13.01.2011 அன்று ஏற்ப்பட்ட கபறனயில் உள்ள கல்லோயா ஆற்று வெள்ளப் பெருக்கில் 5.5 மீற்றர் உயரத்துக்கு ஒரு மரத்தில் பரிதாபமாக அடித்து தூக்கி வைக்கப்பட்ட யானைக் குட்டியொன்று இங்கே காணப்படுகிறது. இந்த ஆறு கொழும்பு இருந்து வடகிழக்கே 88 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இயற்றை யாரைத்தான் விட்டுவைத்தது? ஆறறிவுள்ள மனிதனுக்கே இந்தக் கெதி என்றால் ஐந்தறிவுள்ள வனஜீவராசிகள்???? பாவம்... அடித்துச் செல்லும் வெள்ளத்தில் இலங்கையில் நிலவமைப்பே மாறியுள்ளது. குளங்கள்:; காடுகள்>; மலைகளை அண்டியே கட்டப்பட்டுள்ளது. இந்தக் குளங்களையும் காடுகளையும் சரணாலயமாகக் கொண்டுதான் அங்கு அருகிப்போகும் ஜீவராசிகள் பெருகிவந்தன. மனிதன் மனிதனை மட்டுமா வேட்டையாடினான் மிருகங்களையும்தான் கொன்றளித்தான். யானைகளுக்கும் மனிதர்களுக்கும்தான் சண்டை இருந்த வந்தது> ஆனால் அவற்றோடு இயற்கையும் சண்டைபோடத்தொடங்கினால் அவை என்ன செய்யும்??????
2 comments:
மிகவும் வேதனையாக உள்ளது.. மனிதனும் இயற்கையும் சேர்ந்து சதி செய்கின்றோம்.. இவைகளுக்கு எதிராக.. அவைகள் என்ன செய்யும்..
அதுதான் இயற்கையின் நியதிபோலும் நண்பரே...
Post a Comment