உலகலாவிய ரீதியில் புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்ப்பட்டு வெள்ள அனர்த்தம், புயல், காட்டுத் தீ என்றும் எல் நிலா மற்றும் லா நிலா என்றெல்லாம் வானிலை புதுசு புதுசாக கலியுகத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கிறது.
இது இலங்கையின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல உலகிலேயே அவுஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களிலும் அதன் பொருளாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் அந்நாட்டு சமுகம் எல்லாத்தினையும் ஆட்டங்காண வைத்துக் கொண்டிருக்கிறது. 'ஸ்ரேன்' அறிக்கையின் படி உலகிலேயே தற்போது அதிகமாக நலிவுறும் தன்மைக்குள் அகப்பட்டிருக்கும் இந்நிலை சுமார் 50 தொடக்கம் 100 வருடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு கரையோரம் வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப்பிரயாணத் துறையினர் எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
ஆளானப்பட்ட அவுஸ்த்திரேலியாவுக்கே இத்தனை அச்சுறுத்தல் என்றால் அல்ப்ப இலங்கை என்னவாகும் என்று கடந்த வெள்ளம் பாடம் சொல்லி இருக்கிறது. இலங்கையின் அண்மைய வெள்ளத்தினில் பாதிக்கப்பட்ட பதின்மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமே பட்டுத் தவித்திருக்கிறது. அதில் உள்ள பதின்நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் முற்றாகச் சேதமைந்த போதும், தற்போது அனைத்து பணியாளர்களது கண்ணும் கோலம் கெட்டுக்கிடக்கும் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பால் திரும்பி இருக்கிறது. இங்கு பொங்கிய வெள்ளத்தினில் 46,360 பேர் அதாவது 12,760 குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அனேகமான கிராமங்கள் ஒருதொடர்பும் இல்லாமல் இருந்தமை இந்த பிரதேசத்தின் வெள்ள அனர்த்தத்துக்கான நலிவுறுந்தன்மையை புட்டுக் காட்டுகின்றது அல்லவா?????? குறிப்பாக ஆனைகட்டியவெளி, மலையுர்கட்டு, சின்னவத்தை, மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம், ராணமடு, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, கண்ணபுரம், நெல்லிக்காடு, காக்காச்சிவட்டை, விளாந்தோட்டம், நவகிரிநர் போன்ற 21 கிராமங்கள் நீரில் மூழ்கிக் கிடந்தது.
(தகவல் பிரதேச செயலகம் போ.பற்று)
இம்மக்கள் வயற் செய்கைக்கு அப்பால் மேட்டுநிலப் பயிர் செய்கைபண்ணி வேறு பிரதேச செயலகப்பகுதிகளுக்கு சந்தைப்படுத்தும் ஏற்றுமதி வியாhபரத்திலும் ஈடுபட்டு வந்தனர். அதில் அதிக லாபம் ஈட்டி வந்தனர். பழுகாமம், மண்டுர் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றுக்க தனி மவுசே இருந்தது. இதற்க்கு மேலாக பயறு, குரக்கன், இறுங்கு, சோளம், எள்ளு என்பன போன்ற இன்னோரன்ன தானியப் பயிர்செய்கையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தன்னிறைவு ஏற்ப்படுத்திய பெருமை இவர்களுக்கே சாரும். இவ்வாறு இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட 1665 விவசாயிகள் முற்றாக இப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துடன் 178 பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களது 41 ஏக்கர் பழச்செய்கை மண்ணோடு மண்ணாகி விட்டதை பிரதேச செயலக அறிக்கை பறை சாற்றுகின்றது. அதே போன்று 3310 வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.
(உடைந்து கிடக்கும் மண்டுர் பாலம்)
அபிவிருத்தி திட்டமிடலாளர்கள் அனர்த்தம் பற்றிய கரிசனையினை அபிவிருத்தி நடவடிக்கையில் கொள்ளத் தவறிவிடுகின்றனர் என்பதற்கு வெல்லாவெளிப் பிரதேசம் சிறந்த உதாரணமாகும். இங்கு நான்கு பாலங்கள் (மண்டுர் பாலம், காக்காச்சிவட்டை மருதங்கடவைப் பாலம், ஆணைகட்டியவெளி கோஸ்வே, திக்கோடை கோஸ்வே) முற்றாக வெள்ளத்தில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. அதுபோன்று 124 சிறிய பெரிய அளவிலான வீதிகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன இவை வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபை, மற்றும் நீர்ப்பாசன சபையினரின் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவலுக்கு நன்றி பிரதேச செயலர் போரதீவுப் பற்று...
0 comments:
Post a Comment