நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம். -ஷெல்லி.
ஆம், இது எனது 500 ஆவது ஆக்கம். நன்றி சொல்ல வேண்டிய நேரம். இத்தனை சிரமங்கள் மத்தியிலும் இந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களுக்கு இலட்சக்கணக்கயான தகவல்களைக் கடத்தி அவர்களை விழிப்படைய வைத்திருக்கின்றேன் என்ற ஒரு மகிழ்ச்சி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாம் கற்றதற்கான கடமையை முடியுமானவரை செய்து வருகின்றேன் என்ற பெருமை மறுபக்கம். இந்த நாளில் இன்னுமொரு நல்ல விடயத்தினை நான் பகிர விரும்புகின்றேன் அது எனது 32000 சொற்களுக்கு மேலடங்கிய 'சிறப்பான குடும்பம் செழிப்பான மட்டக்களப்பு' எனும் புத்தகம், அதில் பல நல்ல விடயங்கள் ஆராயப்பட்டு எழுதி இருக்கின்றேன். நிச்சயம் அதனை 2026 இல் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளேன். இது நல்ல விதையாக ஒரு குடிசை நிலத்திலிருந்து கொள்கைத் தளம் வரை எனது அனுபவ ஆய்வுத் திறனில் உருவாக்கி இருக்கின்றேன்.
இந்த உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்து காட்டும் செயலைப் பார்த்துக்கொண்டிருப்பவர்
பலர். என்ன செயல் நடக்கிறது என்றே அறியாமல் இருப்பவர்கள் மிகப் பலர். எனப் பட்லர்
கூறுவது என்னவோ அந்த மிகப் பலரில் நீங்கள் இருக்கின்றீர்களா என்றால் 2026 உங்களுக்கே உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.
நான் அதிகம் சமுக பொருளாதார விடயங்களை மிகத் துல்லியமாக தகவல் ஆதாரங்களுடன்
எழுத இந்த இலவச வுலக்ஸ்பொட் உதவியதை எத்தனை நன்றிகூறினாலும் தகும். ஆதற்கான உலக
தொழில்நுட்ப வளர்சியை நான் நன்கு பயன்படுத்தவும் கற்றுக்கொள்ளவும் கடவுள் எனக்கு
வல்லமை தந்துள்ளான் என்பதனை நினைத்து நன்றிகூரவேண்டும்.
சமுகத்தில் நாளாந்தம் காணும்,
கேட்கும்
அறிந்துகொள்ளும் விடயங்களை கொண்டு சேர்க்கும் ஊடகனாக இந்த வலைத்தளத்தை உருவாக்கினேன்.
இதில் தம்பி சி.ரமேஸ் எனக்கு என்றும் முன்னோடி அவனுக்கு எப்போதும் எனது நன்றிகள்
இருக்கும்.
இன்று தகவல் தொழில் நுட்பம் பல மாற்றங்களைக் கொண்டு எம் கையில் தந்துள்ளது.
இருந்தும் கல்விப் புலத்தில் இருக்கும் பலர் ஊனமுற்றவர்களாக இருந்து சுயநலத்தின்
முழுவடிவத்துக்கும் உதாரணமாக இருப்பது வருத்தமே.
ஏனெனில் 'நாம் இன்று
சம்பளத்துக்கு வேலை செய்கின்றோம் என்ற மனநிலையில் கடமையையும் நன்றி உணர்வையும்
மறந்தவர்களாகிவிடுகின்றோம்.'
தொலைவில் தெரிவதைப் பற்றிச் சிந்திக்காதவனுக்கு,துன்பம்
அருகில் காத்திருக்கிறது என்பது தெரியாமலே போகிறது.-கன்பூசியஸ்
இதனால் இன்னும் சூறாவளியிலும் வெள்ள அனர்த்தத்திலும் வேரூன்ற முடியாமல்
அல்லல்படும் நலிவுற்றவர்களின் சாம்ராஜ்யம் பெரிதடைந்து போவதை தடுக்க முடியாமல்
போகின்றது என்பது என்னமோ தாங்கொணா வருத்தமே.
வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணில் இருந்து சுவர்கள் முளைத்து
இருப்பதாகக் கூட எண்ணலாம். - எஸ்டோனியா
பழமொழி அப்படி நாம் நினைத்துக்கொண்டே செயலற்றவர்கள் வாழ்கின்றனர். இதனால் எனக்கு
இருக்கும் கவலை, மக்களையும், மண்ணையும் மற்றும் கலாசாரத்தினையும்
நேசிக்காத அறிவற்ற செயலற்ற தலைமைகளை நாம் உருவாக்கும் தெழிவற்ற மக்களை
வைத்திருக்கின்றோம் என்பதே.
இதனால் நாளாந்தம் மக்கள் அவமானப்படுகின்றார்கள், அல்லல்படுகின்றார்கள்,
வளத்தை
இழக்கின்றார்கள், வரும்படியை
இழக்கின்றார்கள். இதற்கும் நம்மிடையே கடமை தவறும் படித்தவர்களையே நான் சாட
விரும்புகின்றேன். மக்களை இங்கும் இவர்கள் தட்டுகளாகப் பிரித்து கீழ்தட்டை
மேல்தட்டுக்கு விலைபோகும் ஒன்றாகவும்,
என்ன
செய்வதென்றறியாமல் மார்கம் மாறும் மாக்களாகவும், மண்டியிடும் அடிமைகளாகவும் வைத்து அழகு பார்க்கும் ஒரு
துர்பாக்கியம் எங்கு சொல்வேன்!
