ADS 468x60

21 September 2019

தமிழர்கள் இந்நாட்டின் தலைவரை தெரிவுசெய்துவிட்டனர்.

ஒரு நாடு வளர வேண்டும் என்றால் நல்ல தலைமை வேண்டும். நல்ல தலைமை வேண்டும் என்றால் சுயநலம் இல்ல தலைவன் வேண்டும்.. அவ்வாறு இல்லாத காரணத்தினால் ஓவ்வொருவரும் தமது வாழ்க்கையைக் கொணடுநடாத்த இன்று பல பிரச்சினைகள் சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பொருளாதார, சமுகஈ சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் என பல சவால்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர்.


இவற்றை எல்லாம் தீர்த்து நல்ல சுவீட்சமான ஒரு எதிர்காலத்தினை காட்டும் கண்ணியமான மக்கள் தலைவனை எமது சமுகம் இன்று எதிர்பார்த்து காத்து நிற்கின்றது. தேர்தல்கள் ஆணையாளரினால் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து எமது மக்கள் இன்றய நிலையில் அவர்களது சமகால எதிர்கால பிரச்சினைகளை தீர்த்து அவர்களது ஒளிமயமான எதிர்காலத்துக்கான ஒருவரின் தெரிவை இன்றே பலர் தீர்மானித்துவிட்டனர்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதுவும் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் யாருடைய உபதேசத்தினை கேட்டு வாக்களிக்கும் ஒரு கீழ் நிலையுள் உள்ள சமுதாயமாக இல்லாமல் ஒரு படி மேலே சென்று அவர்களது உரிமைகளை நன்கறிந்த ஒரு சமுகமாக மாற்றம் பெற்றுவிட்டனர். இது இம்மக்கள மூன்று தசாப்தமாக ஏமாற்றும் அரசியல் தலைவர்களிடம் கற்றுக்கொண்ட படிப்பினையாகவே பார்க்கப்படுகின்றது. இன்று குறிப்பிட்ட தமிழ் தலைமைகள் தங்களை தாங்களாகவே தலைவர்கள் என அழைத்துக்கொள்பவர்களின் சொல்லை வேண்டுதலை எந்த அரசியல்வாதியும் (அரசாங்கத்தில் உள்ள) உள்வாங்கி அவர்கள் சார்ந்த மக்களின் சிறிய பிரச்சினைகளையாவது தீர்த்துவைத்த (ககல்முனை பிரதேச செயலகம்) வரலாற்றில் இடம்பிடிக்காதவர்களாகவே காணப்படுகின்றனர். மாறாக எமது நாட்டின் ஜனாதிபதிக்கே சட்டத்தினால் சவால்விடும், ஆட்சியினையே மாற்றியமைக்கும் அத்தனை சக்தியினையும் பிறருக்காக பயன்படுத்தும் ஒரு அரசியல் காவலர்களை நாம் பெற்றிருக்கின்றோம் என்பது இளைஞர்களின் அதியுச்ச ஆதங்கமாக உள்ளதனை சமுகவலைத்தளத்தில் நாளாந்தம் கண்டுகொண்டிருக்கின்றோம்.

இன்று மக்கள் காணப்படும் சுதந்திர ஊடகத்துறையின் துணையுடன் எவ்வாறான தலைவனை எதிர்பார்க்கின்றனர் என்றால் இந்தநாட்டிற்கு ராப்பகல் பாராமல் சேவை செய்து நல்ல குடிமகனாக இருக்கும் ஒரு உதாரண புருசனையே மக்கள் விரும்புகின்றனர். இவர் ஒழுக்கமிக்க ஒரு சமுகத்தினை உருவாக்கக்கூடிய திராணியுள்ளவராகவும் இருக்கவேண்டும். மேலதிகமாக சமாதானம் சமத்துவம் என்பனவற்றினை பேணுவதனூடாக ஒரு மகிழ்ச்சி மிகுந்த இலங்கைத் திருநாட்டை கட்டியெழுப்பும் உற்சாகமுள்ள ஒருவரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாம் பாரபட்சம் காரணமாக மிகக்குறைந்த மக்கள் அதிக நன்மையைப் பெற்றுக்கொள்ள அதிகமான மக்கள் சிறியளவிலான அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஒரு அவல நிலை காணப்படுகின்றது. ஆகவே இவற்றை அடையாளங்கண்டு அவற்றை இல்லாமற் செய்யும்இ சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பக்கச்சார்பில்லாமல் நடைமுறைப்படுத்தும் நடுநிலையான ஒரு தலைவனை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்துள்ளமையை நாம் பட்டினம் இருந்து பட்டிதொட்டிவரைக்கும் சென்று கேட்டறிந்துகொள்ளலாம்.

எமது மக்கள் பல தலைவர்களையும், அவர்களது போலி வாக்குறுதிகளையும், நாடகங்களையும் பார்த்து பல படிப்பினைகளை தமது வாழ்நாளில் ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர். ஆக இவர்களுககு யாரும் புதிதாய் சென்று வகுப்பெடுக்கும் தேவை இங்கில்லை. இங்கு தெரிவு செய்ய இருக்கின்ற தலைவன் மனிதர்களையும் மனித உரிமைகளையும் நிச்சயித்து எல்லா குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தினையும் உயர்த்திக்கொள்ளக்கூடியவனாக இருப்பதனை அவதானமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே நான் முன்பு கூறியமைக்கு அமைவாக ஒழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கும் திறன் உள்ளவராக இருக்கவேண்டும். எதுக்கெடுத்தாலும் குத்து வெட்டு, பிறரை கௌரவப்படுத்தாத மற்றும் நாட்டின் சட்டம் ஒழுங்கை மதியாத, குறுக்கு வழி, லஞ்சம், ஊழல் பக்கச்சாபு இன்னும் பல ஒரு நாட்டின் ஒழுக்கமின்மைக்கு காரணமாக இருக்கின்றன. ஆகவேதான் இந்த அனைத்து எதிர்மறையான சவால்களையெல்லாம் முறியடிச்சு அவற்றிற்கு எதிராகச் செயற்படும் ஒருத்தரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மக்கள் இன்று நன்குணர்ந்துள்ளனர்.

