வங்களா விரிகுடாவிற்கு தும்மல் ஏற்படும் போது இலங்கைக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது என்று எமது சமூகத்தில் பரவலாக பேசப்பட்டுவரும் வாய்மொழியாக கேட்டிருக்கின்றோம்.இது ஒரு பேச்சு வழக்காக பேசப்பட்டுவருகின்ற போதும் இந்த வாய்மொழியில் ஒரு அர்த்தம் புதைந்து இருக்கின்றது. இந்த மகா சமுத்திரத்தில் சிறிய தீவாக விளங்கும் இலங்கைக்கு வங்களா விரிகுடாவில் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் இலங்கையின் சில பாகங்களுக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவது அவதானிக்ககூடியதாக உள்ளது.
அனர்த்தங்கள் உலகில் தற்போழுது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. மழையை நாம் எதிர்பார்த்திருந்தாலும் தற்போழுது எமக்கு தேவைப்படும் காலங்களில் மழைகிடைப்பதில்லை .மழை பெய்யும் போது அது எல்லை கடந்தும் சென்று விடுகின்றது. இது தொடர்பாக சாதாரண மக்கள் சில எண்;ண கருக்களை வைத்திருந்தாலும் காலநிலைவேறுபாடுகள் அவற்றை மாற்றிவிடுகின்றது. தற்கால உலகில் அனர்த்தங்கள் பற்றி மக்களுக்கு முன்னெச்சரிக்கை முறைமையினை அறியப்படுத்துவது மிக அவசியமானதாகும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டே காணப்படுகின்றது.
திட்டமிடாத அபிவிருத்தி நடவடிக்ககைகள் இயற்கையாக ஏற்படும் இடர்களை நீண்ட அனர்த்தங்களாகவும் மாற்றிவிடுகின்றன அதாவது அபிவிருத்தி தொடர்பாக நடவடிக்ககைகள் எடுக்கப்படும் பொழுது அநனர்த்தங்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு அனர்த்தங்களை குறைப்பதற்குரிய சில சில நடவடிக்ககைகளை மேற்காள்ளவேண்டும்.. இவ்வாறு மேற்கொள்ளும் போது அப் பிரதேசத்தின் பௌதீக தோற்றம் சுற்றாடல் வாழ்கின்ற மக்களின் சமூக பொருளாதார நிலைமை என்பன கவனத்தில் கொள்வது பிரதானமாகும்.இத்தகைய தரவுகளில் இருந்தே அனர்த்தங்களை குறைப்பதற்கான சாதகமான நடவடிக்ககைகள் பற்றி தீர்மானிக்க முடியும் .அனத்த முகாமைத்துவ நடவடிக்ககைகளில் முக்கிய கருப்பொருளாக இருப்பவர்கள் அந்த பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் ஆவர்..
மேலதீகாரிகளினால் அனர்த்தமுகாமைத்துவம் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் சந்தர்பங்களில் அடிமட்ட மக்கள் பாதிப்படையாமல் இவ் அடிமட்ட மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு தீர்மானமேடுத்தல் இவ் அனர்த்தமுகாமைத்துவ நடவடிக்கைகளில் முக்கியமானதொன்றாகும்.
அனர்த்த முகாமைத்துவத்தின் போது உயிர் உடமைகள் மட்டுமல்ல மக்களின் வாழ்வாதார மூலங்களும் அவர்களின் பாதுகாப்பு விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் மக்கள் பல்வேறு வகையில் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்யும்போது அவர்களின் உளரீதியான பாதிப்புக்களையும் நீக்குவது ஒரு சவாலாக அமைந்துவிடுகின்றது வாழ்வாதாரங்கள் தொடர்பாக ஆராயும் போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய இன்னுமொரு விடயமும் உண்டு அதாவது குறிப்பிட்ட அனர்த்தங்களுக்கு ஏற்ப அப்பிரதேசத்துக்கு பொருத்தமான வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.இயற்கை அனர்த்தங்களினால் தமது வாழ்வாதார மார்க்கங்கள் சேதமடைவது பற்றி அப்பிதேச மக்கள் அறிந்திராமையும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.அவ்வவ் பிரதேசத்திற்கு பொருத்தமான வாழ்வாதார மார்க்கங்களுக்கு அம்மக்களின் கவனத்தை செலுத்த செய்வது இந்த பிரச்சினைக்கு தீர்வாகின்றது.
இயற்கையான இடர்கள் அனர்தங்களாக மாறுவது என்பது அவ்வவ் பிரதேச மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் ஏற்படுவதாகும்.அனர்த்தங்களினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் அனர்த்தங்கள் தொடர்பாக எச்சரிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களின் பொருளாதார பலத்திற்கு ஏற்ப தீர்மானங்களை எடுப்பதற்குரிய சந்தர்பங்களை வழங்கு கின்றன.
தொகுப்பு
செ.ரமேஸ்வரன்
அனர்த்தமுகாமைத்துவ பயிற்றுனர்..
4 comments:
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
நன்றி கருண்....
அத்தருணம் மிகவும் கொடுரமானது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
நன்றி சுதா....
Post a Comment