இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை இலங்கை பயணம் செய்ய உள்ளார். இது அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளும் முதல் இலங்கை விஜயமாகும். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது, குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில்.
கடந்த சில
ஆண்டுகளில், இந்தியா அபரிமிதமான வளர்ச்சி
அடைந்துள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 1 டிரில்லியன் டாலரால் அதிகரித்துள்ளது. வீதிப் போக்குவரத்து அமைப்பு 6.7 மில்லியன் கிலோமீட்டர் வரை விரிவடைந்து, உலகிலேயே மிகப்பெரிய வீதி வலையமைப்பாக மாறியுள்ளது. மத்திய தர
மக்கள்தொகை 400 மில்லியனிலிருந்து 550 மில்லியனாக உயர்ந்துள்ளது, மேலும் வறுமை கோட்டுக்கீழ் வாழும் மக்கள்
300 மில்லியனிலிருந்து 72 மில்லியனாக குறைந்துள்ளனர். இந்தியா
தொடர்ந்து உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழ்ந்து வருகிறது.
எனினும், இலங்கை – இந்தியாவின் மிக நெருங்கிய புறநாட்டு அண்டை நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும் – இந்த அபரிமிதமான வளர்ச்சியின் முழு பலனைப் பெறத் தவறியுள்ளது.