இவற்றைத் தாண்டி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவன், யாராலும் நிராகரிக்கப்படாதவன், என்றும் நிரந்தரமானவன், கறை படாதவன்,மக்கள் மேல், அக்கரை படுபவன், மக்களின் மனதை மட்டும் கொள்ளையடிப்பவன், நான் என்ற கர்வம் சிறிதும் இன்றி, நாம் என்ற உணர்வு கொண்டவன், இவர்களால் தான் நான், இவர்களுக்காகத் தான் நான் என்றுணர்ந்தவன், சான்றோர் சொல்வழி நடப்பவன், மக்களையும் அவ்வழி நடத்துபவன், முப்போதை(மது,மாது,சூது) துறந்தவன், அறிவினிற் சிறந்தவன், நீதிநெறி கடைப்பிடிப்பவன், என்றும் நீதியை நிலைநாட்டுபவன், தாயை மதிப்பவன், தாய்மொழி வளர்ப்பவன், ஒரு நாட்டின் பொருளாதாரம் மேல்மட்டத்தில் அல்ல கடைக்கோடி மனிதனின் நிலைமையைப் பொறுத்தது என்று அறிந்தவன், நாட்டின் வறுமை ஒழிய திறமை ஓங்க பாடுபடுபவன். இவற்றைத்தாண்டி நாட்டின் சமுக பொருளாதார கலாசார மேம்பாட்டினை நன்கு விளங்கிக்கொண்ட, அறிந்த அவற்றினை கட்டியெழுப்பக்கூடிய அறிவும் அனுபவமும் மற்றும் திறனும் எவருக்கு இருக்கின்றதோ அவரை தலைவராக கொண்டுவர இவர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

எனவே இவற்றை மக்கள் உணர்ந்து வைத்திருந்தால் மாத்திரம் போதாது, எமது அடுத்து வரும் பரம்பரையும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்தியின் அறிவாளனாக இருக்கும் ஒருவரை பார்க்க ஆசைகொண்டுள்ளனர். இதற்காக மக்களது நலன்சார் கொள்கைத்திட்டங்களை தேசிய சர்வதேச அளவில் உருவாக்கி நடைமுறைப்படுத்தும் சாணக்கியனாக இருக்கின்ற ஒருவரே எமது எதிர்பார்ப்பில் உள்ளடக்கப்படனும்.

ஆக இவ்வாறான தகுதியுடைய தலைவர்களை மக்கள் உருவாக்குவதா அல்லது கட்சி அதுபோல் கட்சியின் தலைவர்கள் உருவாக்குவதா? ஏன்பதனை போலியாக சத்தமிடும் தமிழர் சார்பான அனேகம் கட்சிகள் முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே எமது மக்கள் இவ்வாறான தலைவர்களை தெரிவுசெய்ய வழிகாட்டலாமே தவிர வற்புறுத்துதல் ஆகாது அது சாத்தியப்படவும் மாட்டாது.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நிரந்தரத்தீர்வை மக்கள் ஒரு புதிய கோணத்தில் எதிர்பார்து காத்து நிற்கின்றனர். அதனை அவர்கள் அனுபவிக்க விருப்பம் கொண்டுள்ளனர். மக்களே இந்நாட்டின் மன்னர்கள் என்ற கருத்தினை நிருபிக்க காத்துநிற்கின்றனர். இதற்கு சுதந்திரமான ஊடகங்களின் தேவை எதிர்பார்க்கப்படுகின்றது என்பதே எனது அபிப்பிராயமும் கூட.

ஒரு குட்டிக்கதையினைச் சொல்லி இக்கடுரையை நிறைவு செய்கின்றேன். தன் நாட்டிற்கு வருகை புரிந்த மகான் ஒருவரிடம் தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ? என மன்னன் கேட்டான். மகான் உடனே அதற்குப் பதில் சொல்லாமல் களிமண், பஞ்சு. சர்க்கரை மூன்றையும் கொண்டு வரச் சொல்லி தனித் தனியாக ஒவ்வொன்றையும் தண்ணீர் உள்ள கண்ணாடிக் குவளைகளில் போட்டார்.

களிமண்ணோடு இருந்த தண்ணீர் கலங்கிச் சேறானது. பஞ்சு முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது. ஆனால் தண்ணீரின் தன்மையில் எந்தப் பாதிப்பும் இல்லை. சர்க்கரை தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டது. தண்ணீரையும் இனிப்பாக்கியது.  இப்போது மகான்  விளக்கினார்.

'அரசே  தானும் கெட்டு சமூகத்தையும் கெடுப்பவன் களிமண் போன்றவன். பிறரை உறிஞ்சுபவன் பஞ்சு போன்றவன். தன்னையே கரைத்துக்கொண்டு தான் சேரும் பொருளையும் சுவையுள்ளதாக மாற்றும் சர்க்கரை போன்று சமூகத்தை வாழ வைப்பவன்தான் நல்ல தலைவன்'. உணர்ந்து கொண்டான் மன்னன்.

0 comments:

Post a Comment