நான் மாமாங்கம் சென்று மனமகிழ்ச்சி கொண்டபோது அவரை நினைந்து பாடிய பத்து பாட்டு என் அப்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ம, மா, மி, மீ என ஒரே எழுதது வரிசையில் 10 பாடல்கள்!
ம
மன்னனே நான் தொழும் கன்னலே- லோக
மாமறையே மகிழ்ந்து ஒளிதரும் மின்னலே
இன்னல்கள் எம்மினம் இழந்திட –வளத்தை
ஈன்றவா மட்டில் வாழ் ஆண்டவா
சுயம்பாக வந்தவா போற்றி- எமக்கு
சுகமள்ளி வழங்கிடும் கணநாதா போற்றி! போற்றி!
மா
மாமாங்கம் என்றொரு ஊரு- அங்கு
மகிழ்ந்திட இயற்கைதான் பலவகை பாரு
மன்னரும் தொழவந்த நாடு- தானே
மனங்கொண்டு உறைந்திடும் இறைவனின் வீடு
ஏமாறும் என்மனம் இருள்- அதில்
எழுந்துநீ இறைவனே கருணையை அருள்!
மி
மின்னலும் படராத காடு – அனுமன்
மீட்டிட சீதையை தேடிய வீடு
யன்னலாய் ஒளிதரும் கிழக்கு- அங்கு
யாவர்கும் பிணிநீக்க அருள்வது வழக்கு
என்னவா ஈசனின் முன்னவா- உடைந்து
உழல்கிறேன் காத்திட ஓடிவா அப்பா
மீ
மீன்மகள் பாடிட ஆடும்- தென்னை
மேவிய வயலோரம் ஆறுகள் ஓடும்
தேன்வதை பொங்கியே வழியும்-இந்த
தேசத்தில் சிவம் வந்து பாவங்கள் அழியும்
நான்பாட நல்வார்தை தந்தாய்-ஈசா
நாள்தோறும் உனைப்போற்ற நாடுவேன் வந்து!
மு
முன்கோபம் மயக்கம் மறதி- இன்னும்
மூப்பையும் சாவையும் அறியாத பிறவி
கண்கெட்டு மனம் செத்து உடைந்தேன்- உன்னை
கண்டபின் பிறப்பினில் இல்லாத அடைந்தேன்
என்அப்பன் என்தெய்வம் நீயே!- உன்னை
எண்ணினால் இரந்தூட்டும் அன்பான தாயே!
மூ
மூலாதாரமே எங்கள் ஈசா- வேலன்
மூத்தவா அழைப்போர்கு அருள்பொங்கும் நேசா
அமிர்தகளி தீர்த்தம் கொண்டாய் -அதில்
அமிழ்வோர்கு நோய்தீர்கும் மருந்தாக நின்றாய்
மலிவாகிப் போனேனே நானும்- உலகில்
மலியாத உனதருள் எமக்கென்றும் வேணும்
மை
மையல் கொண்டேன் உனைக்கண்டு- பார்து
மார்மேலே கைதூக்கி வணங்கினேன் நிண்டு
மின்னொளி கண்ணைப் பறிக்குது- உயர்ந்து
மேவிய கோபுரம் அருளள்ளி தெறிக்குது
மாமாங்கம் மாமாங்கம் என்றால்- அருள்
மனமெல்லாம் புகுந்து மகிழ்விக்கும் நின்று
மெ
மெல்ல அசைந்திடும் உன்னுருவம்- கண்டு
மேனியில் நுடங்குகு என் கருவம்
பொல்லாத வறுமையைப் போக்கு- தமிழர்கு
இடர்தரும் கொடியோரை அடியோடு தாக்கு
எல்லாமும் நீதானே அப்பா – எமக்கு
இருந்தாலும் இழந்தாலும் நீதானே காப்பு
மே
மேளங்கள் முழங்கிட திருவிழா- கோயில்
மூலவர் வெளிவர அழகான பெருவிழா
அமுதள்ளிப் படைத்திடும் முன்றல்- இரந்து
அழுவோர்கு குறைதீர்கும் அருளான மன்றம்
பிணிநீக்கும் சந்தணச் சேறு- அதில்
பணிந்தெழு பழவினை உனைவிட்டு மாறும்
மொ
மொழியெல்லாம் பொய்குதே எனக்கு -பொல்லா
பழிவந்து சூழுதே பெருமையா உனக்கு
விழிசெய்த பாவமோ என்ன- நான்
விரும்பியும் கிடையாத வாழ்கைதான் அதிகம்
எழில்கொஞ்சும் மாமாங்கக் கோயில் -வந்தால்
எம்நிலை மாற்றிடும் கோபுர வாயில்
0 comments:
Post a Comment