இன்று தலமைகளுக்கு, அது
கிராமத்திலிருந்து அங்குள்ள மரங்களை வெட்டவும், மண்ணை அகழவும்,
தெருக்கென்றக்டை
உருக்குலையைச் செய்யவும், அரசியல்
வாதிக்கு விளக்குப் பிடிக்கவும்,
ஊர்காசை
எல்லாம் ஊதாரித்தனம் பண்ணவும், இன்னும்
எதுவுக்கெல்லாம் வீணாகப் பயன்படுத்தும் நிலை பல கிராமங்களில் பரவலாகக்
காணப்படுகின்றன. அதனையே இந்த இளைஞர்களும் ஏன் பாடசாலை மாணவர்களும் பார்த்துப்
பழகுகின்றனர். இவற்றை மாற்றவேண்டும்,
அதனையும்
செய்ய எனக்கு பலம் இன்னும் தேவை.
கலையை வளர்க்க என கலாசாலை கல்வியை வளர்க்க ஒரு கலாசாலை வளர்ந்ததா இவை? நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்! வளர்ந்தது
இரண்டிலும் உள்ளவர்களின் வாழ்க்கைதான் இல்லையா? ஆனால் இவை உருவாக்கியவர்கள் நல்ல காலம் உயிரோடு இல்லை.
நோக்கம் நொருங்கி துகள்களாக மாறிவிட்டது.
இவையெல்லாம் குறைகளாக கண்ணில் படுகின்றன,
ஆனால்
பல அர்பணிப்புள்ள தொழிலாளர்களின் கண்ணியத்தில் இந்தக் குறைகள் மன்னிக்கப்படுகின்றன
மறைக்கப்படுகின்றன. நெஞ்சைத் தொட்டு கண்ணை மூடி உங்களது இந்த வருடம் எப்படிக்
கழிந்தது என ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்?
நானும்
அதை நினைத்துப் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளுகின்றேன்.
நாம் இன்னொருவருக்காய் உதவுவது,
நமது
அறிவை ஆற்றலை பகிர்ந்துகொள்வது, வழிகாட்டுவது, ஆற்றுப்படுத்துவது, ஆபத்தில் உதவுவது எவ்வளவு பெரிய காரியம்
என்பதை இன்னொருவர் அவற்றை செய்ய முடியாது என சொல்லும் போது ஒப்பிட்டு உணர
முடிகிறது.
காரணம் நமது நேரம், தூர இடமாய்
இருந்தாலும் அது பாரமாக தெரிவதில்லை பணி செய்யப் புறப்பட்டால் எனக்கு, சிலர் அருகில் இருந்தும் இவற்றை ஏற்றுப்
பணிசெய்ய மறுப்பது எவ்வளவு மனிதம் செத்ததனம். ஒருவர் அண்மையில் சொன்னார் 'இந்த வேலை செய்வதில் நமது நேரம் வீணாகின்றது' என்று. நேரத்தை வீணாக்காமல் நல்ல விடயங்களை
செய்ய முடியுமா? ஆனால் சும்மா
கூடி குதாவிடை பண்ணவும், குடித்துக்
கும்மாளம் அடிக்கவும், ஊர்வம்பளக்கவும்
எப்படி அவர்களுக்கு நேரம் கிடைக்கின்றது?
எனவே எனக்கு இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளவும், உதவி செய்யவும் நல்ல உறவுகளையும், நலமான உள உடல் ஆரோக்கியத்தினையும் படைத்த
இறைவனுக்கும், உதவும்
குடும்பத்தினருக்கும் ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும் எத்தனை நன்றியுடையவனாக
இருக்கவேண்டும்!
இது மாத்திரமல்ல கனேடிய தமிழ் வானொலியில் களத்தில் உள்ளவற்றை புலத்தில்
உள்ளவர்களுடன் ஒவ்வொரு வாரமும் 2021 ஆம் ஆண்டில்
இருந்து பகிர்ந்து வருகின்றேன், அதற்காக எனக்கு
சந்தர்பம் அமைத்துக்கொடுக்கும் அந்த வானொலியினருக்கு நன்றி. ஆதற்கு முன் என்னை
மகனாகப் பார்த்து இதற்கெல்லாம் வழிசமைத்துத் தந்த இறைபதமடைந்த தமிழ் பற்றாளர்
பிலோமினா அம்மாவுக்கும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து என்னை தொடர்ந்தும்
ஊக்குவிக்கும் மண்ணை நேசிக்கும் தமிழ் மாண்புள்ள அம்பிகா அக்காவுக்கும் ஆயிலரம்
நன்றிகள்,
இன்னும் எல்லா விதத்திலும் எனக்கு பக்கதுணையாகவிருக்கும் துணைவி, அம்மா தங்கச்சி என்னைவிட்டு பிரிந்தும்
பிரியாமல் இருக்கும் அப்பா, என் உறவுகள்
நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் சொல்லியாக வேண்டும்.
எனவே நன்றி சொல்லத் தவறிய அனைவருக்கும் இந்த ஆண்டு அனுபவங்களை அள்ளித்தந்து
கழிந்து செல்ல உதவிய அனைவருக்கும் நன்றிகள். பிறக்கும் ஆண்டு மீண்டெழுவதற்கான
ஒற்றுமைக்கான, ஆக்கங்களை
செய்வதற்கான, மாற்றங்களுக்கான
ஆண்டாக மலர வெள்ளிச்சரம் சார்பாக வாழ்துகின்றேன்.
புன்னகையின் வழியாகவும்
அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களை கற்றுக்கொண்டே இருக்கிறோம். அனுபவம் ஒன்று
தான் மிகச்சிறந்த ஆசிரியர். - விவேகானந்தர்


0 comments:
Post a Comment