ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வங்கி என்பனவற்றின் அறிக்கைப்படி உலகலாவிய இயற்கை அனர்த்தத்தின் மொத்த இழப்பீட்டு மதிப்பு 185 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும், இது வருடா வருடம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றது.
இதில் அதிக பங்கு சிலி மற்றும் சீன பிரதேசத்தின் அனர்த்தங்களால் விளைந்தவைவே. குறிப்பாக சிலியில் 8.8 றிச்டரில் ஏற்ப்பட்ட பூமி அதிர்ச்சி 30 பில்லியன் அமெரிக்க டொலர்களெனவும், சீனாவில் ஏற்ப்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்ப்பட்டதுமே அதிகமான இழப்பு எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் அண்மையில் வடித்துச் சென்ற வெள்ளத்தின் செலவு அதற்க்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என நமது நாட்டின் அவசர வேண்டுகோளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதன் விபரங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தப்பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை சரியான முறையில், யாருடன், எவ்வாறு, எதை மற்றும் யாருக்காக என்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பிரதேசங்களின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளது பங்கு அமையப்படவேண்டும்.
இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட்ட பின்னர், ஆரம்ப மீள் உருவாக்கம் செய்யப்பட தொடங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் குறிப்புப்படி, ஆரம்ப மீள் உருவாக்கம் என்பது 'இயற்கையாகவோ, மனிதர்களாலோ ஏதாவது பாரிய அனர்த்தம் ஏற்ப்பட்ட பின்னர் உடனடியாக அந்த பிராந்திய அரச ஸ்த்தாபனங்கள் மற்றும் அந்தச்சமுகம் என்பனவற்றினை வலுவூட்டுதல்' எனக் கூறப்படுகிறது.
இந்த ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகள் உடநடியாக கொண்டிருக்க வேண்டியவை குறிப்பாக தற்க்காலிக வீடமைத்தல், பெண்களை வலுவூட்டல், சுற்றுச் சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு வழங்குதல், வாழ்வாதார உதவிகள், சட்டமும் ஓழுங்கும் வழங்கல், உட்கட்டுமான வசதியளித்தல், முரண்பாடுகளுக்கு தீர்வகாணல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை இங்கு வழங்கப்பட வேண்டும்.
இவை சரியான முகாமைத்துவம் இல்லாமல் நடைபெற மாட்டாது. இவை அரச ஸ்த்தாபனங்களினால் தான் அதிக நாடுகளில் இந்த செயற்ப்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றது. இருப்பினும் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அவற்றை செய்வதற்க்கான இயலுமை இழந்து காணப்படுவதனால், ஐக்கிய நாடுகளின் அமையத்தின் வழித்துணையுடன் இந்த தந்திரோபாயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
அவை பல்வேறு துறையினரையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கிடையே ஒரு தொடர்பாடல், ஒருங்கிணைப்பு என்பனவற்றை ஏற்ப்படுத்தி பாதிக்கப்பட்ட சரியான மக்களை தெரிவு செய்வதில் இருந்து அவர்களுக்கான அபிவிருத்திப் பாதையினை காட்டிவிடுவது வரைக்கும் இச் செயற்ப்பாடுகள் நீண்டு செல்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு செயற்ப்பாட்டின் மூலம் இரட்டைப் பதிவுகள் நீக்கப் படுகின்றன, நிறுவனங்களின் இயலுமை, வளங்கள் அடையாளங் காணப்படுகின்றன, அத்துடன் சரியான திட்டமிடல் செய்யப்படுகின்றது. ஆகவே அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளில் துறை ரீதியான, நிறுவன ரீதியான ஒருங்கிணைப்புச் செயற்ப்பாடுகள் இன்றியமையாதவையே.
மிக அவசரமாக அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளினூடாக சொந்த காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கை, சுயாட்சி, மீழ் உருவாக்கம் அத்துடன் நலிவுறும் தன்மை, அனர்த்த ஆபத்து என்பனவற்றினை குறைத்தல் இவற்றை உடனடியாக அமுல்படுத்துவதற்க்காக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செயற்ப்பாட்டாளர்களினை அழைத்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்க்காக கலந்துரையாடல்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பினை முதலில் உறுதி செய்வது இவ் ஒருங்கிணைப்புச் செயற்ப்பாட்டில் முதல் படியாக இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கை அனர்த்த ஆபத்தில் இருப்பதனால் அவர்களது ஆபத்தைக் குறைத்து அவர்களை அங்கிருந்து மீண்டெடுத்தல் அவசியமாகின்றது.
ஆனால் அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளிற்கு அப்பால் நீண்ட கால அபிவிருத்தி, மற்றும் பேண்தகு விருத்தி நோக்கிய திட்டமிடலை இந்த அவசரகால செயற்ப்பாடுகள், நிவாரண ஒழுங்கமைப்புக்கு வெளியில் நின்று தொடங்குவதற்க்கான அத்திவாரத்தினை இட்டுக் கொள்ளுதல் வேண்டும். இவற்றினூடாக நாட்டின் அரசாங்கத்தினுடைய இயலுமையை கட்டியெழுப்புதல், அதன் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், வாழ்வாதாரங்களை மீழ் உருவாக்குதல், சேவைகளை வளங்குதல், அதனூடான அதன் எதிர்கால அபிவிருத்தியை செம்மையாக்குவதனையும் இந்த அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளினூடாக செயற்ப்படுத்தலாம்.
குறிப்பாக அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் மூன்று முக்கிய நோக்கங்களைப் பார்க்கலாம்.
1. அவசரகாலங்களின் போதான உதவிகளை வழங்குதல்.
2. தொடர்ச்சியான மீழ் உருவாக்கச் செயற்பாடுகளை பாதிக்கப்பட்ட சமுகத்துக்கு செய்தல்.
3. நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான அத்திவாரத்தினை இட்டுக் கொள்ளல்.
இலங்கையின் இந்த இலக்குகளை அடைவதற்க்கான தேவை 2004 சுனாமி அனர்த்தங்களின் பின்னரே உணரப்பட்டிருந்தது. இதன் பின் ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தினரின் உதவியுடன் பல விடயங்கள் அரச நிறுவன மற்றும் கொள்கை ரீதியான செயற்ப்பாடுகளில் வலுவூட்டப்பட்டது நினைவுகூர வேண்டியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அவசரகால அவதான நிலையம் என்பன ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தினரின் அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்டு வலுவூட்டப்பட்ட விடயங்களாகும். அத்துடன் இலங்கையின் முக்கியமான மயிற் கல்லாக 2005 இல் தயாரித்து வெளியிடப்பட்ட 'பாதுகாப்பான இலங்கையை நோக்கி' என்கின்ற கொள்கை ரீதியான பேருதவியும் இந்த அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளிற்கு அரச இயந்திரத்தினை வலுவூட்டும் செயற்ப்பாடுகளில் அடங்கும் ஒன்றாகும். இதற்கு பிறகுதான் அரசின் பாராளுமன்றத்தில் இந்த அனர்த்த முகாமைத்துவத்துக்கான சட்டமும் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment