப் பொறுத்த அளவில் இரு நோக்கங்களை இந்த நிகழ்வு தன்னகத்தே கொண்டிருந்தது, ஒன்று எமது கல்வியை வருடாவருடம் எமது ஊர்மக்களை வைத்து அளவிடுவது, அடுத்தது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை தட்டிக்கொடுப்பது என்கின்ற மிகப் பெரிய இரு இலக்குகளை கொண்டு நடத்தப்படுவது இந்த நிகழ்வுக்கு சிறப்பு.
இவைதவிர இன்னும் பல சிறிய நோக்கங்களைச் சொல்லலாம் ஏனைய வசதியுள்ள குடும்பங்களும் இவ்வாறான நிகழ்வுகளை செய்வதற்கான உதாரணமாக இருக்கின்றமை, மாணவர்களின் அடைவை இரட்டிப்பாக்குதல், சமுகங்களின் அங்கத்தவர்களை உள்வாங்கி பாராட்டுதல் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புதல் என்கின்ற அடிப்படை சித்தாந்தத்தினை இந்த நிகழ்வு சுமந்துசெல்லும் நீண்ட அபிவிருத்திக்கான ஒரு திறவுகோலாக என்னால் பார்க்கப்படுகிறது.
கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன. மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன. அதிலும் இது போன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது. அந்தக் கேள்விக்கு விடையிறுக்கும் நிகழ்வாகவும் நான் இந்நிகழ்வை பார்கிறேன் ஏனெனில் நான் முன்பு கூறியது போன்று இங்கு பல அறிஞர்கள் கல்விமான்களை கற்றறிநடதவர்கள் அழைக்கப்பட்டு கல்வியை பயன்படுத்தி நல்லபாதைகளை வகுத்துக்கொண்டு நல்லமனிதர்களாக வாழும் பல வழிமுறைகளை அவர்கள் மூலம் எடுத்து சொல்லும் ஒரு உபாயம் மாணவர்களை தீய வழியில் இருந்து முன்பாதுகாக்கும் ஒரு நிகழ்வாக மற்றும் இக்காலத்து பொருத்தமான விழிப்புணர்வை அள்ளி தெழிக்கும் ஒன்றாக பார்கிறேன்.

இங்கு இரண்டு நிகழ்வுகள் ஒருங்கே நடைபெற்று வருகின்றன ஒன்று புலமைப் பரிசில், க.பொ.த சா.தர மற்றும் உயர்தர மாணவர்களிடையே சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி விருது வழங்குதல் மற்றும் அவர்களுக்கான வங்கிக்கணக்கினை திறந்து ஊக்கப்படுத்துதல் என்பவை அவை. இவற்றின் மூலம் அவர்களை மென்மேலும் வளர்த்துவிடுகின்றமையும் அதுபோல் ஏனைய பெற்றோர்களிடையே மாணவர்களிடையே ஒரு வகையான மறைமுக ஊக்கப்படுத்தலினை அதிதிகளை கொண்டு வாழ்த்தி கௌரவிப்பதன் மூலம் வைரல் போன்று தூண்டிவிடுவதனாலும் வருடாந்த கல்வி மட்டத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் நல்ல கைங்கரியத்தினை நீங்கள் செய்து வருகின்றீர்கள். இதன் மூலம் மாணவர்களிடையே தைரியம், தன்னம்பிக்கை எதிர்காலம் பற்றிய கனவினை விதையாக தூவும் ஒரு பாரிய அடித்தளத்தினை இட்டு இச்சமுகத்தின் கல்விக்கண்ணை திறக்க ஊண்டுகோலாக இருந்து வரும் இக்குடும்பத்தினரை எமது ஊர்சார்பில் பாராட்டாமல் இருக்க முடியாது. அதுபோல் ஓடி ஆடி இந்த நிகழ்வினை ஒழங்கு செய்யும் வெ.வி.வி.க உறுப்பினர்களையும் நாம் மனமார பாராட்டியாகனும்.
கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன. மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன. அதிலும் இது போன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது. அந்தக் கேள்விக்கு விடையிறுக்கும் நிகழ்வாகவும் நான் இந்நிகழ்வை பார்கிறேன் ஏனெனில் நான் முன்பு கூறியது போன்று இங்கு பல அறிஞர்கள் கல்விமான்களை கற்றறிநடதவர்கள் அழைக்கப்பட்டு கல்வியை பயன்படுத்தி நல்லபாதைகளை வகுத்துக்கொண்டு நல்லமனிதர்களாக வாழும் பல வழிமுறைகளை அவர்கள் மூலம் எடுத்து சொல்லும் ஒரு உபாயம் மாணவர்களை தீய வழியில் இருந்து முன்பாதுகாக்கும் ஒரு நிகழ்வாக மற்றும் இக்காலத்து பொருத்தமான விழிப்புணர்வை அள்ளி தெழிக்கும் ஒன்றாக பார்கிறேன்.
எல்லா உறுப்புகளும் சரியாக இருந்தும், 'கண்' இல்லாவிட்டால் ஒருவனால், பொருள்களையும், காட்சிகளையும், இயற்கையின் அழகுகளையும் காண இயலாது. எனவே அவன் ஒரு முழுமை
பெற்ற மனிதனாகக் கருதப்படமாட்டான். இந்த உண்மையின் அடிப்படையில் தான், ஒரு சமுகத்தின் கண்ணை திறந்து வைக்கின்ற நிகழ்வினையே திருமதி.சிவமணி அம்மையாரும் குடும்பத்தினரும் செய்துவருகின்றனர். கல்வியால் அறிவைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் எமது அன்றையத் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்திருக்கிறது. அறிவாலும், ஆற்றலாலும் பண்பட்ட ஒரு சமுதாயத்தில் தான், இத்தகைய இடம், காலம் கடந்த கருத்துகள் தோன்றும்.
அவை இன்றும் கடல்கடந்தாலும் தாய் மண் மீதான விசுவாசம் தாய்மொழிமீதான விசுவாசம் போன்றவற்றினால் இதை திரு.பா.கமலநாதனின் அனுசரணையில் உள்ளுர் சேவை மனப்பாங்குள்ள தொண்டர்களின் பங்களிப்புடன் நிகழ்திவருவது நெகிழ வைக்கிறது.
'எழுத்து அறிவித்தவன் இறைவன்' என்பார்கள். எழுதவும் படிக்கவும் துணை செய்பவர், இறைவனுக்குச் சமமானவர். இதிலிருந்து கல்விக்கும் கற்பிப்பவனுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நன்கு புலனாகிறது. வள்ளுவர் எழுத்தைக் கண் என்று கூறுகிறார். எழுத்தைக் கற்பித்தவன் கண்ணை வழங்கியவன், எனவே அவன் இறைவனைப் போன்றவன். இதனையே திரு பா.கமலநாதன் அவர்கள் செய்து வருகின்றார் அவர்மீதான மதிப்பும் மரியாதையும் இன்னும் இன்னும் எம்மத்தியில் அதிகரித்து வருகின்றது. உங்களுக்கு கடவுளின் ஆசி என்றும் கிடைக்க வேண்டும் என்பதே எமது அவா.
0 comments:
Post a Comment