ADS 468x60

17 September 2019

நல்ல தலைவனை தெரிவுசெய்யும் சுய தீர்மானம் எடுக்கும் சக்தி.

நல்லிணக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முழுமையான தேவையாக இருக்கவேண்டும். நம் நாட்டின் பன்முகத்தன்மையை பல இன, பல மத, மற்றும் பல மொழி தேசமாக உள்ளதை உணர்ந்து அதற்கமைவாக இல்லாது ஒரு நவீனமயமாக்கப்பட்ட, நிலையான, வளமான தேசமாக நமது திறனைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வழி எதுவுமில்லை. . '


இன்று அரசியல் வெளியில் குறுகிய சிந்தனையுள்ளோரால் தீர்மானமிட்டுக் கூறப்படும் சில கருத்துக்களைப் பார்க்கின்றேன். இவர்கள் நமக்கு ஒரு தீர்கமான அரசியல் தலைவர்  தேவை எனக் கூறுகின்றனர். அது உண்மையில் நல்ல விடயம். ஆம் எமது நாட்டுக்கு அவ்வாறான ஒரு தீர்க்கமான அரசியல்வாதி தேவையாக இருக்கின்றார். 

ஆனால் நீதித்துறையை தீர்க்கமாக நீக்குவது, தீர்க்கமாக பிறரை கொலை செய்வது, சட்டத்தின் ஆட்சியை தீர்க்கமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் மற்றும் தண்டனையற்ற கலாச்சாரத்தை வளர்ப்பது, தங்கள் சொந்த நலனுக்காக நிதி மற்றும் கொள்முதல் நடைமுறைகளை தீர்க்கமாக புறக்கணித்தல் மற்றும் தனியார் முதலீட்டை தீர்க்கமாக கையகப்படுத்தும் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் நாட்டின் பொருளாதார நோக்கங்களை அடைந்துகொள்வது முடியாத காரியமே. 

அதற்கு எமது நாட்டில் பல உதாரணங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் எதியோப்பியா, வங்களாதேஸ், வியட்னாம் போன்ற நாடுகளில் ஏனைய நாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தில் அரைவாசியும் எமது நாட்டில் இல்லாமைக்கு இவ்வாறான தலைமைத்துவ வழிநடத்தலே காரணம். 

ஆக நாங்கள் அடிக்கடி உச்சரிக்கும் 'ஜனநாயகம்', சட்டம் ஒழுங்கு இவை உhயி முறையில் இல்லாத பட்சத்தில் எந்தவித நிலையான பொருளாதார, தொழிலுருவாக்கல் முயற்சிகளையும் எட்டிக்கொள்ள முடியாது என்பது நம கண்முன்னே உள்ள படிப்பினைகளாகும். இவை நாட்டிற்கு மாத்திரமல்ல அதற்குள் இருக்கும் மாகாண பிரதேச மாவட்ட மட்ட நடைமுறைக்கும் நன்கு பொருந்தும்.

 இலங்கையைப் பொறுத்தமட்டில் தேநீர் மற்றும் ஆடைகளுக்கு அப்பால் ஏற்றுமதியைப் பன்முகப்படுத்தத் தவறியதற்கு இது ஒரு முக்கிய காரணம். இன்னும் எமது நாடு பழைய தயாரிப்புகளை பழைய சந்தைகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்கிறோம். எங்கள் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையான மற்றும் நம்பிக்கையான ஈடுபாட்டின் அடிப்படையில் இருக்கின்றதா? என ஒருபடி சிந்திக்கவேண்டும். 

மாறாக வெறும் தற்காப்பு மற்றும் பாதுகாப்புவாத தோரணை, குரோத மனப்பாங்கில் இருப்பதனை வரவேற்க முடியாது. இன்று வெஸ்ட்பாலியன் சகாப்தம் முடிந்துவிட்டது. ஆனால் இன்று உலகமயமாக்கல் ஈரா தொடங்கி இருக்கின்றது அதற்குள் நாம் ஒன்றுக்கொன்று சார்ந்தவர்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைந்தவர்கள் என்பது பொருள்;. இவை தவிர ஒரு நாடு மீது தொடுக்கும் மோதல், தனிமைப்படுத்தல் மற்றும் தங்கியிருத்தல் ஆகியவை நிலையான பொருளாதார வளர்ச்சி, அமைதி அல்லது செழிப்பை நம் மக்களுக்கு கொண்டு வராது என்பதே உறுதி.

இவை தவிர இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் ஒரு சீர்திருத்தம் கொண்டுவரவேண்டுமானால், அது மத்திய வங்கியின் அரசியல்மயமாக்கலில் இருந்து விடுவித்து அதற்கு சுதந்திரமாக வேலைசெய்யும் நிலையினை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். இவை நாணயக்கொள்கையில் தனித்துவமான தீர்மானங்களை எடுக்க ஊக்குவிப்பதுடன் இவற்றின் மூலம் தனிநபர் நலம் பாதுகாக்கப்படும் என்பதே உண்மை.

இதை பல கோணத்தில் மக்கள் மத்தியில் எடுத்துணர்த்தும் பொது சக்தி உருவாக்கப்பட்டு, நீதியான ஊடக சேவையின் மூலம் மக்களுக்கு தெழிவுபடுத்தும் உபாயமார்கம் ஊடாகவே மக்களின் நல்ல தலைவனை தெரிவுசெய்யும் சுய தீர்மானம் எடுக்கும் சக்தியை வர்க்கித்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment