ADS 468x60

22 January 2021

கொவிட்-19 வாசனை நுகர்வில் இழப்பை ஏற்படுத்துமா!

அண்மைய தசாப்தத்தங்களில் மிகக் கொடிய நோயாக உருவெடுத்திருக்கும் கொவிட்-19 உலகநாடுகளை ஒன்றும் செய்ய முடியாமல் உறையவைத்துள்ளது. இதன் தாக்கம் புதிது புதிதான பாதிப்புக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கொவிட் -19 தாக்கத்தின் அச்சுறுத்தலைக் குறைத்து, இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இலங்கை உறுதிப்படுத்தும் நம்பிக்கையுடன் புத்தாண்டு மலர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு குறைந்துபோன கவலைகளை புதுப்பித்து மேலும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்மாதிரியாக கொவிட்-19 க்கு எதிரான போரைத் தொடங்கியுள்ள இலங்கை, அரசியல் மற்றும் சுகாதாரத் துறை தலைவர்களிடமிருந்து சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் நபர்களை கொண்டிருத்தல்; மற்றும் சமூக இடைவெளி தூரத்தை பராமரித்தல் ஆகியவற்றிற்கான அறிவுறுத்தல் குறைந்து வருவதனால் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனால், அதன் ஆரம்பகால வெற்றிகளையும் தியாகத்தையும் பின்னுக்குத்தள்ளும் அபாயத்தில் உள்ளது எமது நாடு. இதுவரை நமெக்கெல்லாம் ஒரு ஊக்கமளிக்கும் செய்தி என்னவென்றால், எமது நாட்டிற்கு ஒரு தடுப்பூசி வருகிறது என்பதுதான். ஆனால் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் கொழுது அவற்றின் அளவுகள் மிகச் குறைவானவை, இதற்கிடையில் வைரஸ் முன்பை விட வேகமாக பரவிவருகின்றது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தநாட்களில் கொழும்பு அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 நோயாளிகளைப் பதிவுசெய்தது, கொழும்பிலேயே அதிகம் தொற்று உறுதிப்படுத்தப்படும் நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்தின் மையப்பகுதியாக இருப்பதனால் அதன் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. இருப்பினும், இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இலங்கையிலுள்ள நிறுவனங்களும் ஏனைய வேலைத்தளங்களிலும் உள்ள ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கோருகின்றன, அவர்களது பாதுகாப்புக்காக தொழிற்சாலைகளை இயங்காமற் செய்ய முடியாது, அதுபோல் மூடிய பிராந்திய எல்லைகளை மீண்டும் திறக்க இவை ஆதரவளிக்கின்றன. ஆனால் இன்று கோவிட் -19 இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைந்;துள்ளது.

இந்த கொவிட்-19 இன் புதிய வகை தொற்றானது பிரேசில் மற்றும் உலகின் பிற பகுதிகளில் பரவலாக பரவ ஆரம்பித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். சில நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் சிரமத்திற்குள்ளாகி ஒட்ஸிஜன் வழங்கல் செய்யாமல் உள்ளன. இதனால் தத்தமது அன்புக்குரியவர்களுக்கு வீட்டிலேயே தனியார் சிகிச்சையளிக்க அந்நாட்டின்  குடும்பங்கள் விரும்புகின்றன. இந்த மாதிரியான தொடர் பாதிப்பு பற்றிய அறிக்கைகள் உள்நாட்டு; கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தெளிவான அறிவுறுத்தலாக இருக்க வேண்டும், குறிப்பாக இலங்கையின் சுகாதார அமைச்சர் கூட கொவிட்-19 நோய் கண்டறியப்பட்டிருப்பதால், உலகளாவிய ரீதியில் இவ்வாறான தலைப்புச் செய்திகள் அச்சத்தினை உருவாக்குகிறது.

ஒரு புதிய விடயம் என்னவெனில் கொவிட்-19 வாசனை இழப்பை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது, ஆனால் இது காது கேளாமைக்கும் காரணமாக இருப்பது இதுவே முதல் முறை. ஆகவே, ஆபத்து அதிகரிக்கும் போது உயர் மட்ட ஐ.சி.யூ பராமரிப்பு போன்ற பெரிய தொற்றுநோய்களைக் கையாள இலங்கையின் மருத்துவ அமைப்பு இன்னும் போதியதாக இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இதுபோன்ற கடுமையான நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மூடுதல்கள் விதிக்கப்படுவதற்கு இதுவே முழு காரணம். கோவிட்-19 இலிருந்து ஏற்படக்கூடிய வீழ்ச்சியைச் சமாளிக்க சுகாதார முறைமை கணிசமாக மேம்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்பதே யதார்த்த உண்மை. 

உலகில் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசிகள் ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது என்று ஏராளமான ஆராய்ச்சி மற்றும் பிற அறிக்கைகள் எச்சரித்துள்ளன. தொடக்கத்தில், தேவையான 60 விகித தடுப்பூசியின் பயன்பாட்டை அளவிடுவதற்கு மாதங்கள் ஆகும். நமெக்கு தெரிந்தவகையில் சீனா தனது தடுப்பூசிக்கு முன் அங்கு பரவி இருந்த வைரஸை வெல்ல நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தியது. ஆதற்காக இறுக்கமான சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்தியது. இந்த நிலையில் பலவீனமான பொருளாதாரம் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட எமது சிறிய நாடு இந்த சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுதலை புறக்கணிக்க முடியாது, ஏனெனில் இதன் விளைவுகள் விரைவாகவும் தீவிரமாகவும் இருக்கும் என்பது யாம் அறியாதவை இல்லை.

கோவிட்-19 தொற்றுப் பரவலின் அதிகரிப்பு இறுதியில் இறப்புகளின் எண்ணிக்க்கு இணையான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படாமல் தடுக்கப்படலாம் என்று அமெரிக்க தரவுகளில் காட்டப்பட்டுள்ளது. இலங்கை இவ்வளவு காலம் கடுமையாக உழைத்த பின்னர் குறுகிய காலத்தில் அதன் கொள்கைகளை பொருளாதார நலம் நோக்கி எடுத்ததன் விளைவு நாடு பூராகவும் பரவி உள்ளதனால், அந்த கடின உழைப்பே வீண்போகும் நிலை உருவாகியுள்ளது.


0 comments:

Post a Comment