ADS 468x60

23 September 2019

அடி வாங்கும் போதும் அகிம்ஷையே மோதும்

சிறியோர் பெரியோர் வலியோர் என்பது
நாட்டினில் எதற்காக – வேண்டாம்
வேற்றுமை நமக்காக

சட்டம் நீதி ஒழுக்கம் எல்லாம் இருப்பது எதற்காக – அதை
சமமாய் மதித்து சகலரும் ஒன்றாய் வாழனும் அதற்காக

எமெக்கென களத்தில் எழுச்சி கொண்டு எழுவது எதற்காக
தர்மத்தை மதிக்கும் தமிழர்கள் எங்கள் உரிமை அதற்காக

மனு நீதிச் சோழன் அவன் வழி வந்தோம்
மகன் என்ற போதும் மனுக் காத்து நின்றான்
பகை வென்ற போதும் பழி தாங்கி நின்றோம்
பலம் ஒன்று தோன்றி இனம் வெல்லும் மீண்டும்

நீதி என்பதை மதிக்கும் போது தர்மம் தலை காக்கும்
நேர்மை ஒன்றையே உயிராய் மதித்தால்
உலகம் தலை வணங்கும்

மதங் கொண்டு சீறும் மனங் கொண்ட யாரும்
வளம் கொண்டு வாழும் வரலாறு இல்லை
அடி வாங்கும் போதும் அகிம்ஷையே மோதும்
அளவின்றிப் போனால் மறம் கொண்டு மீறும்

சீலம் சொன்ன கௌதம புத்தர் சீடர்கள் இவர் தானா
சிறுமையை எண்ணி சிரமது குனிந்து
அழுகிது போதி மரம்



0 comments:

Post a Comment