ADS 468x60

02 January 2021

மட்டக்களப்பின் கிராமப்புறப் பெண்ணகளின் எதிர்பார்ப்பு நிறைவேற!

நமது கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தங்களது தினசரி பயன்பாட்டிற்காக அவர்களது மொத்த குடும்பங்களுக்குமான உணவு, நீர் மற்றும் அடுப்பெரிப்பதற்கான விறகுகளை சேமிப்பதில் பெரும்பாலும் அவர்களே பொறுப்பாக இருந்து கவனிக்கின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பின் வறண்ட பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் அடிக்கடி வறட்சி நிலவுவதால், பெண்கள் சுத்தமான நீரினைப் பெற்றுக்கொள்ள அதிக தூரம் பயணிக்க வேண்டும், இது இன்னும் அவர்களது வேலையை சிரமத்துக்குள்ளாக்கி அவர்களது நேரசூசியை இன்னும் இறுக்கிவிடுகின்றது.

இவ்வாறான சிரமங்களால் அவர்கள், மேலும் வருமானம் ஈட்டவோ, கல்வி பெறவோ அல்லது ஓய்வு பெறவோ அவர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தை அளிக்கிறது. திடீர் என ஏதாவது அனர்த்தங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அந்த அவசரகாலத்தில் வருமானத்தைப் பெறுவதற்காக அவர்களுக்கு என விற்கக்கூடிய நிலம் அல்லது பிற சொத்துக்கள் சொந்தமாக இல்லாததால் பெண்கள் எமது பகுதிகளில் இயற்கை பேரழிவிலிருந்து மீள்வது கடினமானதாக உள்ளது. காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில், பெண்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக, முடிவெடுப்பவர்களாக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பாளர்களாக பங்கேற்க வாய்ப்பளிப்பதன் மூலம், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

மட்டக்களப்பினைப் பொறுத்தவரை அதிக சதவீதம் பெரிய பதவிகளில் பெண்களே இருக்கின்ற இந்த நிலையில் அவர்களுக்கான மீட்சிபற்றிய கரிசனை அதற்கான சாதகமான திட்டமிடல்கள் இன்னும் அதிகரிக்கப்படுவது இந்த புதிய தசாப்தத்தின் புதிய மைற்கல்லாக இருக்கலாமல்லவா!

என்னைப் பொறுத்தவரையில் கல்விப்புலத்தில் உள்ளவர்கள் இதற்கான கனதியான விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய இடைவெளி இன்னும் அப்படியே இருக்கின்றது. அதற்கான மன்றங்களை புதுப்பித்து உண்மைத்தன்மையுடன் அவர்களை கரிசனைகொள்ளும் ஒரு அமைப்பியலின் தேவை இன்னும் உணரப்படவில்லையா? என்பது எனது கவலை கலந்த கேள்வி.

ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். -ஜவஹர்லால் நேரு
உங்கள் #ST_Seelan

0 comments:

Post a Comment