வளர்முக நாடுகள் உலக மயமாக்கத்தின் பின்னர் புதிய விடயங்களை அறிந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் எமது இலங்கை போன்ற அரசியல் சிக்கல் நிறைந்த நாடுகள் திட்டமிடல் முறையில் ஏற்படும் இழு பறியினால் ஒப்பீட்டளவில் பின் தங்கியே காணப்படுகின்றன.
அபிவிருத்தியடைந்த நாட்டிற்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கும் இடையே பாரிய இடைவெளி தொடர்ந்து அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாக உள்ளது. இது தலாவருமான ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உணரப்பட்டுள்ளது.
இவ் இடைவெளி நிவர்த்தி செய்ய வேண்டிய நிலைக்கு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. இவ் இடைவெளியை நிரப்புவதற்கான திட்டமிடலே அபிவிருத்தி திட்டமிடலாகும். இத்திட்டமிடலை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கவனத்தில் கொண்டு இதனை நிவர்த்தி செய்வதற்காகவே இவ் அபிவிருத்தித் திட்டமிடலானது மேற்கொள்ளப்படுகின்றது.
அபிவிருத்தி என்பது தொகை ரீதியாக அளவிடக் கூடிய வளர்ச்சியை மாத்திரமின்றி, பண்பு ரீதியான அம்சங்களாகிய வருமானப் பரம்பல், தொழிற்படையின் சேர்க்கை அரசாங்கக் கொள்கை என்பவற்றிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பு ரீதியான உருமாற்றத்தினை குறித்து நிற்கின்றது. அடிப்படையில் மக்கள் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த அபிவிருத்தித் திட்டமிடல் மேற்கொள்ளப்படுகின்றது.
அபிவிருத்தி திட்டமிடலின் நன்மைகள்
• கடந்த கால பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய மதிப்பீடாக காணப்படுகின்றது.
• கட்டமைப்பு மாற்றங்கள் குறிப்பிடுமளவு திட்டத்தினைக் கொண்டிருக்கும்.
• அரச செலவினங்கள் பற்றிய மதிப்பீட்டினை காணலாம். பொருளாதாரத்தின் தனியார் துறை பங்களிப்பினை வரையறுத்து கூறுகின்றது.
அபிவுpருத்தி திட்டமிடலானது தனியே பொருளாதார நிலைமைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது அரசியல் சமூக கலாசார நிறுவனக் கட்டுமானம் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு நோக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துகின்றது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தில் திட்டமிடலானது குறிப்பாக தனிப்பட்டதாகவே காணப்படுகின்றது.
அதேவேளை சமவுடமைப் பொருளாதாரத்தில் திட்டமிடல் மத்திய திட்டமிடலாகவும், கலப்புப் பொருளாதாரங்களில், திட்டமிடல் தனிப்பட்ட திட்டமிடலும், மத்திய திட்டமிடலும் இணைந்ததாகவும் காணப்படுகின்சது. பொருளாதார கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெறல் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு இவ் அபிவிருத்தி திட்டமிடலானது மேச்கொள்ளப்படுகின்றது.
அபிவிருத்தி திட்டமிடல் முயற்சியானது ஆரம்பத்தில் ஒரு பொருளாதார அமைப்பின் பொருளாதார சமூக முன்னேற்றத்தினை தேசிய மட்டத்தில் ஒருமித்த முறையில் எடுத்துக் கொண்டாலும் கூட அது அவ்வமைப்பின் வேறுபட்ட பகுதிகளைப் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஒரு நாட்டின் முழு அளவிலான அபிவிருத்தி பற்றிய சிந்தனையில் பிரதேச அபிவிருத்தி என்பது முக்கிய இடம் பெறுகின்றது. அபிவிருத்தியை திட்டமிடும் போது இடரீதியான பிரதேச ரீதியான அம்சங்களைக் கருத்தில் எடுப்பதும் அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்குவதும் வளர்ச்சிக்குரிய படிமுறைகளாக காணப்படுகின்றன.
அபிவிருத்தி திட்டமிடலின் குறிக்கோள்கள்
1. வறுமையைக் குறைத்தல் - வறுமை என்பது அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையினைக் குறிக்கின்றது. இவ்வாறான வறுமையினை குறைப்பதற்கு இவ் அபிவிருத்தி திட்டமிடலானது இன்றியமையாததாக காணப்படுகின்றது.
2. உற்பத்தி, பங்கீடு என்பது தனியே முதலாளி வர்க்கத்தவர்களை சென்றடையாது, சகல மக்களையும் அதாவது, கீழ் மட்டத்தவர்களுக்கும் சென்றடையக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல்.
3. தொழிலாளர்களின் உற்பத்தி திறனை உயர்த்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து வருமானத்தினை உயர்த்துதல், இவ்வாறு உயர்த்துவதன் மூலம் மக்களின் வறுமையினை ஓரளவிற்கு குறைக்க முடியும்.
4. வரையறுக்கப்பட்ட பொருளாதார வளங்களை கொண்டு பொருளாதாரத்தில் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றக் கூடிய வசதிகளை ஏற்படுத்தல்.
5. மக்களின் வருமான சமமின்மையை குறைத்தலும் சமூக நலன்கள் எல்லோருக்கும் சென்றடைவதனை உறுதிப்படுத்தலும்.
இவ்வாறான தட்டமிடல் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அபிவிருத்தியினை துரிதப்படுத்தல் ஒரு துரிகதியாக பொருளாதார விஸ்த்தீரணம் அபிவிருத்தி என்பனவற்றை அடைய திட்டமிடல் இன்றியமையாதது.
0 comments:
Post a Comment